பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 20 நவம்பர், 2015

இப்படி பொறந்துருக்கலாமோ ..

நாயா பொறந்தாலும் நல்ல நேரத்துல பொறக்கனும்னு சொல்வாங்களே ...
எங்க வீட்லயும் ஒரு அஞ்சறிவு ஜீவன் ஷானு வளருது பாக்க டெரர் , கொடுக்குறதுல பாரி வள்ளல் , சாப்பிடுறதுல சாப்பாட்டு ராமன் சாரி ராமி, தூங்குறதுல கும்பகர்ணன் சாரி கும்பகர்ணி ...
பாக்க டெரர் : பின்ன , வீட்டுக்கு யாரும் வரக்கூடாது, வந்தா அவங்க அமைதியா உக்காந்து பேசணும், எந்த பொருளையும் தொடக்கூடாது , ரொம்ப அசையக்கூடாது,எங்க யாரையும் தொட்டோ அடிச்சோ பேசிடக்கூடாது..முக்கியமா யாரும் சண்டைபோட்டுக்க கூடாது...

கொடுக்குறதுல பாரி வள்ளல் : பசினு வேற ஜீவராசிகள் வீட்டுக்கு வந்துட்டா தான் கிண்ணத்துல இருக்குற சாப்பாடோ ,பாலோ எத சாப்டாலும் வேடிக்க பாக்கும், குரங்கு பட்டாளம் வீட்டுக்குள்ள வந்து அலேக்கா ஒரு சீப்பு வாழைப்பழத்தை தூக்கிட்டு போனாலும் ,இல்ல முருக்கு சிப்ஸ்னு இருக்குற டப்பாக்கள தூக்கிட்டு போனாலும் ,அண்ணே வேற ஏதாவது வேணுமா இல்ல போதுமானு கேக்கும் அதுங்ககிட்ட..பாம்ப பாத்தாக்கூட அதும் ஒரு ஜீவன் தானேனு அமைதியா வேடிக்கப் பாக்கும்.
சாப்பிடுறதுல சாப்பாட்டு ராமன் சாரி ராமி : உலகத்துலையே இதுக்கு பிடிச்ச வார்த்த 'சாப்பிட்ற ஐட்டம்' ..அது வெஜ் ஆக இருந்தாலும் சரி இல்ல நான்-வெஜ் ஆக இருந்தாலும் சரி ஒரு பிடி பிடிக்கும். இது ஒரு ஸ்வீட் பைத்தியம்..எல்லா விதமான ஸ்வீட்டும் சாப்பிடும்..அதுக்காக கார ஐட்டம் பிடிக்காதுன்னு இல்ல அதையும் விட்டு வைக்காது, என்ன விட அதிகமா பச்சை காய்கரி சாப்பிடும்..கேரட்,புடலங்காய்,பூசணிக்காய்,தேங்காய் எப்பயாவது புளிக்காத மாங்காய் இது எல்லாம் பச்சையா சாப்பிடும்னா சாம்பார் முள்ளங்கி,வேகவச்ச பீட்ரூட்டும் சாப்பிடும்...பழம்: ஆப்பிள் ,திராட்சையை தவிர அத்தனை பழமும் இஷ்டமா சாப்பிடும்..அதுவும் வாழைப்பழம்னா ரொம்ப இஷ்டம்..பஜ்ஜி போண்டா வடை அப்பளம் ஏதாவது விட்டுவைக்குமா கிடையவே கிடையாது..பாயாசம் ரொம்ப பிடிக்கும்.ஐஸ்கிரீம்,கேக் சாக்லேட் அதும் ஒரு கை சாரி ஒரு வாய் பாக்கும்...தெருவுல ஐஸ்கிரீம் வண்டி போச்சுனா போதும் , அந்த அண்ணனை சத்தம் போட்டு வண்டிய நிறுத்த வச்சு எங்கள வந்து சத்தம் போட்டு கூப்பிட்டு போகும் , எங்க ஐஸ்கிரீம் வண்டி போயிடுமோனு வீட்டுக்கும் தெருவுக்கும் புலி பாய்ச்சல்ல ஓடும்,4 நாள் அந்த அண்ணன் பாத்தார் 5வது நாள்ல இருந்து இது அவரோட ரெகுலர் கஸ்டமர் ஆகிடுச்சு..அதே மாதிரி காய்கறி வண்டி ....



வீரத்துல புலி : வேற 5 அறிவு ஜீவன்கள் வீட்டுக்கு வெளில இருக்குறவரை நானும் ரவுடிதான் பாத்துக்கோ பாத்துக்கோங்குறமாதிரியே சவுண்ட் குடுக்கும் ஆனா பக்கத்துல நாங்க யாரவது இருக்கணும்.நாங்க இருக்கோமானு கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு தான் சவுண்ட் தரும், பொதுவா அகிம்சாவாதி இது,கரப்பான் பூச்சிய அடிச்சாக்கூட தல தெரிக்க இடத்தை விட்டு இது ஓடிடும் முதல்ல..ஏதாவது ஒரு ஆபத்துனா வளத்தவங்கலாவது சோறு போட்டவங்கலாவது என் பாதுக்காப்பு தான் முக்கியம்னு முதல் ஆளா போய் ஒளிஞ்சுக்கும்.. கடைசியா என்ன சொன்னேன்?!?,தூங்குறதுல கும்பகர்ணன் : தூக்கம் தூக்கம் எங்க இருந்து தான் வருமோ அப்படி ஒரு தூக்கம் , ஆமா ஒரு சின்ன கேப் கூட கிடைக்க கூடாது, அரை மணிநேரம் விளையாடும் அதுக்கு 2 மணிநேரம் தூங்கும்....உக்காந்துகிட்டே தூங்கும் நின்னுகிட்டே தூங்கும்,ஃபேன் இருக்கணும் இல்ல கூலர் இருக்கணும் இல்ல AC இருக்கணும் ,அப்டியே மல்லாக்கப் படுத்துக்கிட்டு விட்டத்தை பாத்துக்கிட்டு தூங்குற சொகமே தனின்னு மனசுக்குள்ளயே சொல்லிக்கும் போல...
பொழுதுபோக்கு : நல்லா விளையாடும், Ball  பாத்தா எப்படி இருக்குமோ அதை ஓட்டை பண்ணி காத்த இறக்கி அந்த Ball  ஷேப்பையே மாத்திட்டு தான் உக்காரும்...
கார்ல போறதுனா ரொம்ப பிடிக்கும்.. பைக்ல போறதுனா அத விட ரொம்ப பிடிக்கும்..கார்ல போனா அடுத்த 10-ஆவது நிமிஷம் தூங்க ஆரம்பிச்சிடும்.பைக்ல ஹாயா பெட்ரோல் டாங் மேல உக்காந்து பைக் போற ஸ்பீட்ல காத்துல அது முடி பறக்க போகுறதை பாக்கவே அழகுதான்.

ஒரு நாள் ஒரு ஃபங்ஷன் போக நாங்க எல்லாரும் கிளம்பி கதவை பூட்டும்போது ஷானுனு தேடினா ஆளையே காணம்..வீட்ட தாண்டி எங்கயும் போகாதேன்னு மறுபடியும் கதவ திறந்து எல்லா இடத்துலையும் தேடினோம் ,வீடு முழுக்க வீட்டுக்கு வெளில எல்லா இடமும் மாடியிலனு ஷானுனு கத்திகிட்டே தேடிக்கிட்டு இருந்தா மேடம் சத்தம்போடாம எல்லாருக்கும் அரேஞ் பண்ணி இருந்த கார்ல சத்தம்போடாம ஏறி உக்காந்துக்கிட்டு இருக்கு.அந்த டிரைவர் அண்ணா இங்க வாங்களேன் இங்க பாருங்களேன்னு கூப்பிட்டு காட்றார். :)))

இதுக்கு உலகத்துலையே பிடிக்காத ஒரே ஒரு வார்த்தை இருக்கு..அது "குளிக்கணும் நீ " ...

இப்படி ஒரு சொகுசு வாழ்க்கை.. பின்ன படிக்கணும்னு கவலையா,வேலைக்கு போகணும்னு கவலையா?சம்பாரிக்கனும்னு கவலையா?வீட்டு சாமான் வாங்கணுன்னு கவலையா?பெட்ரோல் விலை ஏறிடுச்சுனு கவலையா?காய்கறி விலை ஏறிடுச்சுனு கவலையா? மாசக் கடைசியில சம்பளம் காலினு கவலையா?புள்ளைகள படிக்கவைக்கணும்னு கவலையா?சொல்லுங்க..
அது என்ன தப்பு பண்ணினாலும் அதுக்கு 5% திட்டு தான் கிடைக்கும் மீதி 95% திட்டு எனக்கு தான் கிடைக்கும்..அது நான் வேற ஊர்ல இருந்தா கூட STD போன் செஞ்சு திட்டுவாங்க...

ஆனா தான் தப்பு பண்ணிட்டோம்னு திட்டபோறாங்கனு தெரிஞ்சா இது எங்க எங்க போய் ஒளிஞ்சுக்கும் தெரியுமா?இந்த போட்டோ பாருங்க நீங்களே தெரிஞ்சுப்பீங்க..

அப்போ அப்போ தோணும் ஷானுவா பொறந்துருக்கலாமோனு ...

ஆனா என்ன தான் இதுங்க சேட்டை செஞ்சாலும் இதுங்க கூட விளையாடும் போது இதுங்க செய்ற சின்ன சின்ன சேட்டைகளையும் வேடிக்க பாக்கும்போது நம்ம ஸ்ட்ரெஸ் எல்லாம் குறஞ்சிடும்ங்குறது 100% உண்மை .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக