பக்கங்கள் (Pages)

சனி, 28 மார்ச், 2015

புளூடூத் - வைஃபை : தெரிந்ததும், தெரியாததும் !

WiFI என்பது,என்ன?

இது ஒரு wireless local area network ஆகும்.

கணினி – இணையதள இணைப்புகளுக்கும், நெட்வொர்க்குகளுக்கும் இணைப்புகளை ஏற்படுத்திய கம்பிவழி தொழில்நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக வளர்ந்துள்ள புதிய பரிணாம வளர்ச்சியே வைஃபை என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இணைய இணைப்பு தொழில்நுட்பம் ஆகும்.

WiFI என்பதை wireless fidelity என பலரும் சொல்லி வந்தாலும்,அது உண்மையல்ல. WiFi க்குப் பொருள் கிடையாது.

அது ஒரு ஒரு பதிவு செய்யப்பட்ட, IEEE 802.11x. என்பதன் வர்த்தகக் குறியிடாகும்.

Institute of Electrical and Electronics Engineers (IEEE -Electrical and Electronics Engineers- 802.11 ) இவர்களே இந்த முறையை உருவாக்கினார்கள்.

WiFi என்பது sender - receiver களுக்கிடையில் radio frequency (RF) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, செயல்படும் முறையாகும்..

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள சிறிய antenna வில் ஏற்படும், மின் காந்த அலைகளை (electromagnetic ) வைத்து, வானொலி அலைப்பரவல் ( radio wave propagation) ஊடக தொடர்புகள்(communication) வெளியே பரப்பப்பட்டு, பல இடங்களை சென்று (access point -AP -WAP) அடைகிறது.இந்த access point இல் கிடைக்கும், broadcast wireless signal களை கணினிகள் கண்டறிந்து ஏற்றுக் கொள்ளுகிறது.இதற்கு கணினி,devices என்பவை wireless network adapters களாக செயல்படுகிறது.

அதாவது கம்பியில்லாமல் வானொலி அலைகள் மூலம் இணையத் தொடர்பை, நெட்வொர்க் தொடர்புகளை, உயர் வேகம் கொண்ட வானொலி அலைகள் மூலம் இணைக்கும் முறை WiFi எனப்படுகிறது.

ஆனாலும் WiFi எனப் பொதுவாக சொல்லப்படும் தொடர்புகளை, wireless LAN (WLAN) மூலம் ஏற்படுத்தினாலும்,802.11 என்பதே சரியானதாகும்.இதை ரௌட்டர் உள்ளவர்கள், CMD – ipconfig -சென்று அங்குள்ள default Gateway இலக்கத்தை(198.168.178. ) பிரவுசரில் கொடுத்தால், அங்கே WiFi இல் செல்வோர் விபரங்களைக் காணலாம்.

இல்லையேல்,ipconfig/all அல்லது Who's On My Wifi ,Wireless Network Watcher போன்ற மென்பொருட்களை இணைத்தும் கண்டறியலாம்.இந்த WiFi இல்லாது கணினியில் உள்ள ad-hoc-mode மூலம் P2P முறையில் ஏற்படுத்தவும் முடியும். இது செயல்படும் தூரம் 30 மீ. இல் இருந்து, வானொலி அலைகளைப் பொறுத்து வேறுபடும்.



ஒருவரின் WiFi ஐ, வேறொருவர் பாவித்துக் கொண்டிருந்தால், அவருடைய இணைய இணைப்பின் வேகம் குறைவடையும்.அதை வைத்து யாராவது நமது இணையத்தைப் பாவிக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும்.

மற்றவர்கள் WiFi இணைப்பைப் பெற அவர்களின் கடவுச்சொல் தேவைப்படுகிறது.இதைப் பெற crack செய்பவர்கள்,சில மென்பொருட்களைப் பாவிப்பவர்கள் என வேறுபடுகிறார்கள்.

இந்த பாஸ்வேட்களை திருடாமல், Wireless KeyView என்ற மென்பொருளின் மூலம்,பாஸ்வேட் இல்லாமலேயே பாவிக்க முடியும்.

பாஸ்வேட் இல்லாமல் WiFi மூலம் இணைப்பை பெற முடியும்.

வைஃபை நெட்வொர்க்கில் உள்ள குறைகள்:

Wi-Fi நுட்பத்தின் மூலம் கணினி, மொபைல், டேப்ளட் பிசி போன்ற சாதனங்களில் இணைய இணைப்பு எந்த இடத்திலிருந்தும் பெற முடியும் என்றாலும் முறையான தடுப்பு, பாதுகாப்பு வசதிகளைப் பயன்படுத்தாத பொழுது இது பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது.

அதாவது, இணைய இணைப்பை வான்வழி சிக்னல்களாக அனுப்பி பெற்றுப் பயன்படுத்துவதால் இடையில் வேறு யாரேனும் அதில் குறுக்கிட்டுப் பயன்படுத்த சாத்தியங்கள் அதிகம்.

இதன் மூலம் கணினி ஹேக்கர்கள் எளிதாக ஒரு கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட முடியும். .

உதாரணமாக சொல்வதெனில் சமீபத்தில் நடைப்பெற்ற குண்டுவெடிப்புச் சும்பவத்தில் ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சல் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.அந்த மின்னஞ்சலுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அதாவது அமெரிக்காவில் உள்ள ஒருவரின் கணினியின் நெட்வொர்க்கில் புகுந்து ஹேக் செய்து அவருடைய கணினியின் மூலம், அவருடைய மின்னஞ்சலை நாசவேலைக்குப் பயன்படுத்தியிருந்தார்கள் என்பது தெரிய வந்தது.தொடர்பில்லாத ஒரு நபரின் கணினியின் மூலம் அந்த நாசவேலை அரங்கேறியிருப்பது தெரிய வந்தது.

வயர்லெஸ் அக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப்டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது.அதாவது ஒயர்லஸ் இணைப்பைப் பயன்படுத்துபவர்கள் வான்வழியே தகவல்களை அனுப்புவதால் அதனை தடுத்து ஹேக் செய்து சுலபமாகிறது.அத்தகவல்களை யார்வேண்டுமானாலும் பார்க்க முடியும்.எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், எந்த ஒரு நெட்வொர்க்கைப் பயன்படுத்தினாலும் ஹேக் செய்வது சுலபமாகிறது.

தடுக்கும் வழிகள்:

வயர்லெஸ் கருவியின் அட்மின் பாஸ்வேர்ட்டை (Wireless admin password)நீங்கள் உடனடியாக மாற்ற வேண்டும்.அதாவது உங்கள் நெட்வொர்க்கின் பெயர், அல்லது பொதுவான பெயருடன் 12345 என இருக்கும் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றி வேறு புதிய கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும்.

உங்களுடைய வயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்பு குறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.பயன்படுத்தும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இணைய இணைப்பு துண்டித்துவிடுவது நல்லது.

புளூடூத்:

இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன்.ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள்.பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் .

அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள்.

புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும்.அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் .

புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே.

உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான்.இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு .

புளூடூத் PAN;

அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும்.பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன.

இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள்.ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது.வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள்.அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும்.

ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார்.அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும்.இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும்.இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிப்படை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும்.

இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட். இப்படி ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும்.“ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை .

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும்.ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது !சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம்.இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !

கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும்.இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும்.இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும்.மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும்.

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே.மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம்.அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன.கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !

புளூடூத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பை 1994ம் ஆண்டு ஸ்வீடனிலுள்ள எரிக்ஸன் நிறுவனத்தின் ஜேப் ஹார்ட்சென் மற்றும் மேட்டிசன் அமைத்தனர்.அதன் பின்னர் அது எஸ்.ஐ.ஜி யால் 1998ம் ஆண்டு நெறிப்படுத்தி அறிவித்தனர்.அதன் வெர்ஷன் 1.0ல் ஆரம்பித்து இன்றைக்கு அதன் வளர்ந்த வடிவமான 4.0 எனும் நிலையில் இருக்கிறது.

எல்லா டெக்னாலஜிகளையும் போலவே இதுவும் மாறுபடும் என்பது நிச்சயம்.இப்போதைக்கு உள்ள நுட்பத்தில் அதிக வேகம், குறைந்த எனர்ஜி செலவு எனுமளவில் அது நிலைபெற்றிருக்கிறது !

அதே போல ஒலி அலைகளை கடத்த A2DP (Advanced Audio Distribution Profile எனும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.துவக்க காலத்தில் பாதுகாப்பு அம்சங்கள் ரொம்பவே குறைவாய் இருந்தது.இப்போது பாதுகாப்பு விஷயங்களில் பல மடங்கு முன்னேறியிருக்கிறது.

ஒரு மொபைல் விண்ணப்பம் அனுப்ப, இன்னொரு மொபைல் அதை ஏற்றுக் கொள்ள கடவுச் சொல் பயன்படுத்து முறை இந்த பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று !இரண்டு கருவிகள் இப்படி இணைவதை “பேரிங் ” என்பார்கள், இதை புளூடூத்தின் “பாண்டிங்” நுட்பம் செயல்படுத்துகிறது.

எஸ்.எஸ்.பி (Secure Simple Pairing ) முறை தான் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறை.இதில் வார்த்தைகள், எண்கள் போன்ற ஏதோ ஒன்று அடையாள எண்ணாகப் பயன்படுத்தப்படும்.இந்த வார்த்தையை தயாரிப்பதற்கு ஒரு ஸ்பெஷல் பார்முலா அல்லது அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது.அதை இ22 அல்காரிதம் என அழைப்பார்கள்.

மொபைலில் இருந்து கணினிக்கு தகவல்களை அனுப்புவது, இன்னொரு மொபைலுக்கு தகவல் அனுப்புவது, விசிடிங் கார்ட் போன்றவற்றை அனுப்புவது, பிரிண்டருக்கு தகவல் அனுப்புவது, டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிக்னல்கள் அனுப்பி இயக்குவது என இதன் பயன்பாடு இன்றைக்கு எல்லா இடங்களிலும் உண்டு.

-- நன்றி இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக