பக்கங்கள் (Pages)

செவ்வாய், 15 ஜூலை, 2014

கணினியில் மின்சாரத்தை மிச்சப்படுத்த !!!

சில சமயம் , சிஸ்டம்ல வேல செஞ்சுகிட்டே இருப்போம் வேற ஏதாவது வேலை காரணாமா அப்படியே எழுந்து போய்டுவோம்..திரும்ப வர சில பல நேரம் ஆகும்னு வையுங்க .சிஸ்டமை Shut Down செய்யாமலே அப்டியே வைக்குறதால மின்சாரம் வீணா செலவு ஆகிட்டு இருக்கும் ( நமக்கு தான் மின்சாரமே இல்லையேனுலாம் சொல்லக்கூடாது..என்னைக்காவது சரியாகாது ?நோ ...நோ .. நம்பிக்கை தளரவிடக்கூடாது)..இது மாதிரி சமயத்துல சிஸ்டம் ஆன்லையே இருந்தாலும் மின்சாரம் செலவாகாம இருக்க சில settings செஞ்சா போதும் .அது என்னனு பாப்போம்..

விண்டோஸ் XP சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தா...

1. டெஸ்க்டொப்ல ரைட் கிளிக் செஞ்சு  Properties செலக்ட் பண்ணுங்க .




2. இப்போ ஒரு டயலாக் பாக்ஸ் வரும் அதுல  Screen Saver என்னும் டேபைசெலக்ட் பண்ணுங்க . அடுத்து Power பட்டனைத்செலக்ட் பண்ணுங்க . பின்னர் Hibernate டேப்ல கிளிக்செஞ்சு Enable Hibernation -ஐ டிக்பண்ணுங்க .



3.அடுத்து Apply பட்டனில் கிளிக்பண்ணுங்க .இப்போ Power Schemes டேப்ல  Standby மற்றும் Hibernate ஆப்ஷன்கள் இருக்கும் அதுல நமக்கு தேவையான நேரத்தை(நிமிஷத்தை)கொடுத்தா போதும்..


விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தா...

1.Start கிளிக் செய்து Power என டைப் பண்ணுங்க . அடுத்து Power Options செலக்ட் பண்ணுங்க .

2. இடதுபக்கம்  Choose when to turn off the display என்பதில் கிளிக் பண்ணுங்க .இங்க Sleep ஆப்ஷன் இருக்கும்.

3. அடுத்து Change advanced power settings  கிளிக் பண்ணுங்க   “Sleep after” மற்றும் “Hibernate after” ஆகிய ஆப்ஷன்களைப் பெற Sleep பிரிவை Expand  பண்ணுங்க . தேவையான நேரத்தை(நிமிஷத்தை)கொடுத்தா போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக