பக்கங்கள் (Pages)

திங்கள், 23 ஜூன், 2014

விக்கலுக்கு காரணம் என்ன ?

நமக்கு பொதுவா சாப்பிடும் போது விக்கல் ஏற்படும் ..இது எதனால ஏற்படுதுனு தெரியுமா ?


ஒரு ஒரு வேளையும் நாம சாப்பிட குறைஞ்சது 20 நிமிஷமாவது எடுத்துக்கணும்.அப்போதான் நம்மோட உணவுப்பாதை நல்லபடியா வேலை செய்ய அது  உதவியா இருக்கும்.

நாம அவசர அவசரமா சாப்பிடும் போது வயிற்ருக்கும் நெஞ்சுக்கும் இடையில பாதுகாப்பா இருக்குற ஜவ்வு (டையாஃபர்ம்) மேல்பக்கமா வளைஞ்சு ஒட்டிக்கும்.

இந்த நிலை சில சமயம் வேற காரணங்களால்கூட ஏற்படலாம்.இதன் காரணமாக உடம்புல ஏற்படுற இயல்பான செயலையும் அதனால உண்டாகுற சத்தத்தையும் விக்கல்னு சொல்றோம்.

விக்கலை நிறுத்த உடனடியா தண்ணீர்/எதாவது பானத்தை  சீராக் குடிக்கணும் .மூச்சை முழுமையா இழுத்து மெதுவா விடனும் .


தொடர்ந்து 60 ஆண்டுகாலம் விக்கலால  சிரமப்பட்டவர் இருக்காறாம்.அவர் பேர் சார்லஸ்.அதேபோல இங்கிலாந்துல 24 வருஷமா தொடர்ந்து விக்கலால சிரமப்பட்டவரும் இருக்காறாம்.

அதனால தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டு மூணு  மணி நேரம் விக்கல் இருந்தா உடனடியா டாக்டர் கிட்ட போய் சரி பண்ணிடனும்னு சொல்றாங்க .

1 கருத்து: