பக்கங்கள் (Pages)

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

3 கிலோ எடை கொண்ட சைக்கிள் ..

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இதற்குத் தீர்வு ஏற்படும் வகையில் ஒரு புதிய வகை சைக்கிளை கண்டுபிடித்துள்ளார். இந்த சைக்கிளை நாம் பயன்படுத்திய பிறகு அப்படியே மடக்கி, நம்முடைய கைப்பையின் உள்ளே வைத்துக்கொள்ளலாம்.


ஜார்ஜ் மாபே (George Mabey) என்ற 22 வயது மாணவர் ஒருவர், அலுமினியத்தால் ஒரு மோட்டார் சைக்கிளை தயாரித்திருக்கிறார். அதன் மொத்த எடையே 3 கிலோதான். இந்த சைக்கிளை உபயோகித்துவிட்டு, அதன்பின்னர் அதைச் சுருட்டி கைப்பையில் வைத்துக்கொள்ளலாம். மிக விரைவில் இந்தப் புதிய சைக்கிள் விற்பனைக்கு வரவுள்ளது.

லண்டனில் உள்ள London South Bank University என்ற பல்கலைக்கழகத்தில் காட்சிக்காகவும், டெமோ செய்து காட்டுவதற்காகவும் இந்த சைக்கிள் தற்போது வைக்கப்பட்டுள்ளது. 35 அங்குல உயரமும், 11.7 அங்குல அகலமும் உள்ள இந்த சைக்கிள் சராசரி எடையுள்ள ஒருவரை சுமந்து செல்லும் திறன் உடையது. இந்தப் புதிய வகை மோட்டார் சைக்கிளுக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக