பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஆன்மீக கேள்வி பதில்

முருகனை வணங்க நாலாயிரம் கண்வேண்டும் எனப்பாடியவர்  - அருணகிரிநாதர் 

பூலோக திருப்பதிகள் எத்தனை - 106

சிவனுக்குரிய சாத்திர நூல்களைப் பாடியவர்கள்  - சந்தானக் குரவர்கள்

கமலாலயம் என்னும் தெப்பக்குளம் உள்ள தலம் - திருவாரூர் 

வால்மீகிக்கு ராமனின் வரலாற்றை கூறியவர் - நாரதர் 

மாய மானாக வந்த மாரீசனின் தாய் - தாடகை 

கும்பகோணத்தை தமிழில் எப்படி குறிப்பிடுவர் - குடந்தை , குடமூக்கு

ஆடும்,யானையும் சிவனை வழிபட்ட தலம் - திருவாடானை

விஷ்ணுவுக்குரிய துவாதச (12 எழுத்து) மந்திரம் - ஓம் நமோ பகவதே வாசுதேவாய 

குமாரசம்பவம் என்னும் காவியத்தை எழுதியவர்  - காளிதாசர் 

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கா..கா…காக்கா



காகங்கள், கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனம். காகங்களில் 40 வகைகள் உள்ளன.

காகங்கள் எந்தப் பருவ நிலையிலும் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழக்கூடிய தகவமைப்பு பெற்றவை. அண்டார்டிகாவில் மட்டும் காகம் காணப்படுவதில்லை.

ஒரு காகத்திற்கு தினமும் சராசரியாக 280 கிராம் உணவு தேவை.

காகங்கள் புத்திக்கூர்மை உடையவை. காகத்தின் அளவில் உள்ள உயிரினங்களோடு காகத்தை ஒப்பிடும்போது இதனுடைய மூளையே பெரிது.

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஃபேஸ்புக்கின் புகைப்படங்கள் மற்றும் ஸ்டேட்ஸ்களை நகலெடுக்க

உங்களுடைய facebook கணக்குல இருக்குற எல்லா புகைப்படங்களையும் மற்றும் டேட்டாக்களையும் அதாவது நீங்க போஸ்ட் செய்த ஸ்டேட்ஸ்களையும் Copy செய்யணுமா?

1. உங்க  ஃபேஸ்புக் கணக்கை திறந்துக்கோங்க ..

2. அது Settings போங்க..

3.அதுல "DownloadCopy " -னு இருக்கும் .அதை செலக்ட் பண்ணுங்க..இப்போ டவுன்லோட் செய்யுறதுக்கான ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.

4. அதுல "Start My Archive " பட்டன் செலக்ட் பண்ணுங்க.இப்போ உங்களுடைய ஃபைல் நீங்க ஃபேஸ்புக் கணக்கில் கொடுத்துருக்கும் மெயில் முகவரிக்கு வந்துடும்.


வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

3 கிலோ எடை கொண்ட சைக்கிள் ..

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இதற்குத் தீர்வு ஏற்படும் வகையில் ஒரு புதிய வகை சைக்கிளை கண்டுபிடித்துள்ளார். இந்த சைக்கிளை நாம் பயன்படுத்திய பிறகு அப்படியே மடக்கி, நம்முடைய கைப்பையின் உள்ளே வைத்துக்கொள்ளலாம்.


ஜார்ஜ் மாபே (George Mabey) என்ற 22 வயது மாணவர் ஒருவர், அலுமினியத்தால் ஒரு மோட்டார் சைக்கிளை தயாரித்திருக்கிறார். அதன் மொத்த எடையே 3 கிலோதான். இந்த சைக்கிளை உபயோகித்துவிட்டு, அதன்பின்னர் அதைச் சுருட்டி கைப்பையில் வைத்துக்கொள்ளலாம். மிக விரைவில் இந்தப் புதிய சைக்கிள் விற்பனைக்கு வரவுள்ளது.

லண்டனில் உள்ள London South Bank University என்ற பல்கலைக்கழகத்தில் காட்சிக்காகவும், டெமோ செய்து காட்டுவதற்காகவும் இந்த சைக்கிள் தற்போது வைக்கப்பட்டுள்ளது. 35 அங்குல உயரமும், 11.7 அங்குல அகலமும் உள்ள இந்த சைக்கிள் சராசரி எடையுள்ள ஒருவரை சுமந்து செல்லும் திறன் உடையது. இந்தப் புதிய வகை மோட்டார் சைக்கிளுக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 20 ஆகஸ்ட், 2014

நாடுகளின் பழைய பெயர்களும் புதுப் பெயர்களும்

பழைய பெயர் - > புதுப்பெயர்



டச்சு கயானா — சுரினாம்

அபிசீனியா —எத்தியோப்பியா

கோல்டு கோஸ்ட் — கானா

தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா

வட ரொடீஸியா — ஜாம்பியா

தென் ரொடீஸியா — ஜிம்பாப்வே

டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா

கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட்

சாயிர் — காங்கோ

சோவியத்யூனியன் — ரஷ்யா

பர்மா — மியான்மர்

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

மண்பானை தண்ணீரின் குளிர்ச்சுக்கு காரணம் என்ன?


தண்ணியோட கொதிநிலை 100 டிகிரி செல்சியஸை அடையறப்ப ஆவியாகுது. ஆனால், சாதாரண வெப்பநிலையிலும் நீர் ஆவியாகிட்டுதானே இருக்கு. கடல், ஆறு, ஏரி, குளங்களோட மேல்மட்டத்துல உள்ள தண்ணி சாதாரண வெப்பநிலையில், அதன் அளவுக்கு ஏற்ப தொடர்ந்து ஆவியாகிட்டே இருக்கும். அதனாலதான் நமக்கு மழை கிடைக்குது. அதே தண்ணியை பாத்திரத்துல ஊத்தி கொதிக்க வைச்சா தண்ணியோட வெப்ப நிலை உயரும்போது, ரொம்ப வேகமா ஆவியாகும். சாதாரண வெப்பநிலைல அதே ஆவியாதல் மெதுவா நடந்துகிட்டே இருக்கும்.

இப்படி சாதாரண வெப்ப நிலைல எப்போதும் ஆவியாதல் நடக்கிறதாலதான் துவைச்சுப் போடுற ஈரத் துணிகளும் காய்கின்றன. கை, கால்களை கழுவிய பின்னாடி துடைக்காவிட்டாலும்கூட கொஞ்ச நேரத்துல கை, கால்கள் உலர்ந்து போவதற்கும் இதுதான் காரணம்.

புதன், 13 ஆகஸ்ட், 2014

கூகுள் கார்



 கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரைச் செலுத்த ஓட்டுநர் தேவையில்லை. அது தானாகவே ஓடும். ஓட்டுநருக்கென்ற இருக்கையே அதில் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனெனில் அதில் ஸ்டியரிங், க்ளட்ச், ப்ரேக் போன்ற சாதாரணமாகக் காரில் காணப்படும் எந்த உபகரணங்களும் இல்லை. ஆனாலும் அது ஓடும்.நாம் செல்ல வேண்டிய இடத்தில்நம்மை கொண்டுசேர்க்கும்.

இது மின் சக்தியில் இயங்குகிறது. கூகுள் மேப் வழிகாட்டுகிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதாமல் இருக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் உதவுகின்றன.இதில் இரண்டு பேர் அமரலாம்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பாதங்களைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜன்

சர்க்கரை நோயாளிகளின் பாதங்களில் ஏற்படும் புண் (foot ulcer) அல்லது கால்களில் ஏற்படும் காயம் அவ்வளவு சீக்கிரத்தில் ஆறுவதில்லை. பல நேரங்களில் இது வேறு பல சிக்கல்களுக்கும் வழி வகுக்கிறது. சுத்தமான ஆக்சிஜனை செலுத்தும் இந்த  ஹைபர்பேரிக் ஆக்சிஜன் தெரபி (hyperbaric oxygen therapy HBOT) என்கிற புதிய முறை  மூலம் பாதங்களின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்க முடியும்" என்கிறார், சென்னை ராயபுரம் எம்.வி. டயாபடிக் மையத்தின் இயக்குநர் டாக்டர். விஜய் விஸ்வநாதன்.

மேலும் புண், காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த ஓட்டம் குறைந்து ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காதபோது, காயங்கள் ஆறுவது தாமதமாகிறது. சுத்தமான ஆக்சிஜன் நிரம்பியுள்ள பிரத்யேக அறையில் நோயாளியை வைத்து 100 சதவிகிதம் ஆக்சிஜனை சுவாசிக்கச் செய்கிறோம் (பொதுவாக நாம் சுவாசிக்கும் போது 21 சதவிகித ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கிறோம்). அப்போது புண் ஏற்பட்ட பகுதியில் புதிய ரத்த நாளங்கள் உருவாக, இந்த அதிகப்படியான ஆக்சிஜன் தூண்டுகிறது. உடலில் உள்ள எல்லா உறுப்புகள், திசுக்களுக்கு அதிக ஆக்சிஜன் கிடைப்பது போல புண் ஏற்பட்ட இடத்திலும் அதிகப்படியான ஆக்சிஜன் கிடைத்து, புண்கள் வேகமாக ஆறுவதற்கு உதவுகிறது. வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகள் விரைவாக அழிக்கப்பட்டு, உடலில் உள்ள நச்சுத்தன்மை குறைகிறது.

சனி, 9 ஆகஸ்ட், 2014

அத்திப்பழம்

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள் என்ன என்னனு பாப்போமா ...

* அத்திப்பழம் சாப்பிடறதால ரெத்த சோகை குணமாகுது

* வாயின் உட்புறம் ஏற்படும் புண்ணை குணமாக்கும்

* பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு சரியாகும்

* வயிட்றுப்போக்கு குணமாகும்

* அத்திப்பழப் பொடியை தினமும் ஒரு ஸ்பூன் காலைல சாயந்தரம் பாலுல கலந்து குடிச்சா இதயம் வலுவாகும்

* நரம்பு தளர்ச்சி குணமாகும்

* ஜீரண  சத்தி அதிகமாகும்

* அத்திப்பழம் கல்லீரல் , மண்ணீரல் உறுப்புகளை   நல்லா வேலை செய்ய வைக்குது

* ஆண்மை பெருகும் , உடல் வெயிட் போடும் .

*ரெத்த விருத்தி அதிகமாகும்

* வெண்புள்ளி,தோல் நிறமாற்றம் ,வாதநோய்,உடல் சூடு குணமாகும்

* சீக்கிரம் செரிக்கும் இந்த பழம்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

கண்டங்களுக்கு எப்படிப் பெயர்கள் வந்தன?



ஆஃப்ரிக்கா

ஆ ஃப்ரிக்காவிற்கு எதனால் அந்தப் பெயர்? ஆஃப்ரி என்ற பழங்குடியினர் அங்கே தொடக்கத்தில் வசித்தனர். “ஆஃப்ரிக்கரின் நிலம்’’ என்ற அர்த்தத்தில் ஆஃப்ரிக்கா என்று இதற்குப் பெயரிடப்பட்டது. ஆஃப்ரிக்காவுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். அஃபர் என்றால் ஃபோனிஷியன் மொழியில் (மத்திய தரைக் கடல் தீவுகளில் பேசப்பட்ட மொழி இது). ‘ தூசி’ என்ற அர்த்தம். ‘ தூசிகளின் நிலம்’ என்று இதற்கு அர்த்தம். ஆஃப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் வெப்பமான, பாலைவனம் போன்ற சூழல் நிலவுவது ஞாபகம் இருக்கிறதா?

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

என்ன பட்டம் வேணும் !!!

சமீபத்துல நடிகர்களுக்கு அவங்களுடைய பெயருக்கு முன்னாடி போட்டுக்குற "பட்டம்" ங்களை பத்தி ஒரு செய்தி படிச்சேன்..


சூப்பர் ஸ்டார் ,,லிட்டில்  சூப்பர் ஸ்டார்சுப்ரீம் ஸ்டார் ,அல்டிமேட் ஸ்டார் , ஸ்டைலிஷ் ஸ்டார் ,பவர் ஸ்டார் ,சோலார் ஸ்டார் -னு அட!! அட!! அட !! வானத்துல கூட எண்ணமுடியாத ஸ்டார்களை நாம திரையுலகத்துல பாக்கலாம்.ஸ்டார்  மட்டும் இல்லாம வேறு பெயர்கள் நடிகர் திலகம்,நடிகையர் திலகம்,இளைய திலகம்,நாட்டியப்பேரொளி,இளைய தளபதி,தல, சின்ன தளபதி,புரட்சி தளபதி, மக்கள் நாயகன்,உலக நாயகன்,சின்ன கலைவாணர் ,வைகை புயல் ,இளம் புயல்,இசைப் புயல்,இசைஞானி,இசை மேதை-னு  எத்தன .......

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

ஆத்திச்சூடி !!


1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.

சனி, 2 ஆகஸ்ட், 2014

Wi-fi Direct


பெரும்பாலும் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு இன்னொரு கையடக்க தொலைபேசியில் இருந்து கோப்புகளை பகிர்ந்து கொள்ள அதிகம் பயன்படும் ஒரு வழி Bluetooth ஆகும். இதன் தரவு பரிமாற்ற வேகம் 24Mbps ஆகும். ஆனால் மிகவும் பெரிய அளவு கோப்புகளை பகிர்ந்து கொள்ள சற்று தாமதமாகலாம். ஆனால் சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட் போன்களில் Wi-Fi மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள வழி அமைத்து தருகிறது.

இதன் சாதாரண தரவு பரிமாற்ற வேகம் 100 Mbps ஆகும். இதில் உள்ள நன்மை என்னவென்றால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளிற்கு கோப்புகளை இலகுவாகவும் வேகமாகவும் பரிமாறி கொள்ள முடியும்.

இதனை செயற்படுத்த பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்

- Menu -> Settings  ->  Wi-Fi.

-Wi-Fi Direct என்பதை தேர்ந்தெடுங்கள்

-இப்போது உங்கள் மொபைல் போன் ஆனது உங்கள் Wi-Fi எல்லைக்குட்பட்ட Wi-fi Direct on செய்யப்பட்ட தொலைபேசிகளின் பட்டியலை காட்டும்.

-நீங்கள் தொடர விரும்பும் தொலைபேசி மாடலை தெரிவு செய்யவும்.

-ஒன்றிற்கு மேற்பட்ட தொலைபேசிகளை இணைக்க Multy Connect என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது நீங்கள் Wi-Fi மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்

நன்றி - இரண்டு வருஷம் ஆகிடுச்சு

ப்ளாக் எழுத ஆரம்பிச்சு இரண்டு வருஷம் ஆகிடுச்சு(ஆகஸ்ட் 2).

இதுவரைக்கும் என் ப்ளாக் பார்த்தவங்க/படிச்சவங்க,கருத்துக்களை சொன்னவங்க,பாராட்டினவங்க,திட்டினவங்க எல்லாருக்கும் என்னுடைய நன்றிகள் ...