'சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த,பெய்யப் போகின்ற கன மழைக்கு, '#எல்நினோ' என்ற பருவ நிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்' என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறுகின்றன....
இது குறித்து வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவ மழை சராசரியாக, 44 செ.மீட்டர் பெய்யும்... நடப்பு ஆண்டில், நவ.,1 முதல், 18 வரை, சராசரியாக, 3.7 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.3 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, சராசரியை விட, 153 சதவீதம் அதிகம்.... அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில், சென்னையில் சராசரி மழை, 10 செ.மீ., - பெய்தது, 44 செ.மீ., - இது, 329 சதவீதம் அதிகம்; காஞ்சிபுரத்தில் சராசரி மழை, 6 செ.மீ., - பெய்தது, 45 செ.மீ., - இது, 656 சதவீதம் அதிகம்; கடலுாரில் சராசரி மழை, 7 செ.மீ., - பெய்தது, 13 செ.மீ., - இது, 93 சதவீதம் கூடுதலாகும்.
மழை கூடுதலாக பெய்ய, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல் உருவாகவில்லை. பசிபிக் கடல் பரப்பில், அக்டோபரில் நிலவும் வெப்பத்தின் அளவு, சராசரியை விட கூடுதலாக இருக்கும்போது, அதன் மீது கடல் காற்று மோதி, கடும் வெப்பத்தை குளிராக மாற்றுகிறது...
இந்த பருவ நிலை மாற்றம், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், கிறிஸ்துவின் பெயருடன் நினைவு கூர்ந்து, எல் நினோ என, ஸ்பெயின் மொழியில் பெயரிடப்பட்டு உள்ளது. இரண்டு முதல், ஒன்பது ஆண்டுகளுக்கு, ஒருமுறை, பசிபிக் கடல் பகுதியில் இதுபோன்ற பருவநிலை மாற்றம் ஏற்படுவது வழக்கம்.... அப்படி மாற்றம் ஏற்படும்போது, அந்த ஆண்டை, #எல்நினோ ஆண்டு என, அழைக்கின்றனர். 'நடப்பு ஆண்டில், பசிபிக் கடலில், சராசரி வெப்பத்தை விட, 2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கூடுதலாக பதிவாகி உள்ளது' என, ஐக்கிய நாடுகளின் கடல் மற்றும் மேற்பரப்பு நிர்வாகம் தெரிவிக்கிறது...
எல் நினோ மூலம், குறைந்த காற்று அழுத்த தாழ்வு, புயல் போன்றவை பருவ மழைக்கு முன் அல்லது பருவமழைக்கு பின் ஏற்படும். எல் நினோ காலத்தில் வங்கக் கடலில், மேற்கு நோக்கி நகரும் காற்று திசை மாறி கிழக்கு நோக்கி நகரும். தற்போது, தமிழகம், ஆந்திராவில் பெய்த கன மழைக்கு, பல காரணிகளை கணித்துள்ளோம். இதில், எல் நினோ ஒரு காரணியாக இருக்கலாம்.இவ்வாறு வானிலை மைய வட்டாரங்கள் கூறின.
'#எல்நினோ' கணிப்பு சரியா: சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது:பசிபிக் கடலின் மேற்பரப்பில் இயல்பை விட கூடுதலாக பதிவாகும் வெப்ப நிலையால், எல் நினோ ஏற்படுகிறது... இது, உலகம் தழுவிய பருவ நிலை. நடப்பு ஆண்டில், இதுபோன்ற கூடுதல் வெப்பநிலை பதிவு உள்ளது...
எல் நினோ இருக்கும்போது, இந்தியாவில், தென் மேற்கு பருவமழை குறைவாகவும், வட கிழக்கு பருவ மழை கூடுதலாகவும் இருக்கும் என, சொன்னாலும், பல ஆண்டுகள், எல் நினோ இருந்த போது, வட கிழக்கு பருவ மழை பொய்த்துள்ளது... எனவே, வட கிழக்கு பருவ மழை கூடுதலாக பெய்ய, எல் நினோ ஒரு காரணியே தவிர, அதுவே முழு காரணம் என, சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக