பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 29 ஜனவரி, 2015

விரல் நுனியில் கணிதம் !!!


விரல் (கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை. ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.

இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.

1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம்

1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம்

                                         -- நன்றி தமிழும் சித்தர்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக