பக்கங்கள் (Pages)

புதன், 13 ஆகஸ்ட், 2014

கூகுள் கார்



 கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரைச் செலுத்த ஓட்டுநர் தேவையில்லை. அது தானாகவே ஓடும். ஓட்டுநருக்கென்ற இருக்கையே அதில் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனெனில் அதில் ஸ்டியரிங், க்ளட்ச், ப்ரேக் போன்ற சாதாரணமாகக் காரில் காணப்படும் எந்த உபகரணங்களும் இல்லை. ஆனாலும் அது ஓடும்.நாம் செல்ல வேண்டிய இடத்தில்நம்மை கொண்டுசேர்க்கும்.

இது மின் சக்தியில் இயங்குகிறது. கூகுள் மேப் வழிகாட்டுகிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதாமல் இருக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் உதவுகின்றன.இதில் இரண்டு பேர் அமரலாம்.



2009-லிருந்தே தானாய் ஓடும் காரை உருவாக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டு வருகிறது. மொத்தம் 200 கார்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள் இருக்கிறது. கட்டளையிட்டால் போதும், பயணிகளை அழைத்துக்கொண்டு அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களைக் கொண்டு சேர்த்து சேவையாற்றும் இந்தக் கார்.

நுகர்வோருக்கு நெருக்கமான உணர்வைத் தர வேண்டும் என்பதற்காக இந்தக் காரின் முகப்புப் பகுதி மனித முகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காக முன்பகுதியில் கண்ணாடிக்குப் பதிலாக பிளாஸ்டிக் காற்றுத் தடுப்பானே உள்ளது. இப்போதைக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இதைச் செலுத்த முடியும்.

இந்தக் கார் புழக்கத்தில் வர பல ஆண்டு காலம் பிடிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக