ரூபாய் நோட்டுகள் அதிகமானால் கூட சிரமப்பட்டு எண்ணி விடலாம்.
ஆனால் சில்லறைகள் சேர்ந்து விட்டால் எண்ணும் முன்பாக தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
`டிஜிட்டல் கவுண்டிங் ஜார்` இந்த பிரச்சினையை தீர்க்கிறது.
சாதாரண உண்டியலை விட கூடுதலாக இதன் மூடியில் ஒரு டிஜிட்டல் மீட்டர் இருக்கிறது.
இது உண்டியல் துளை வழியே காசுபோடும்போது அது தானாகவே கணக்கிட்டு திரையில் இருப்புத் தொகையைக் காட்டி விடும்.
தேவைப்பட்டால் பணத்தை எடுத்துவிட்டு `ரீசெட்` செய்து சேமிக்கலாம். இது இயங்க இரண்டு சிறிய பேட்டரிகள் தேவை.இந்த ஜார், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாணயங்களை மட்டுமே கணக்கிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக