பக்கங்கள் (Pages)

திங்கள், 26 அக்டோபர், 2015

கூகுள் கிளாஸ்க்கு போட்டியா அடுத்த கிளாஸ் ..


சான்பிரான்சிஸ்கோ-வை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஆஸ்டர்ஹட் டிசைன் குரூப்(Osterhout Design Group) ராணுவ வீரர்களுக்காக கடினமான எந்த சூழல்களிலும் தாக்குப்பிடிக்க கூடிய ஸ்மார்ட் கிளாஸ்-ஐ தயாரிச்சு வந்துடிருந்தது . இந்த நிறுவனம்இப்போ சாதாரண மக்கள் பயன்படுத்துற  ஸ்மார்ட் கிளாஸ்-ஐயும் இந்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப் போறதா பிரபல போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாம் .

இந்த கிளாஸ் மூலம் ஹை-டெஃபனிஷன் வீடியோக்களை பாக்கலாம் . புதிதாக வீடியோவையும் பதிவு செய்யலாமாம்.

இந்த கிளாஸ் சுருக்கமாக ஓடிஜி(Qualcomm Snapdragon 805) கிளாஸ் என அழைக்கப்படுகிறது.

இந்த ஓடிஜி கிளாஸ்  பிராசசரை கொண்டு இயங்கும். இதில் வைஃபை, ப்ளூடூத், சாட்டிலைட் நேவிகேஷன் போன்ற இணைப்பு சேவைகள்இருக்கு.அதுமட்டும்மில்லாம  நாம எங்க, எத பார்க்குறோம் என்பதை அறிய சென்சார்களும் பொருத்தப்பட்டிருக்காம் . இதன் மூலம் நமது தலை அசைவுகளை 3டி படமாகபாக்கலாமாம் .

இது சற்றே மாற்றியமைக்கப்பட்ட ஆண்டிராய்டு ஓஎஸ் மூலம் இயங்கும்னு சொல்றாங்க.

ஒருமுறை சார்ஜ்செஞ்சா ஒரு மணி நேரம் முதல்  2 மணி நேரம் வரைமட்டும்தான் தாங்கும்.



இதனை அறிமுகப்படுத்த உள்ள ஓடிஜி நிறுவனம் கூடிய விரைவுல இந்த கிளாஸ்க்கு எனப் பிரத்யேகமாக ஆப்ஸ்களை உருவாக்கி வெளியிடப் போறாங்களாம்.

கபோன வருஷம் கடைசியில இந்த நிறுவனம் வெளியிட்ட கிளாஸ் கடினமாவும், ராணுவ பயன்பாட்டிற்கு தாங்கும் வகையிலும் இருந்தது. ஆனா இதோட  விலை 5,000 அமெரிக்க டாலர்கள்.

தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த கிளாஸ்க்கான காப்புரிமையை சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கப்போறாங்களாம் .

கூகுள் கிளாஸ்க்கு போட்டியாக அறிமுகமாகும் இந்த ஓடிஜி கிளாஸ்-ன் அதிகப்பட்ச விலை 1,000 அமெரிக்க டாலர்களா  இருக்கலாம்னு சொல்றாங்க.

கூகுள் கிளாஸ்-ன் விலை 1,500 அமெரிக்க டாலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக