பக்கங்கள் (Pages)

திங்கள், 4 ஜூலை, 2016

விஜய் டி.வி - கோபிநாத் - நீயா நானா - 7

நேத்து விஜய்டிவியின் நீயா நானால பங்கேற்றவங்க , அதிகமா படிச்சு பட்டம் வாங்கினவங்க ஒரு பக்கம் , அதிகமா பயணங்கள் (அதாவது அதிகமா சுற்றுலாபோறவங்க ) செய்றவங்க ஒருபக்கம்.

கொஞ்சம் interest-ஆதான் இருந்தது..அதுலயும் ஒருத்தர் 140 degree வாங்கிருக்கேன்னு சொன்னப்பபோ அவரை 'God of Graduation' திரு.பார்த்திபன் -னு சொல்லணும்னே தோணிச்சு.


தான் சம்பாதிக்கும் பணம் முழுவதுமே அவரோட படிப்புக்கு செலவாகிடும்னு சொன்னார் இந்த அற்புத மனிதர்.

இவரை மாதிரியே இந்த பக்கம் பேசினவங்க எல்லாருமே குறஞ்சது  5 பட்டம் ,அதுக்கும் மேல மேல , வாங்கிருக்குறவங்க தான்.ஒரு ஒருஒருத்தரும் ஒரு field -ல மட்டும் படிக்காம பல field-ல படிச்சு பட்டம் வாங்கினவங்க..

எதிர்புறம் பேசினவங்கல ஒருத்தர் கேட்டார் , ஏன் இப்படி zig zag -கா படிக்குறீங்க.ஒரு field -ல படிக்காம இப்டி எல்லாத்தையும் படிக்குறீங்க தெளிவு இல்லாத மாதிரி இருக்கு இதுனு . என்ன கேட்டா , இதுல தப்பு எதுவும் இல்லையே..ஏன் ஒரே filed -ல தான் படிக்கணுமா என்ன ? வேற வேற field -ல படிக்கும் போது மத்த field பத்தியும் தெரிஞ்சுக்கமுடியுமே . ஒரே root ல தான் போகணுமா என்ன?அப்போ இங்க வேலை செஞ்சு சம்பாதிக்குறவங்க எல்லாருமே தான் படிச்ச fieldல மட்டும் தான் போயிட்டு வேலை செய்றாங்களா?.அப்டி தான் வேலை செஞ்சாகணும்னா பலபேர் வேலை இல்லாம / ரொம்ப குறைஞ்ச சம்பளத்துக்குத்தான் வேலை செஞ்சுக்கிட்டு இருப்பாங்க..இது அவங்க அவங்களோட ஆர்வம்..நிறைய படிக்கணும்னு passion இருக்கும் சில பேருக்கு..so படிக்குறாங்க.அவங்க விருப்பப்பட்டு தான் படிக்கிறாங்க.விருப்பம் இல்லாம யாராலயும் எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது இல்லையா.


அதேமாதிரி எதிர்புறம் பேசினவங்கல ஒரு பொண்ணு இவங்களை பாத்து ஒரு கேள்வி கேட்டாங்க . இவ்ளோ படிச்சுருக்கீங்களே நீ படிச்சதுல என்ன புதுசா invent பண்ணிருக்கீங்கனு.(இது ஒரு நல்ல கேள்வி) , சரியாதான் கேக்குறாங்கனு நினைக்க தோணிச்சு..ஆமா படிக்கணும் பட்டம் வாங்கணும்னு passion -னோட படிக்குறவங்க , ஆமா நானும் படிச்சேன்னு மட்டும் இல்லாம  இவ்ளோ passion -னோட படிச்ச படிப்ப எதுல apply பண்ணினாங்க ? என்ன புதுசா கண்டுபிடிக்க/எளிதாக்க  முயற்சி பண்ணினாங்க ? இந்த கேள்விக்கு நிறைய பட்டம் வாங்கினவங்க பக்கத்துல இருந்து சரியான பதில் எதுவும் வரல.

சுற்றுலாவை அதிகமா விரும்புறவங்க ஒரு பக்கம் நிறைய  பட்டம் வாங்கினவங்கள பாத்து மாத்தி மாத்தி கேள்வி கேட்டப்போ தன்னால ஒன்னு ரெண்டு பட்டம் கூட எளிதா வாங்க முடியலையேனு ஆதங்கத்துல கேள்வி கேட்டமாதிரி இருந்தது.

அதே சமயம் , நிறைய பட்டம் வாங்கினவங்களால எந்த ஒரு கேள்விக்கும் சரியான தெளிவாக(தெளிவானு நான் இங்க சொல்றது , ஒரு விஷயத்தை மத்தவங்களுக்கு எவ்வளவு எளிதா புரிய வைக்கிறோம்ங்குறது) பேச தெரியலைனு தான் சொல்லணும்..கோவத்தோட பேசுறாங்களே தவிர smart -ஆ பேசல..அதுதான் உண்மை..

ஒரு விஷயத்தை நாம  யாரும் புரிஞ்சுக்கவே இல்ல.. படிச்சுட்டா மட்டும் நாம எல்லாம் தெரிஞ்சுக்கிட்டதா அர்த்தம் இல்ல .அறிவாளினு அர்த்தம் இல்ல .. இதுதான் உண்மையும் கூட..ஒருத்தங்க படிச்சு பட்டம் வாங்கிட்டா அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சுட்டதா அர்த்தம் இல்ல .பிடிக்காத பலபேர் மேதைகளா இருந்துருக்காங்க..ஐன்ஸ்ட்டின் கூட பள்ளிக்கூடத்துல படிக்கும் போது சரியா படிக்கலைனு டீச்சர்கிட்ட  திட்டுவாங்கினவர் தான் ..

நம்ம நாட்டுல திறமை இல்லாதவங்க இல்லமா இல்ல.. ஆனா நாம படிச்சா மட்டும் தானே அவங்களுக்கு மதிப்பு கொடுக்குறோம்..ஒரு குடும்பத்துல எடுத்துக்கிட்டா கூட ஒரு குழந்தை நல்லா மார்க் வாங்கி இன்னோர் குழந்தை கம்மியான மார்க் வாங்கினா , அந்த குழந்தையை சுட்டிக்காட்டி குறைவா மதிப்பெண் எடுத்த குழந்தையை மட்டம் தட்டுவது /திட்டுவது எல்லாம் நடக்கத்தானே செய்யுது..பிஞ்சு மனசுலையே நிறையா மதிப்பெண் வாங்கி படிச்சுருந்தாதான் புத்திசாலினு சொல்லி சொல்லி மனசுல பதியவைக்குறோம்.அதிக மதிப்பெண் எடுக்குறதால / அரியர் இல்லாம பாஸ் பண்ணிட்டா மட்டும் ஒருத்தர் புத்திசாலி ஆகிடமுடியாது ..

ஒரு விஷயம் நாம நல்லா தெரிஞ்சுக்க முடியுது..நம்ம நாட்டுல Education System சரியில்லைங்குறது தான் அது..வெறும் புத்தகங்களை கொடுத்து அதுல இருக்குறதை படிச்சு மனப்பாடம் பண்ணி exam -ல அப்படியே வரி மாறாம எழுதி அதுல எடுக்குற மதிப்பெண்களை வச்சு ஒருத்தர் அறிவாளியா புத்திசாலியானு தீர்மானிக்கிற இந்த நாட்டோட நிலைமை மாறனும்..


இது என்னைக்கு நடக்கும்னு தான் கேள்விக்குறியா இருக்கு???!!!



அதுலாம் சரிங்க அண்ணே ... அதென்ன பொசுக்குன்னு நேத்து show -வை பாதியிலையே முடிச்சுட்டீங்க..

நீயா நானா show -வை முழுவதுமாக பாக்க :


























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக