பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

திருக்குறள் - அறிந்ததும் அறியாததும்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812.

திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்

அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380

பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700

காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250

திருக்குறள் ‘அக’ரத்தில் தொடங்கி ‘னக’ரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள சொற்கள் - 14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194

தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை

திருக்குறளில் இடம்பெற்ற இருமலர்கள் - அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெற்ற பழம் - நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை - குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து - ஒள

திருக்குறளில் இரு முறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்

வியாழன், 25 செப்டம்பர், 2014

மழை துளிகள் பற்றிய தகவல்கள்


மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில்கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்றுமேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதிநீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.

மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100mm (4in பிளாஸ்டிக்) அல்லது 200mm(8in உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0mm முதல் 25mm (0.98 in) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செல்லுமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் பல பயனுள்ள வசதிகள்..

கம்ப்யூட்டர் பயனர்கள் பலரும் டெஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து Refresh மட்டுமே செய்வார்கள்.

ரைட் கிளிக் செய்யும்போது தோன்றும் விண்டோவில் மேலும் பல பயனுள்ள வசதிகளும் உள்ளன.

அந்த வசதிகளைப் பற்றியும், அதனுடைய பயன்களையும்பார்ப்போம் .

Right Click செய்யும்பொழுது நமக்கு முதலில் தெரியும் பயன்பாடு view.

இது டெஸ்டாப்பில் இருக்கும் அப்ளிகேஷன்களின் ஷார்ட்கட்கள் மற்றும் கோப்புகளின் ஐகான்களை பார்வைக்கு தோற்றம் அளிக்கும் விதத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது. இதில் உள்ள ஆப்ஷன்கள்

1. Large icons
ரைட் கிளிக் செய்து view - Large icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் பெரியதாக தோற்றமளிக்கும்.

2. Medium icons
ரைட் கிளிக் செய்து view - Medium icons என்பதை தேர்ந்தெடுத்திடும்பொழுது டெஸ்க்டாப்பில் தோன்றும் ஐகான்கள் மீடியமாக தோற்றமளிக்கும்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

ஆன்மீக கேள்வி பதில்

வாமனன் என்பதன் பொருள்    -    அழகானவன் 

திருவிக்ரமர் தன திருவடிகளால் அளந்த இரு அடிகள்    -  பூலோகம் , மேல் லோகம் 

திருமாலின் மூன்றாம் அடியாள் நிகழ்ந்தது என்ன  -  மகாபலி பாதாளம் அனுப்பப்பட்டான் .

உத்தமன் என்று வாமன மூர்த்தியை போற்றுபவள்    -  ஆண்டாள் 

வாமனர் அவதரித்த தினம்   -  திருவோண நட்சத்திரம்,துவாதசி திதி

வாமனமூர்தியின் தனிச்சிறப்பு   -  மகாபலியை கொள்ளாமல் நற்கதி அளித்தார் 

வாமனரை தமிழில் எப்படி அழைப்பர்   -  குறளன் 

மகாபலி அஸ்வமேத யாகம் நடத்திய இடம்   -  நர்மதா நதிக்கரை

மகாபலி ஆண்டநாடு   -  மலைநாடு 

கேரளாவின் புகழ்பெற்ற நடனம்   -  கதகளி 

வியாழன், 18 செப்டம்பர், 2014

பாடலின் வரிகள் - மணப்பெண்ணின் சத்தியம் - கோச்சடையான்

படம் :கோச்சடையான் 
பாடல் : மணப்பெண்ணின் சத்தியம் 
பாடியவர்கள் :  லதா ரஜினிகாந்த் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை:  A .R ரஹ்மான்  



காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

தாய் வழி வந்த தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

வெயிலின் நன்மை

நம்ம உடம்புக்கு கணிசமான அளவு வெயில் தேவை..ஏன்னா வெயில்ல இருக்கும் வைட்டமின் -டி உடம்புக்கு நல்லது.

இப்போ சமீபத்திய ஒரு ஆய்வுல ஒரு குறுகிய நேரம் வெயில்ல நின்னு குளிக்குறதால இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் சிக்கல் கட்டுப்படுத்தப்படுதுனு கண்டுபிடிச்சுருக்காங்க.

வெயில்லையே வராம வெயிலே மேலப்படாம வாழ்றவங்களுக்கு இதய பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க.

'ஜர்னல் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் டெர்மாடோலஜி' என்ற பத்திரிக்கைல இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுருக்காம் .



செவ்வாய், 9 செப்டம்பர், 2014

உங்க Chrome Browser பிளேயராக மாறணுமா ?

எந்த ஒரு தனி மென்பொருளும் இல்லாம ஆடியோ கோப்புகளை (ஃபைல்) Chrome browser மூலமா இயக்கலாம்..


இன்டர்நெட் இணைப்பு இருந்தாலும் இல்லைனாலும் இது சாத்தியம்..
எப்படி தெரியுமா?

1.Chrome Browser திறந்துக்கோங்க..
2.நீங்க கேக்க விரும்பும் ஆடியோ ஃபைலை (அது பாடலாக இருந்தாலும் அல்லது வேற எதுவாக இருந்தாலும் சரி ) அதை Drag செய்து Chrome Browser-ல் Drop பண்ணிடுங்க(அதாவது ,அந்த ஃபைல் மேல மவுஸ் வச்சு செலக்ட் செஞ்சு மவுஸ் கர்சரை விடாம அப்படியே  இழுத்துவந்து Chrome Browser-ல விட்டுடுங்க)

அவ்ளோதான்..இப்போ உங்க  Chrome Browser பிளேயராக மாறியிருக்கும்..


வெள்ளி, 5 செப்டம்பர், 2014

Shortcuts using Command Prompt

Command Prompt- மூலமாக கணினியை இயக்க சில சுருக்கு வழிகள் ..

முதல்ல Command Prompt திறக்க

Start - Run செலக்ட் பண்ணுங்க..


இப்போ தோன்றும் Run Box -ல கீழ குடுத்துருக்குற Shortcuts டைப் செஞ்சு OK கொடுத்தா அதற்க்கான application-கள் திறக்கும்.

Add Hardware Wizard                                         hdwwiz.cpl

Add/Remove Programs                                        appwiz.cpl

Adobe Photoshop                                                photoshop

Basic Media Player                                              mplay32

Bluetooth Transfer Wizard                                   fsquirt

Calculator                                                            calc

Ccleaner                                                              ccleaner

C: Drive                                                              c:

Check Disk Utility                                               chkdsk

Chrome                                                              chrome

Clipboard Viewer                                               clipbrd

Command Prompt                                              cmd

புதன், 3 செப்டம்பர், 2014

ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் சேர்ந்தது எப்படி ?

ஒரு ஆண்டில் 12 மாதங்கள் இருப்பது தெரியும். ஆனால் ஒரு காலத்தில் ஒரு ஆண்டில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பின்னால் சேர்க்கப்பட்டவை.


கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசு (Roman Empire) மாபெரும் அரசாக உருவெடுத்தது. ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த சாம்ராஜ்யம் இது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ரோமப் பேரரசு ஆட்சிக்கு வந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலகட்டத்தைப் பற்றி ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை. ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரந்து விரிந்த நிலப்பரப்பு இந்த அரசின் கீழ் இருந்தது. பல நூற்றாண்டுகள் இந்தப் பேரரசின் ஆட்சி நீடித்து நின்றது. மொழி, சமயம், கட்டடக் கலை, மெய்யியல், சட்டம், அரசு நிர்வாகம் ஆகிய துறைகளில் இந்தப் பேரரசு சிறந்து விளங்கியது. இவற்றின் சிறப்புகள் இன்றுவரை பேசப்பட்டுவருகின்றன.

இந்தப் பேரரசின் மன்னனாக கி.மு 44இல் ஜூலியஸ் சீசர் முடிசூடினார். இவர் உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவர். ரோமர்களின் நாட்டை ரோமானியப் பேரரசாக மாற்றியமைத்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது.