பக்கங்கள் (Pages)

வெள்ளி, 18 ஜூலை, 2014

சென்னைல ராஜஸ்தான்


 சென்னையில இருந்து 30 கி.மீ. தூரத்துலஇருக்குற தண்டலம் அருகே 15 ஏக்கர் பரப்பளவுல உருவாக்கப்பட்டுள்ள சோக்கி தானி (CHOKI DHANI) என்கிற அழகிய கிராமம் கட்டடக் கலை, கலாச்சாரம், உணவு, கிராமியக் கலைகள்னு எல்லாத்துலையும் ராஜஸ்தானை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துற மாதிரி இருக்காம் .

இந்தியாவுலையே  முதன்முறையா, ராஜஸ்தான் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் விதமாக இந்தக் கிராமம் உருவாக்கப்பட்ருக்காம் . புதுமையான இந்த முயற்சிக்கு ராஜஸ்தான் சுற்றுலாத் துறையின் சிறப்பு விருதும் கிடைச்சுருக்காம் .


பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூர் போற வழியில தண்டலத்துல  இறங்கி, பிரதான சாலையிலிருந்து பிரியும் மண் சாலைல அரை கி.மீ.தூரம் நடந்தா
இந்த அழகிய கிராமத்தை அடையலாம் .

பெரியவங்களுக்கு 550 ரூபாய். குழந்தைகளுக்கு 350 ரூபாய் கட்டணம். ஒரு நபருக்கு 100 ரூபாய்க்கான இலவச கூப்பன் தருகிறார்கள். பொழுதுபோக்குப் பூங்காக்களில் இருப்பதுபோல பலவித விளையாட்டுக்கள் இங்க இருக்காம்.ஒட்டகச் சவாரி, குதிரை சவாரி, மாட்டு வண்டிப் பயணம்,நாட்டுப்புற நடனம், பாடல்கள், மெஹந்தி, மேஜிக், படகுச் சவாரியும் இருக்காம். தினமும் மாலை 4 மணியிலிருந்து 11 மணிவரை திறந்திருக்கும் சோக்கி தானியில் மாலை 5 மணிக்கு அருமையான தேநீரும், ராஜஸ்தான் சிற்றுண்டியும் தராங்களாம் .எட்டு மணிக்கு சாப்பிட காய்கறிகள், ரொட்டிகள், இனிப்புகள், அப்பளங்கள், ஊறுகாய்கள் என்று பல வகையான ராஜஸ்தானி ஸ்டைல் உணவுகள் தயாராக இருக்குமாம். 

தொடர்புக்கு: 90032 23695, 95970 88323

                                                   --நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக