பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

குண்டு துளைக்காத ஆடைகள் எப்படி தயாரிக்குறாங்க?

துப்பாக்கி குண்டு எப்படி ஒருவரை தாக்குது ? அந்த குண்டோட முனைல ஒரு பிரம்மாண்டமான விசை ஒரு சிறிய பரப்பில் செலுத்தப்படுது.அந்த விசைதான் சேதம் ஏற்படுத்துது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில, ஆஸ்திரேலியாவுல, ஒரு சிறிய போராளிக் குழுவுக்கும், போலீசாருக்குமிடையே ஒரு ஹோட்டல்ல கடும் துப்பாக்கிச் சண்டைநடந்துருக்கு . அப்போ போராளிகள், விவசாயிகள் நிலத்தை உழுவதற்காகப் பயன்படுத்துற கொழுக்களைக் கோர்த்துத் தயாரிக்கப்பட்ட புல்லட் ப்ரூஃப் ஆடைகளை அணிந்திருந்தாங்களாம் .

அந்த ஆடையோட எடை 44 கிலோ. இது ரொம்ப கனமா இருந்ததால ஒரே தகடாகவச்சு எடையைக் குறைக்கமுயற்சிப்பண்ணியிருக்காங்க . அப்போ 18 கிலோஆனது . ஒரே தகடுக்குப் பதில் செதில் செதிலாக அடுக்கினா என்னனு யோசனைவரஅப்படியே செஞ்சிருக்காங்க.அப்பவும் 5 கிலோவுக்கு மேல குறைக்க முடியாம போயிருக்கு..



1881-ஆம் ஆண்டு அமெரிக்காவுலஇருக்குற டோம்ஸ்டோன் என்ற ஊருல  ஒரு வியாபாரிக்கும் சூதாடிக்குமிடையே நடந்த வாக்குவாதம் தடித்து துப்பாக்கிச் சண்டையாக மாறியிருக்கு . மார்பில் குண்டு பாய்ந்த நிலையில சூதாடி, டாக்டர்கிட்ட கொண்டுபோயிருக்காங்க . உடம்புல  குண்டு பாஞ்சிருக்கு . ஆனா வெளியே ஒரு துளி ரத்தம் கூட  இல்ல. ஆச்சரியப்பட்டுப் போன டாக்டர் அறுவைச் சிகிச்சை செஞ்சு  குண்டை முழுமையா வெளியே எடுத்துட்டார் . சட்டைப் பையிலவச்சிருந்த பட்டு கர்ச்சீப்பின் இழைகள் அந்தக் குண்டைச் சுற்றியிருக்குறதை பாத்துருக்கார்  . அந்த ஊருல  மறுபடியும் ஒரு சண்டை. இந்த முறை காயங்களுடன் ஒரு போலீஸ்காரரைத் தூக்கி வந்துருக்காங்க . தொப்பியையும் தாண்டி குண்டு அவர் தலையைத் தாக்கியிருந்துருக்கு . ஆனா கழுத்தில் இருந்த பட்டு ஸ்கார்ஃப்பைத் தாண்டி குண்டு உள்ளே போகல. இதையெல்லாம் வச்சு  நெருக்கமா பின்னப்பட்ட பட்டின் இழைகளுக்கு துப்பாக்கிக் குண்டின் வேகத்தைக் குறைக்கும் வலிமை உண்டுனு  டாக்டர் ஒரு கட்டுரை எழுதினாராம் .

இதுக்கு அப்பறம் ரொம்ப காலத்துக்கு  இறுக்கமா நெய்யப்பட்ட பட்டை எழுபது எண்பது வரிசைகளா அடுக்கிச் செய்யப்பட்ட குண்டு தாக்காத ஆடைகளே உருவாக்கப்பட்டுவந்துருக்கு . இப்போது பட்டுக்குப் பதில் கெவ்லார் என்ற செயற்கை இழைகளைக் கொண்டு நெய்யப்பட்ட துணிகளைப் பயன்படுத்துறாங்க. இந்த கெவ்லார் ஒரு பாலிமர். அதாவது நைலான் மாதிரி .நைலான் அறுந்து போகும். இது லேசில் அறாது.

இதை தற்செயலா கண்டுபிடிச்சது  ஒரு பெண் விஞ்ஞானி. அவர் எதையெதையோ கலந்து ஒரு பாலிமரை உருவாக்க முயற்சி செஞ்சப்போ அது சரியாவராம மறுநாள் சுத்தம்செஞ்சப்போ அதைத் தூக்கி வெளியே கொட்டப் போயிருக்கார். கடைசி நிமிஷம் அதை ஒரு டெக்னீஷியன் கிட்ட கொடுத்து நூற்கச்சொல்லிருக்கார். அதுதான் இந்த கெவ்லார்.

                                                               --நன்றி வாரஇதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக