இந்தப் படங்களை பற்றிய விமர்சனங்களை படிக்க இந்த லிங்க் போங்க .. http://srivalaipakkam.blogspot.com/p/4.html
பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
திங்கள், 29 ஜூன், 2015
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?
திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல.
ஒருவர் இன்னொருவரிடம்
பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில்
தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.
அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு. இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.
வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள்.
இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது. அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.
-- நன்றி சமூகவலைதளம்

சனி, 27 ஜூன், 2015
புதன், 24 ஜூன், 2015
இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?
இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும். மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருக்கும் பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது(பிராண சக்தியானது) தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன பிராண சக்தியானது அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உடலுக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல. எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள்.
எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின்(பிராண சக்தி) முயற்சி இப்போது பலிக்காது. மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில சக்திகளும் முயலக்கூடும். அது எதிர்மறையான காந்த அலைகளை உருவாக்கும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

ஞாயிறு, 21 ஜூன், 2015
மிளகாய் வரலாறு:
செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி!
குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு.7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டுவிட்டாலும், கி.மு 3,400-ம் ஆண்டில்தான் அதை விவசாயப் பயிராக பயிரிட்டார்களாம். 1,493-ம் ஆண்டில் கொலம்பஸ் மற்றும் அவருடைய நண்பர் டீகோ அல்வார்ஸ் சான்சா ஆகியோர் பிறநாடுகளுக்கு கடல் வழி கண்டுபிடிக்கும் ஆர்வத் தோடு கடலில் பயணப்பட்டனர். அப்போது அவர்கள் கண்டுபிடித்த பல்வேறு விஷயங்களில் மிளகாய் என்பதும் ஒன்று. அதை மேற்கிந்திய தீவு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரப்பி விட்டுள்ளனர்.
போர்ச்சுகல் மாலுமிகள் மூலம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் மேற்கு கடற் கரையிலிருக்கும் கோவா பகுதியை வந்தடைந்த மிளகாய், இந்தியர்கள் மனதை மெள்ள ஆக்கிரமித்து விட்டது. இன்று உலக நாடுகளில் 1,600 வகை மிளகாய் பயிரிடப் படுகின்றது. இந்தியாவில் இருப்பது சுமார் 380 வகை. மிளகாய் விவசாயத்தில் முதலிடம் பிடித்திருப்பது நாமேதான்.
காரத்தன்மைக்கு அதன் விதைகளில் உள்ள கேப்சய்சின் ( Capsaicin ) என்னும் திரவமே காரணம். இந்தத் திரவத்தை எடுத்து வலி நிவாரணியாகவும் புற்று நோய்க்கான மருந்துகளின் மூலப்பெருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மிளகாயில் வைட்டமின் சி மற்றும் ப்ரோ வைட்டமின் ஏ ஆகியவையும் இருக்கின்றன.
மிளகாய், செவ்விந்தியர்களிடமிருந்து உலகுக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், பாதுகாப்புக்கு மிளகாய் பொடியை பயன்படுத்தலாம் என்பதை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை இந்தியப் பெண்களையேச் சேரும்.
-- நன்றி விகடன்

சனி, 20 ஜூன், 2015
புழுக்கம் அதிகமா இருந்தா மழை பெய்யுமா?
நாம சாப்பிடற சாப்பாட்டுல உள்ள சத்துப் பொருள்கள்
உடம்புக்குள்ளே எரிக்கப்பட்டு ஆற்றலா மாற்றப்படுது. இது தொடர்ந்து
நடந்துகிட்டே இருக்கும். அப்போது உடலின் ஏற்படும் கழிவுப் பொருள்களோட ஒரு
பகுதி வியர்வையா வெளியேற்றப்படுது.
தோலின் வழியே வெளியேற்றப்படும் வியர்வை நீராவியா மாறுது.
நம்மை சுற்றியுள்ள காற்றுல நீராவி மூலக்கூறுகளின் அளவு (இதை ஈரப்பதம் என்று
கணக்கிடுகிறார்கள்) குறைவா இருக்கும்போது, வியர்வை நீராவியாக மாறுவது
வேகமாக நடக்கும்.
மிக அதிகமான அளவுல நீராவி மூலக்கூறுகள் காற்றுல
கலந்திருந்தா, வியர்வை நீராவியா மாறுவது மெதுவாக நடக்கும். அந்த
நேரத்தில்தான் நம் தோல் பகுதிகளில் வியர்வையின் பிசுபிசுப்பு அதிகமாகி
புழுக்கமான சூழல் ஏற்படுது.
காற்றில் கலந்திருக்கும் நீராவி மூலக்கூறுகள்தான்
சுருக்கமடைந்து மழைத் துளியாக மாறுது. நீராவி மூலக்கூறுகளின் அளவு கொஞ்சம்
கொஞ்சமாக அதிகரிச்சுகிட்டே போய், ஒரு பூரித அளவை (Saturated Level)
அடையும்போது நீராவி மூலக்கூறுகள் சுருங்கி மழைத் துளியாக மாறும் நிகழ்வு
நடைபெறும்.
இன்னிக்கு முதல்ல நமக்கு ஒரே புழுக்கமா இருந்துச்சு.
அப்போ, நம்மை சுற்றியுள்ள காற்றுல நீராவி மூலக்கூறுகள் அதிகமா இருந்ததால,
வியர்வை நீராவியாக மாறும் வேகம் குறைஞ்சு போய் பிசுபிசுப்பு ஏற்பட்டது.
நம்ம உடம்புல தெரியற இந்த உணர்வு, இன்னும் கொஞ்ச நேரத்துல
காற்றுல நீராவி மூலக்கூறுகளின் அளவு பூரித நிலையை எட்டி மழைத்துளியாக மாறப்
போறதுக்கான அறிகுறி.
ஞாயிறு, 7 ஜூன், 2015
தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள்
இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.
2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.
3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)