பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 2 ஆகஸ்ட், 2014

Wi-fi Direct


பெரும்பாலும் கையடக்க தொலைபேசி பாவணையாளர்களுக்கு இன்னொரு கையடக்க தொலைபேசியில் இருந்து கோப்புகளை பகிர்ந்து கொள்ள அதிகம் பயன்படும் ஒரு வழி Bluetooth ஆகும். இதன் தரவு பரிமாற்ற வேகம் 24Mbps ஆகும். ஆனால் மிகவும் பெரிய அளவு கோப்புகளை பகிர்ந்து கொள்ள சற்று தாமதமாகலாம். ஆனால் சாம்சங் நிறுவனமானது தனது ஸ்மார்ட் போன்களில் Wi-Fi மூலம் கோப்புகளை பகிர்ந்து கொள்ள வழி அமைத்து தருகிறது.

இதன் சாதாரண தரவு பரிமாற்ற வேகம் 100 Mbps ஆகும். இதில் உள்ள நன்மை என்னவென்றால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளிற்கு கோப்புகளை இலகுவாகவும் வேகமாகவும் பரிமாறி கொள்ள முடியும்.

இதனை செயற்படுத்த பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்

- Menu -> Settings  ->  Wi-Fi.

-Wi-Fi Direct என்பதை தேர்ந்தெடுங்கள்

-இப்போது உங்கள் மொபைல் போன் ஆனது உங்கள் Wi-Fi எல்லைக்குட்பட்ட Wi-fi Direct on செய்யப்பட்ட தொலைபேசிகளின் பட்டியலை காட்டும்.

-நீங்கள் தொடர விரும்பும் தொலைபேசி மாடலை தெரிவு செய்யவும்.

-ஒன்றிற்கு மேற்பட்ட தொலைபேசிகளை இணைக்க Multy Connect என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது நீங்கள் Wi-Fi மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக