பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 27 நவம்பர், 2014

தயிர் ,,,




1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.

ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

வெள்ளி, 21 நவம்பர், 2014

அறிந்து கொள்வோமே-வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்!


 கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு.வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் :

“விட்ட மதனை விரைவா யிரட்டித்து

மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்

ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்

தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

புதன், 12 நவம்பர், 2014

'வாட்ஸ் அப் ' - குறுஞ்செய்தி



அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியினை நண்பர்கள்  படித்துவிட்டார்களா? எப்போது படித்தார்கள் என்பது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியை  அறிமுகம் செய்துள்ளது    'வாட்ஸ் அப் '.

இந்த வசதியானது இந்தியா உட்பட அனைத்து நாடுகளில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் பயன்படுத்துபவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்- ஐ பொறுத்தவரை, இந்த வசதி ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு வின்டோஸ், பிளாக்பெரி, பிளாக்பெரி 10 மற்றும் சிம்பெய்ன் போன்களுக்கு பொருந்தும்.

இதன்படி ஸ்மார்ட் போன் அல்லது டேப்லட்டிலுள்ள வாட்ஸ் அப் அப்பிளிக்கேஷனில் நீல நிறத்திலான இரு சரி அடையாளங்கள் (Double tick) காணப்படுமாயின் உங்களால் அனுப்பப்பட்ட செய்தியினை உங்கள் நண்பர் படித்து விட்டார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் பார்வையிட்ட நேரத்தையும் காட்டுகிறது.

எனினும் குழு சாட்டிங்கின்போது (Group Chat) சரி அடையாளங்கள் மட்டும் நீல நிறமாக மாறும். குழு சாட்டிங்கில் நாம் அனுப்பிய செய்தியினை அழுத்தி பிடித்தால் அதாவது லாங் பிரஸ் செய்தால் குழுவில் இருக்கும் நண்பர்களுள் யாருக்கு செய்தி சென்றடைந்து விட்டது, யார் அந்த செய்தியினை படித்து விட்டார்கள் என்று தெளிவாக காட்டுகிறது.

முன்பு ஒரு செய்தி டெலிவரி ஆகிவிட்டால் செய்திக்கு அருகில் சாம்பல் நிற இரு சரி குறி (Double tick) வரும். ஆனால் செய்தி படிக்கப்பட்டதா இல்லையா? என்று தெரியாமலேயே இருக்கும். இப்போது வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சனி, 8 நவம்பர், 2014

டிசம்பரில் பயங்கர சூரிய புயல்:

டிசம்பரில் பயங்கர சூரிய புயல்: பூமி இருளில் மூழ்கும் 16-12-2014 - சனி பெயர்ச்சி அன்று நிகழவிருக்கும் நிகழ்வு !!!


சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்....

பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது.

டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

வெள்ளி, 7 நவம்பர், 2014

கேளாமை பிரச்சனையை விரைவுல குணப்படுத்த முடியும்


ஹார்வர்ட் மெடிக்கல் பள்ளியில டாக்டர் ஆல்பர்ட் எட்ஜ் தலைமையில காது கேளாமை பத்தி ஆராய்ச்சி ஒன்னு நடந்துகிட்டு இருக்காம்.இந்த ஆராய்ச்சியின் படி ,காது கேக்காத எலிகளுக்கு இவங்க கண்டுபிடிசிருக்குற  மருந்துகள் கொடுப்பதன் மூலமா ஒலி கேக்குற திறன் கொண்ட புதிய மயிர் அணுக்களை வளர வைக்க முடியும்னு கண்டுபிடிச்சிருக்காங்க.

காதுக்குள்ல இருக்குற ஒலி கேக்குற திறன் கொண்ட மயிர் அணுக்கள் பழுதுபட்டுட்டா அத திரும்ப புதுப்பிக்கமுடியாதுன்னு இது நாள் வரை மருத்துவர்கள் நினைச்சாங்க.ஆனா இந்த மருந்து மூலமா புதுப்பிக்க முடியும்னு நம்பிக்கை வந்துருக்கு.

இவங்களோட முந்தைய கண்டுபிடிப்புல காதுக்குள்ல ஒலி கேக்குற பாதையில மாற்றம் செஞ்சா காது கேக்குற வாய்ப்பு அதிகரிக்கும்னு தெரியவந்தது.ஒலி கேக்குற பாதையில தடையை ஏற்படுத்துறதால ஏற்கனவே ஒலி கேக்குற திறன் கொண்ட அணுக்களில் இருந்து புது அணுக்கள் உருவாகுறது இல்ல .மாறாக அதுக்கு பக்கத்துல இருக்குற எல்ஜிஆர்-5 என்ற ஆதரவு அணுக்களில் ஒலி கேக்குற புதிய அணுக்கள் உருவாக்கப்படுது.இதன் மூலமா காது கேக்குற திறன் குறைவு மற்றும் காத்து கேளாமை பிரச்சனையை குணப்படுத்த முடியும்னு நம்பிக்க வந்துருக்கு.

நல்ல விஷயம்தானே ..

சனி, 1 நவம்பர், 2014

வால் பேப்பரை டிஃபால்டாக கொண்டுவர

நமக்கு தேவையான புகைப்படத்தை வால் பேப்பராக  டிஃபால்டாக கொண்டுவர

1. முதல்ல எந்த போட்டோ வால் பேப்பராக வைக்கனுமோ அதை செலக்ட் செஞ்சு ரைட் கிளிக் செஞ்சு 'Open With' option மூலமா Paint -ல ஓப்பன் பண்ணுங்க.

2. அந்த Fileஐ 'Save As' option  மூலமா '24 bit bitmap' format -ஆக C: டிரைவ்ல  விண்டோஸ் போல்டர்ல  save பண்ணுங்க.

3.இப்போ  டெஸ்க்டாப் ரைட் கிளிக் பண்ணி ,Properties - > Desktop Tab செலக்ட் செஞ்சீங்கனா அதுல இருக்குற Background பைல்களில் நீங்க save பண்ணின பைலும் இருக்கும்.

3.