பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 25 ஜூலை, 2016

​பாடலின் வரிகள் - என் ஜீவன் - தெறி

படம் :தெறி  
பாடல் : என் ஜீவன்
பாடியவர்கள் : கௌசிக் ,பத்மலதா 
பாடலாசிரியர் :நா .முத்துக்குமார்   
இசை: G.V  பிரகாஷ்   



உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து  சாகத்தோணுதே

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே



உபயகுசல சிரஜீவன பிரசுதஹரித மஞ்சுளபர
சித்தாரே சஞ்சாரே அதர ருச்சித
மதுரிதபக சுதனகனக பிரசமநிரத பாங்கல்யே
மாங்கல்யே மமதம சமி சமதசசத முகமனசுத
சுபநலஇவ சுசுத சகித காமம் ஹிரகரகித
பாவம் ஆனந்த போகம் ஆஜீவ காலம் பாசானு
பந்தம் காலானு காலம் தெய்வானு சூலம் காம்யாச்ச
சிஜ்ஜின் காமயே

விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும்
மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும்
முடியாத பார்வை நீ வீச வேண்டும்
முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
இன்பம் எதுவரை ..
நாம் போவோம் அதுவரை ...
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே ...

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்
ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்
காலம் முடியலாம்..
நம் காதல் முடியுமா..
நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே...

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர்த்துளி
உன் மார்பில் சாய்ந்து சாகத்தோணுதே..

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக