பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 12 ஜூலை, 2015

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..



➤லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

➤நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

➤நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

➤விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

➤விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

➤கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

➤கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

➤கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.

                                                           -- நன்றி சமூகவலைத்தளம் 

வியாழன், 2 ஜூலை, 2015

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

மஞ்சள்:-

இதில் உள்ள 'குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்தும்போது புற்று செல் உருவாகும் தன்மையைக் குறைக்கும். புற்றுநோய் வளர்ச்சி மேலும் தூண்டப்படுவதைத் தடுக்கும். காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

குங்குமப்பூ:-

குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து. முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி’ (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது. இந்திய, அரேபிய, சீனக் கலாசாரங்களில் இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.