பக்கங்கள் (Pages)

செவ்வாய், 6 ஜனவரி, 2015

பஸ் பயணமும் நியூட்டன் விதியும்

நியூட்டனோட முதல் இயக்க விதிப்படி புதுசா ஒரு விசை தாக்காத வரையில இயக்கத்துல உள்ள ஒரு பொருள் இயங்கிகிட்டேதான் இருக்கும்.அதேபோல் நிலையா உள்ள பொருள் நிலையாவே இருக்கும். இதை நிலைமம் என்றும் சொல்வாங்க.

பஸ் 40 கிலோ மீட்டர் வேகத்துல போய்கிட்டு இருக்கும்போது, அந்த பஸ்ஸுக்குள்ள இருக்கிற எல்லா பொருளுமே 40 கிலோ மீட்டர் வேகத்துலதான் பயணம் செஞ்சுகிட்டு இருக்கும். பஸ்ஸுக்குள்ள இருக்குற நாமும் அதே வேகத்துலேதான் பயணம் செய்வோம். திடீர்னு பிரேக் போடுறப்ப பஸ் என்னவோ உடனே நின்னுடும். ஆனா நாம தொடர்ந்து அதே 40 கி.மீ. வேகத்துலேயே பயணம் செய்துகிட்டு இருக்கறதாலதான் தடுமாறி முன் பக்கமா விழுறோம். அதைச் சமாளிக்கத்தான் கம்பியைப் பிடிக்கறோம்.

இது மட்டுமில்ல. ஓடற பஸ் நிக்கிறதுக்கு முன்னாடியே சிலர் படியிலேர்ந்து இறங்கறதையும், அப்படி இறங்கும்போது கீழே விழந்து காயமடைவதையும் பார்த்திருப்போம். அதுக்கும் இதுதான் காரணம். 40 கி.மீ வேகத்துல இயங்கிட்டு இருக்கற உடம்பு, திடீர்னு தன் இயக்கத்தை நிறுத்தும்போதும் தடுமாற்றம் ஏற்படும்.

அதனாலதான் ஓடுற பஸ்ஸில் இருந்து இறங்குறவங்க பஸ் எந்த திசையில ஓடுதோ அதே திசையிலே கொஞ்ச தூரம் ஓடினா பெரும்பாலும் கீழே விழ மாட்டாங்க. ஆனா இதெல்லாம் தெரியாத பலர், பஸ் ஓடற திசைக்கு எதிர் திசையில இறங்கி, தடுமாறி கீழே விழுந்துடறாங்க.

நின்னுக்கிட்டு இருக்கற பஸ், திடீர்னு ஸ்டார்ட் ஆனதும் ஏன் நாம எல்லாம் பின் பக்கமா விழுறோம் தெரியுமா?



பஸ் ஓடாம இருக்கும்போது, அதோட சேர்ந்து நாமும் ஓய்வு நிலையில்தான் இருப்போம். பஸ் திடீர்னு ஓட ஆரம்பிச்சதும் நம்மளோட கால்கள் பேருந்துடன் சேர்ந்து இயக்க நிலைக்கு மாறும். அப்போ உடலின் மற்ற பகுதிகள் ஓய்வு நிலையிலேயே இருக்க முயற்சிக்கும். அதனாலதான் பின்னோக்கி விழறோம்.

அப்போ கண்டக்டர் மட்டும் எப்படி விழாம நிக்குறார்?

நம் உடலின் புவியீர்ப்பு மையத்தில் இருந்து வரையப்படுகிற செங்குத்துக்கோடு கால்களுக்கு இடையே விழுந்தால் நாம் விழ மாட்டோம். அது கால்களைத் தாண்டி வெளியே விழுந்தால் நிலை தடுமாறிவிடுவோம்.அதுதான் கண்டக்டர் தன் இரு கால்களையும் அகற்றி வைத்து நின்றிருப்பதற்க்கு காரணம்.

                     ----  நன்றி நாளிதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக