பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 10 ஜூன், 2014

கீரைகள்

திருநின்றவூர் (திருவள்ளூர் மாவட்டம்) அருகே பெரியபாளையம் செல்லும் வழியில் பாக்கம் எனும் கிராமத்தில் ;நல்ல கீரை இயற்கை விவசாயப் பண்ணை' உள்ளது . ஜெகன்னாதன், கௌதம், திருமலை, ராம், விசு, சிவக்குமார், அறிவரசன், சலோமி, ஏசுதாஸ், திருமலை, சாம், புனிதா, ராதாகிருஷ்ணன், பிரபாகரன் உள்ள 14 பேரின் உழைப்பில் பண்ணை இயங்குகிறது. இதில் 4 பேர் முழு நேர ஊழியர்கள். மீதமுள்ளவர்கள் வார இறுதி நாட்களில் இவர்களுடன் கூடிப் பயிர் செய்கின்றனர்.

இயற்கை முறைல கீரை பயிர் செய்றாங்க இவங்க.கீரை மட்டும் இல்லாம முருங்கை, வெண்டை, அவரை, கொத்தவரை, பூசணி, புடலை, சுரை, தர்பூசணி, பீர்க்கங்காய், பாகல், மிதிபாகல், தக்காளி, கத்தரி, மிளகாய்,தூய மல்லி, சீரகச் சம்பா, காட்டு யானம், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிடுறாங்கலாம்.இப்போது 20 வகையான கீரைகளை இங்கு பயிரிடுறாங்கலாம். அதை 45 வகை வரை அதிகரிக்க வேண்டும். தவிர, மூலிகைகளையும் பயிரிடணும்னு நினைக்குறோம்னு சொல்றாங்க இந்த பண்ணையை நடத்துறவங்க.




தொடர்புக்கு: ஜெகன் - 99626 11767, கௌதம் - 98406 14128, திருமலை - 98849 62533

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக