பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 12 ஏப்ரல், 2014

இனி தண்ணீர் மூலம் செல்போன் பேட்டரி சார்ஜ் செய்யலாம் ..



சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கேடிஎச் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பல்கலைக்கழகத்தில் செல்போன் பேட்டரிகளுக்கு சார்ஜ் அளிக்கும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்ஒய்எப்சி பவர் டிரெக் (மைஎப்சி) என்று பெயரிடப்பட்டுள்ளது. சிறிது தண்ணீரை ஊற்றினாலே செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் அளிக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இனி செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.



மைஎப்சி கருவியில் புதுப்பிக்கதக்க உலோக வட்டத்தட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. செல்போன் பேட்டரியில் சார்ஜ் இல்லாதபோது, இந்த கருவியில் சிறிது தண்ணீரை ஊற்றி அதை யூஎஸ்பி வயர் மூலம் செல்போனில் இணைக்க வேண்டும்.

கருவியில் நல்ல தண்ணீர் அல்லது கடல் தண்ணீர் என்று எந்த தண்ணீரையும் ஊற்றலாம். மேலும், அது சுத்தமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை(நல்லவேல ,கரண்ட் இருக்கமாடேங்குதே  நமக்கு இது ரொம்ப வசதியா இருக்கும்னு ஒரு பக்கம் நினச்சாலும்..அட !!தண்ணியையே காசு கொடுத்துதானே வாங்குறோம்னு நினைக்குறவங்க வயித்துல பால வாத்தாங்க போங்க.. ). சாக்கடை நீரையும் ஊற்றலாம். கருவியில் ஊற்றப்படும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் பிரிக்கப்பட்டு, பின்னர் அது வேதிவினை மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு மின்சாரமாக மாற்றப்படுகிறது.

இந்த மின்சாரம் அப்படியே செல்போன் பேட்டரிக்கு செல்லும். இதன் மூலம் ஒரு ஐபோனுக்கு 25 முதல் 100 சதவீதம் வரை சில நிமிடங்களில் சார்ஜ் அளிக்க முடியும். சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் பெறுவதை காட்டிலும் மிக விரைவாக இதில் இருந்து மின்சாரத்தை பெற முடியும். லேப்டாப்புக்கு திரவ பேட்டரியை கண்டுபிடிக்கும் முதல் முயற்சியாக மைஎப்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக