பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 26 ஜூன், 2014

மகாபாரதத்தில் ஒரு காட்சி ...

மகாபாரதத்தில் ஒரு காட்சி ...


பாரத போருக்கு உலகத்திலையே சிறந்த போர் படையை வைத்திருக்கும் கிருஷ்ணர் கிட்ட உதவி கேட்க அர்ஜுனனும் துரியோதனனும் நினைக்குறாங்க.அப்போ பலராமர் அர்ஜுனனிடமும் துரியோதனனிடமும் கிருஷ்ணனை போய் பாருங்க..அவருடைய பார்வை யார் மேல முதல்ல படுதோ அவர் கேக்குறதை தவறாமல் நிறைவேத்துவார்னு சொல்லி அனுப்புறார்..

முதல் ஆளாக துரியோதனன் கிருஷ்ணரை பாக்க போய்டுறார் .கிருஷ்ணன் நித்திரையில் இருக்க அவர் தலைக்கு பக்கத்துல இருக்குற இரு இருக்கைகளில் ஒன்னுல உக்கார்ந்து கிருஷ்ணர் கண் திறக்குறதுக்காக காத்திருக்கார்.

அடுத்து வரும் அர்ஜுனன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் கிருஷ்ணரை பாக்குறார்..அவர் தலைக்கு பக்கத்துல ஒரு இருக்கை காலியா இருக்குறதையும் பார்க்குறார்.ஆனா அதுல உட்காராமல் கிருஷ்ணரின் பாதங்களுக்கு பக்கத்துல கீழ உக்கார்ந்து கிருஷ்ணர் கண் திறக்குறதுக்காக காத்திருக்கார்.




கிருஷ்ணரின் பாதம் அர்ஜுனன் மேல தவறுதலா பட்டு உடனே கிருஷ்ணர் கண் முழிக்குறார்..அப்போ அவர் முதல்ல பாக்குறது அர்ஜுனனை.

"பார்த்தா !! ஏன் நிலத்தில் அமர்ந்துள்ளாய்"னு  கேக்குறதுக்கு அர்ஜுனன், "யாசிப்பவன் நிலத்தில் அமர்ந்துதானே யாசிக்கவேண்டும்"னு பதில் சொல்றார்.பின்னர் யுவராஜன் துரியோதனனும் உங்களுக்காக காத்திருக்கிறார்னு  சொல்றார்.

"அப்படியா!! துரியோதனா நீ என் சிரத்தில அமர்ந்ததால் உன்னை கவனிக்கவில்லை ..மன்னித்துவிடு"னு  சொல்றார் கிருஷ்ணர்.

"நான் சிரத்தில அமரவில்லை ..சிரத்திற்கு அருகில் அமர்திருந்தேன்.நான் தங்களிடம் யாசகம் பெற வந்துள்ளேன்"னு துரியோதனன் சொல்றார்.மேலும் யார் முதல்ல வராங்களோ அவங்களுக்கு நீங்க கேட்டதை கொடுப்பீங்கன்னு வாக்கு கொடுத்தீங்களேனு துரியோதனன் கேட்க...

கிருஷ்ணர், "முதல்ல வரவங்களுக்கு நான் அவங்க கேக்குறதை கொடுப்பேன்னு சொல்ல.என்னுடைய பார்வை யார் மேல முதல்ல படுதோ அவங்க கேக்குறதை நான் கொடுப்பேன்னு தான் சொன்னேன்.நீங்க ரெண்டுபேரும் வரும்போது நான் நித்திரையில் தான் இருந்தேன்.. நீ முதல்ல வந்திருக்கலாம் ஆனா அர்ஜுனன் அமர்திருந்த ஸ்தானமானது நான்  நித்திரையில் இருந்து எழுந்ததும் முதல்ல அவனை பார்க்க வைத்தது "னு பதில் சொல்றார்..

அதாவது நமக்கு ஒரு உதவி ,யாசகம் அல்லது நமக்கு ஒன்னு வேணும்னா தலைக்கனத்தோடவோ அல்லது அதிகாரத்தோடவோ அதை  அவங்ககிட்ட      (இறைவனிடமும் தான்)  கேக்காம பணிவோட ஒரு தாழ்மையோட கேட்கனும்னு அழகா எடுத்து சொல்ற காட்சி..என் மனசுக்கு ரொம்ப பிடிச்ச காட்சி..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக