பக்கங்கள் (Pages)

திங்கள், 12 மே, 2014

பயோ கேஸ்

ஜெனரேட்டர்களுக்கு பதிலா பயோ கேஸ் பயன்படுத்தி, இயந்திரங்களை எந்தத் தொந்தரவும் இல்லாமல் இயக்குகிறார் நெல்லை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சலவை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தும் செல்வப்பாண்டி.

"இருபது லட்சம் ரூபாய் செலவானது. மத்திய அரசின் மானியம் 40 சதவிகிதம். கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் பயோ கேஸ் மூலம் ஜெனரேட்டர்களை (400 கனமீட்டர்) இயக்கத் தொடங்கி, இதன் மூலம் 125 கிலோவாட் திறன் கொண்ட 2 ஜெனரேட்டர்கள் 10 மணி நேரமும், 62.5 கிலோவாட் திறன் கொண்ட ஒரு ஜெனரேட்டர் 8 மணி நேரமும் இயங்குது . ஒரு நாளைக்கு 1,000 கிலோவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி ஆகுது. எனவே, 24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்குது.

மணிக்கு 14 லிட்டர் டீசலில் இயங்கி வந்த 125 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டர், தற்போது 3 லிட்டர் டீசலிலும், மணிக்கு 8 லிட்டர் டீசலில் இயங்கி வந்த 62.5 கிலோவாட் திறன் கொண்ட ஜெனரேட்டர், தற்போது 4 லிட்டர் டீசலிலும் இயங்குது. இதனால், ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய்க்கும் அதிகமாக லாபம் கிடைக்குது . தற்போது இவ்வாயுவை சிலிண்டரில் அடைத்து, தொழிற்சாலை வாகனங்களையும் இயக்குறோம். மூன்று வாகனங்கள் பயோ கேஸ் மூலம் இயங்குது. ஒரு சிலிண்டரில் (2 கிலோ) 250 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். ஒரு லிட்டர் டீசலில் 4 கி.மீ., வரை இயங்கிய வாகனங்கள், பயோ கேஸில் 8 கி.மீ., தூரத்துக்கு போகும்.. ஜெனரேட்டருக்கு டீசல் பயன்படுத்துவதில் இருந்து 80 சதவிகிதமும், வாகனங்களுக்கு டீசல் பயன்படுத்துவதில் இருந்து, 50 சதவிகிதமும் சேமிக்கிறோம்.



பயோ கேஸ் கூடம் அமைக்க 6 சென்ட் இருந்தால் போதும். நாளொன்றுக்கு ஒரு யூனிட் சாணம் மற்றும் 30,000 லிட்டர் நெல் ஊறல் தண்ணீர் தேவை" என்கிறார் செல்வப்பாண்டி.

(சமீபத்தில் மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சகத்தின் இயக்குநரும், விஞ்ஞானியுமான டாக்டர். கிரிதர், இத்தொழிற் சாலையை நேரில் பார்வையிட்டார். செல்வப்பாண்டியின் தொழிற்சாலைக்கு பயோ கேஸ் அமைத்துக் கொடுத்த கிரேஷ் லயன் பயோ எனர்ஜி நிறுவனம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டனத்தம் என்கிற ஊரில், மகளிர் சுகாதார வளாகத்திலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து, 15 தெரு விளக்குகளை எரிய வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.)

செல்வப்பாண்டியின் தொடர்புக்கு : 94433 70098

                                                          --வார இதழிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக