பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 6 மார்ச், 2015

பாடலின் வரிகள் - ஆத்தாடி ஆத்தாடி - அநேகன்

படம் :அநேகன் 
பாடல் : ஆத்தாடி ஆத்தாடி
பாடியவர்கள் : பவதாரிணி,திப்பு,தனுஷ் ,அபிய் ஜோத்புர்கர் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா

இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குரு குருப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகமிருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்லுவாயா

ஆத்தாடி....
ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா



நீ மகுடத்தில் வைர கல்லு
நானோ மழ பேஞ்சா உப்பு கல்லு
உன்ன தொடவும் விரல் படவும்
ஒரு பொருத்தம் எனக்கு எது
நான் தரமான தங்க கட்டி
நீ தகரத்தில் கெட்டி பெட்டி
என்னை அடைக்க காத்து கெடக்க
உன்ன போல ஆளு எது
ஆசைகள்  இருந்தா கூட.. மனம் மசியாது
ஆத்துல விழுந்தா கூட..நிழல் நனையாது
உள்ளுக்குள் உள்ள கிறுக்கு உன்ன சும்மா விடாது

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்காளா
என் ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்திருக்காளா

கடிகார முள்ளப் போல
என்ன கணம் தோறும் சுத்தி வாயா
என்ன தொராத்து தூள் பரத்து
இந்த அல்லிப் பூ கிள்ளி போயா
புளி மூட்ட தூக்கி பார்த்தேன்
இப்ப பூ மூட்ட தூக்க போறேன்
இலஞ்ச் சிரிக்கி உன்ன முறுக்கி
என் அருணாக்கயிர் ஆக்க போறேன்
இடுப்புல கயிறா கெடக்க மனம் தயங்குதையா
கழுத்துல கயிற வந்தா நித்தமும் சொந்தமய்யா
விழியால் தொட்ட அழகே இந்த ஆச மாறாதே

ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காறி
ஆசப்பட்டு பூத்திருக்கா வா
ஒ.. ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி
ராப்பகலா காத்‌திருக்க வா
இது முதல் முதலாய் சிலு சிலுப்பு
முதுகு தண்டில் குரு குருப்பு
முழு வெவரம் எனக்கு சொல்வாயா
என் அடி மனசில் சுகம் இருக்கு
அடி வயிற்றில் பயம் இருக்கு
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக