பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 2 ஜூலை, 2020

Kids car safety seat அவ்வளவு முக்கியமா?

அமெரிக்கால பொறந்த குழந்தையில் இருந்து அந்த குழந்தையின் ஒரு குறிப்பிட்ட உயரம் ,வயசு வரவரைக்கும் கண்டிப்பா  குழந்தைங்களுக்கான கார் சீட் கண்டிப்பா உபயோகிக்கணும்.

அதுதான் இந்த சட்டம். நம்ம நாட்டுல ஒரு சின்ன கார்ல எத்தனைபேர் அடைச்சு உக்கார /உக்காரவைக்க முடியுமோ அத்தனைப்பேரை உக்காரவச்சுருப்போம். ஆனா அந்த கதை எல்லாம் இங்க நடக்காது.

மாடியில உக்கரவச்சு குழந்தைகளை கூப்பிட்டுப் போகவே முடியாது. அப்படி நாம செஞ்சுட்டா அத போலீஸ் எப்படியாவது கண்டுபிடிச்சுடுவாங்க .  இல்ல பொதுமக்களே யாராவது பாத்துட்டாலும் உடனே கார் நம்பரோட நம்மள பத்தி கம்ப்ளைண்ட் பண்ணிடுவாங்க.

அப்படி போலீஸ் ளிட்ட மாட்டினோம்னா பைன் மட்டும் இல்லாம நம்ம லைசென்ஸ்ளையும் மார்க் பண்ணிடுவாங்க.

எந்த மாதிரி கார் செஅட் உபயோகிப்பாங்க எப்படி உபயோகிப்பாங்கனு தான் இந்த. வீடியோவில் நாம பாக்கப் போறோம் .




Subscribe :

இந்த படங்கள் நீங்க பாத்துட்டீங்களா?

Movie Segment -லஇந்த வீடியோல இரண்டு படங்கள் பத்தி பாக்க  போறோம் . முதல் படம் ஒரு இங்கிலீஷ் படம். இரண்டாவது படம் தமிழ் படம் .

இந்த ரெண்டு படமுமே டெரரான படங்கள் தான்.இந்த இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்னனு தெரிஞ்சுக்க இந்த விடியோவை நீங்க பாருங்க. 




Subscribe :

ஞாயிறு, 21 ஜூன், 2020

எங்கள் வீட்டுக் குட்டி தோட்டம்

வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு இங்க . இந்த வெயில் காலத்துல முதல் தடவையா சில காய்கறி கீரை செடிகள் வளத்துப்பாக்கலாம்னு விதைகளை போட்ருக்கேன் . நல்லா வளந்துக்கிட்டு இருக்கு . அந்த விடியோவை தான் இன்னைக்கு நீங்க பாக்க போறீங்க.







Subscribe :

செவ்வாய், 16 ஜூன், 2020

ஒரு நிஜ Iron Man-ன் கதை | Elon Musk : The Real Iron Man

Elon Musk :

 நீங்க Iron  Man படம்  பாத்திருந்தீங்கனா உங்களுக்கு தெரியும் என்ன ஒரு செமையான கேரக்டர் அதுனு.

நான் Iron  Man-யுடைய ரொம்ப பெரிய ரசிகை . ஆனா அந்த கேரக்டரே இவரை பாத்துதான் உருவாக்கினாங்கனு சொன்னா நம்ப ஆச்சர்யமாதான் இருக்கும்.ஆனா இவருடைய வாழ்க்கை பத்தி தெரிஞ்சுக்கிட்டோம்னா , இவருடைய திறமை அறிவு மற்றும் அவருடைய போராட்டம் இவருடைய தீராத ஆசை , அதை இன்னைக்கும் இவர் சக்ஸஸ் ஆகி எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமா இருக்காருன்னு தெரியும் பொது கண்டிப்பா அதை நாமா ஏத்துப்போம்.

அப்டி என்ன இவர் செஞ்சார் ? யார் இவர் ? -னு இவரை பத்தி தெரிஞ்சுக்க கேளா இருக்குற இந்த வீடியோ பாருங்க.





Subscribe :

செவ்வாய், 9 ஜூன், 2020

காரணம் என்னனு தெரிஞ்சுப்போமா ?

நம்ம அம்மா இல்ல வீட்ல பாட்டி இருந்தா எப்ப பாத்தாலும் இத செய்யாத அத செய்யாத இப்படி செய்யாத அப்டி செய்யாத , இப்போ இப்படி செஞ்சா இப்படியாகிடும் இல்ல அப்படி ஆகிடும் அது இதுனு தொட்டடித்துக்கு எல்லாம் நம்மள கட்டுப்படுத்துவாங்க . சில பேருக்கு ஏன்னு  காரணம் தெரியும் . சில பேருக்கு ஏன்னு காரணம் தெரியாது . ஆனா சொல்றத கிள்ளு ,செய்னு மட்டும் சொல்லுவாங்க.

அப்படி சில விஷயங்கள் நம்மவீட்ல பெரியவங்க சொன்னதுக்கு அதுக்கான உண்மையான காரணமும் தான் இந்த வீடியோவில் நாம பாக்கப் போறோம் .




Subscribe :

வியாழன், 4 ஜூன், 2020

அமெரிக்க மக்கள் அசைவம் அதிகம் சாப்பிட காரணம் என்ன தெரியுமா ?

அமெரிக்கா மக்களுக்கு அசைவம்னா ரொம்பவே பிடிக்கும். இங்க சைவப் பிரியர்களும்  இருக்காங்க. ஆனா அசைவப் பிரியர்கள் ரொம்ப அதிகம் இங்க . ஏன் இவங்கஇவ்வளவு அதிகமா அசைவம் சாப்பிடறாங்கனு தெரிஞ்சுக்கணுமா? அப்போ இந்த வீடியோ பாருங்க




Subscribe :

செவ்வாய், 2 ஜூன், 2020

காலங்கள் கடந்தும் மாறாத வடுக்கள் !! | Racism | Color discrimination

இப்போ அமெரிக்கா முழுக்க கொரோனாவை மறந்து  மக்கள்  வேற ஒரு விஷயத்துக்காக போராடிகிட்டு  இருக்காங்க. அது என்னனு எல்லாருக்குமே தெரிஞ்சு  இருக்கும் .ஆமா , ஜார்ஜ் பிலோய்ட் -ங்குற ஒரு ஆப்ரிக்க இனத்தவர் ஒரு அமெரிக்க காவல் அதிகாரியால கொல்லப்பட்டதுதான்.

இங்க ஏன் இதுமாதிரி நடக்குது?ஏன் வெள்ளையர்களுக்கு கறுப்பினத்தவரை பிடிக்கமாட்டுது
?அவங்க என்ன பண்ணினாங்க? ஆப்ரிக்கர்கள் அமெரிக்காவுக்கு வந்து பலகாலம் ஆகுது. அவங்க எதுக்காக அமெரிக்காவுக்கு வந்தாங்க , அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அமெரிக்கர்கள் எப்படி அவங்களை நடத்தினாங்க.

இதுமாதிரி பல கேள்விக்கு பதில் அவங்களுடைய வாழ்க்கை வரலாறு தெரிஞ்சாதான் நாம சரியா சொல்ல முடியும். அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது எப்படி ஆரம்பிச்சதுனு இந்த வீடியோ பாத்தா நீங்க ரொம்ப சரியா தெரிஞ்சுக்கலாம்.



Subscribe :

ஞாயிறு, 31 மே, 2020

காரில் இருந்தபடியே zoo-விற்கு ஒரு visit !

COVID -19 காரணமா இவ்ளோ நாள் மூடியே இருந்த மாகாணங்கள் இப்போ ஒன்னு ஒன்னா திறக்க ஆரம்பிச்சிருக்காங்க அமெரிக்காவில் .

கிட்டத்தட்ட இரண்டரை மாசத்துக்கு மேல எங்கையும் போகாம இருந்த மக்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வெளில போக ஆரம்பிச்சிருக்காங்க.

 நாங்களும் இரண்டரை மாசத்துக்கு அப்பறம் போனவாரம் டிரைவ் through ஜூ -னு சொல்லப்படுற காரில் இருந்தபடியே  ஜூ சுத்தி பாக்குற மாதிரி இங்க இருக்குற ஒரு ஜூ-வை தற்காலிகமா மாத்தி இருக்காங்க.

அந்த ஜூ தான் இந்த வீடியோவில் பாக்க போறீங்க .




Subscribe :

செவ்வாய், 26 மே, 2020

Banjaras Gold Facial Kit எப்படி இருக்கு ?



Banjaras Gold Facial Kit - இந்த product  நல்ல இருக்குமா இருக்காதான்னு நிறைய பேருக்கு சின்ன சந்தேகம்  இருக்கும்.

இந்த Banjaras Gold Facial Kit -ல என்ன என்ன இருக்கு? என்ன என்ன இதுல சேத்துருக்காங்க. அது நம்மக்கு நல்லதா? எப்படி இதை உபயோகிக்கிறது இடபு எல்லாத்தையும் பத்தியும்  இந்த வீடியோவில் சொல்லிருக்கேன்.கண்டிப்பா பாருங்க . இதனுடைய விலையும்  அதிகம் இல்ல.




Subscribe :


வியாழன், 21 மே, 2020

அமெரிக்காவில் லாட்டரி கடை !

நம்ம ஊருல லாட்டரி கடைகள் பத்தி நான் கேள்விபட்டருக்கேன், பாத்துருக்கேன். ஆனா வெளிநாடுகள்ல நான் லாட்டரி இருக்கும்னு கேள்விப்பட்டது இல்ல. அதுவும் அமெரிக்கா மாதிரி வளர்ந்த நாடுகள்ல லாட்டரி மேல இப்படி ஒரு பைத்தியமா இருப்பாங்கன்னு நான் நினைச்சது கூட இல்ல.

புளோரிடா ட்ரிப் போயிட்டு வரும்போது ஒரு கடையில லோட்டோரி டிக்கெட்ஸ் விக்குறது பாத்தோம். ஆச்சர்யப்பட்டுட்டோம். அந்த கடையை நிர்வகிப்பவர் நம்ம நாட்டுக்காரர். அந்த கடை முழுக்க அவ்ளோ ஸ்டிக்கர்ஸ் ஒட்டி வச்சுருக்காங்க ஜெயிச்சவங்க யாருனு. ரெண்டு நிமிஷத்துக்கு ஒருதரம் யாராவது வந்து லாட்டரி வாங்கிட்டு போறாங்க.

நாங்க இருந்தபோது கூட ஒருத்தங்க 500 டாலர் ஜெயிச்சாங்க. ஆச்சர்யமா இருந்தது பாக்குறதுக்கு. அது பத்தி நாங்க அந்த கடையை நிர்வகிப்பவர் கிட்ட பேசினோம் . அந்த வீடியோ தான் இப்போ நீங்க பாக்கபோறீங்க.




Subscribe :


செவ்வாய், 19 மே, 2020

Hashtag பற்றிய சுவாரசியங்கள் !

சோஷியல் மீடியா உபயோகிக்கிற யாருக்கும் Hashtag பத்தி ,அதாவது hashtag -னா என்னன்னு தெரியாம இருக்காது.

தெரியாதவர்களுக்கு நான் சொல்றேன் , hashtag -னா என்னனா ,  #srivalaipakkam இப்படி ஒரு hashtag -ஐ உருவாக்கிட்டேனா என்னுடைய இந்த blog பத்தி நானோ இல்ல வேற யாராவதோ வீடியோ அல்லது ஆடியோ அல்லது சும்மா ஜஸ்ட் போஸ்ட் (எழுத்து வடிவத்தில்) பண்ணி இந்த #srivalaipakkam அதுல குறிப்பிட்டாங்கனா  என்னுடைய இந்த blog  பத்தி யார் யார் என்ன என்ன ஆடியோ போஸ்ட் அல்லது வீடியோ போஸ்ட் அல்லது text போஸ்ட் பண்ணிருக்காங்கனு  எல்லாத்தையும் இந்த #srivalaipakkam -ங்குற பேரை கிளிக் பண்றதன் மூலமா ஒரே இடத்துல தெரிஞ்சுக்க / பாக்க முடியும்.

இந்த hashtag யார் கண்டுபிடிச்சாங்க , எதுக்கு கண்டுபிடிச்சாங்கஎப்போ உபயோகிக்க ஆரம்பிச்சாங்கன்னு இது மாதிரி நிறையா சுவாரசியமான விஷயங்கள் தான் இந்த வீடியோவில் இருக்கு.

இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் பண்ணுங்க.

                                      ↓

https://www.youtube.com/watch?v=Yqa43S8gzzU




Subscribe :


சின்ன சின்னதா ஒரு பெரிய வீடியோ !

சின்ன சின்னதா ஒரு பெரிய வீடியோ - என்ன பேரே வித்யாசமா இருக்கா? ஆமாங்க குட்டி குட்டி விடீயோக்களை ஒண்ணா சேத்து தொகுத்து ஒரு பெரிய விடியோவா மாத்திருக்கோம் .

இந்த குட்டி குட்டி விடீயோக்களில் நிறைய சுவாரசியமான குட்டி விடியோக்கள் இருக்கு. அதனால மிஸ் பண்ணாம பாருங்க.


இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                ↓

https://www.youtube.com/watch?v=M3Ik-MAgeX4




Subscribe :


புது பேரு ! புது லோகோ ! புது பேனர் !!

 U&MEE -னு ஆரம்பிச்ச இந்த  youtube சேனல்லின் பெயர் ,பேனர் லோகோ எல்லாமே புதுசா மாத்திருக்கோம்.

இனி இந்த U&MEE சேனல் பெயர். "ரெட் பம்ப்கின்" (Red Pumpkin ).

பெயர் மட்டும் தான் மாத்திருக்கோம் . மத்தபடி அதே interest-ஆன விடியோக்கள் தான் நீங்க பாக்க போறீங்க. அதனால தயவுசெஞ்சு  தொடர்ந்து பாருங்க சப்போர்ட் பண்ணுங்க .




Subscribe :


100 வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட 100 மாடி கட்டிடம் !

100 வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்ட 100 மாடி கட்டிடம் தான் இந்த எம்பயர் ஸ்டேட் பில்டிங். இந்த எம்பயர் ஸ்டேட் பில்டிங்யை நாம் பல படத்துல பாத்துருப்போம்.

ஜீன்ஸ் படத்துல 7 அதிசயத்துல ஒரு அதிசயமா பாத்துருப்போம். ஆனா இந்த எம்பயர் ஸ்டேட் பில்டிங் பத்தி நிறைய அறிந்திடாத ,சுவாரசியமான விஷயங்கள் பத்தி உங்களுக்கு தெரியுமா?

அதை தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க். கிளிக் பண்ணி வீடியோ பாருங்க

                       ↓

https://www.youtube.com/watch?v=9nI4e7f2_qc




Subscribe :


திருக்குறள் பற்றிய அறியாத 21 விஷயங்கள் !

திருக்குறள் நாம ஸ்கூல்  படிக்குற காலத்துல இருந்து நமக்கு தெரிஞ்ச ஒரு நூல். அதிகபச்சமா ஒரு 30 குறள்  நம்ம ஸ்கூல்ல படிக்கும் போது நம்முடைய சிலபஸ்ல வந்துருக்கும்.நாமளும் படிச்சிருப்போம்.

திருக்குறள்ல 1330 குரல் இருக்கு , இத்தனை அதிகாரம் இருக்கு ,ஒரு அதிகாரத்துக்கு இதனை குறள்கள், ஒண்ணே முக்கால் அடி ஒரு ஒரு குறளும், இதை இயற்றியவர் திருவள்ளுவர்,இவர் மனைவி பெயர் வாசுகினு இந்த விஷயங்கள் தான் நாம படிச்சிருப்போம்க் தெருஞ்சுருப்போம்.

அதை தவிர்த்து திருக்குறளை பத்தி இதுவரை நீங்க தெரிஞ்சுக்காத பல வியப்பூட்டும் விஷயங்கள் இந்த வீடியோவில் நீங்க தெரிஞ்சுக்கலாம்.


இந்த் விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.


                           ↓






Subscribe :


பிரான்ஸ் அமெரிக்காவுக்க கொடுத்த சுதந்திர தேவி சிலை.

சுதந்திர தேவி சிலையை நாம நிறையபேர் பாத்துருப்போம். சினிமாவுல இல்ல நேர்ல பாத்துருப்போம். இது பிரான்ஸ் அமெரிக்காவுக்கு குடுத்த அன்பளிப்பு -னு கூட சில பேருக்கு தெரிஞ்சுருக்கும்.சில பேருக்கு தெரியமா இருக்கும்.

ஆனா இந்த சுதந்திர தேவி சிலை இப்போ இருக்குற இந்த  இடத்துல வைக்க எவ்வளவு போராட்டங்கள் நடந்தது,எவ்வளவு கஷ்டங்களை கடந்து இந்த இடம் தேர்வானதுனு நம்மள்ல நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பு இல்ல.

இதை பத்தி முழுசா விவரமா இந்த வீடியோவில்  சொல்லிருக்கோம். கண்டிப்பா இந்த விடியோவை பாருங்க.நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                          ↓

https://www.youtube.com/watch?v=wmoFL_E4u5w




Subscribe :


செம்ம tasty வாழைப்பூ வடை !

என் அம்மாவுடைய சமையல்ல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சாப்பிடற ஐட்டம் இந்த வாழைப்பூ வடை . இது அவ்ளோ ஒரு tasty அவ்ளோ ஒரு healthy .

இதை கண்டிப்பா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.உங்களுக்கும் இது ரொம்பவே பிடிக்கும்.

இது எப்படி செய்யணும்னு என்னுடைய விடியோல நான் சொல்லிருக்கேன்.கீழ இருக்குற விடியோ லிங்க்  கிளிக் பண்ணி தெரிஞ்சுக்கோங்க.

இந்த விடியோவை பாக்க

            ↓

https://www.youtube.com/watch?v=8wcnIRHH2FU





Subscribe :


சுவினியர் அப்படீன்னா என்ன தெரியுமா ?

சுவினியர் ஒரு சுவாரஸ்யமான வார்த்தைங்க. நாம ஒரு இடத்துக்கு போனோம்னா அந்த இடம் நினைவா நாம ஏதாவது ஒரு பொருள் வாங்கிட்டுவந்து வீட்ல பத்திரமா வச்சுக்குறது ( அல்லது மத்தவங்களுக்கு gift-ஆ கொடுக்கலாம் ) .

நாம ஸ்கூல் காலேஜ் படிச்சா சமயத்துல நமக்கு பிடிச்சவங்களோட நினைவா நாம எதாவது ஒரு பொருளை (அல்லது பல பொருளை ) அவங்க நியாபகமா வச்சிருப்போம்  இல்லையா அது கூட ஒரு வகைல சுவினியர் தான்.

நாங்க போன புளோரிடா ட்ரிப்ல ஒரு கடைக்கு போனோம் அங்க என்ன ரன்ன பொருட்கள் இருந்தது.என்ன என்ன சுவினியர்களா இருந்ததுன்னு தான் நீங்க இந்த வீடியோவில் பாக்க போறீங்க.


இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                             ↓

https://www.youtube.com/watch?v=qA7qE3Slu08




Subscribe :


எல்லா வகை மீனும் இங்க பாக்கலாம் !!

நாங்க இந்த பிளோரிடா trip-ல ICon பார்க்-க்குனு ஒரு இடம் ஒர்லாண்டோல இருக்கு. அங்க போயிருந்தோம். இந்தஜா பார்க்கு உள்ள Sea life -னு ஒரு aquarium இருக்கு .

இந்த aquarium-ல எல்லா வகை கடல் வாழ் உயிரினங்களும் நாம பாக்கலாம்.அவ்ளோ அழகா இந்த aquarium-ஐ maintain பண்ணிருக்காங்க.

ரொம்ப ரொம்ப அழகா , ஒரு நஃபுது அனுபவமா இருக்கும் இத பாக்க .இந்த விடியோவை தான் நீங்க கீழ இருக்குற லிங்க்ல பாக்கப்போறீங்க .

இந்த விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                         ↓

https://www.youtube.com/watch?v=WjGrbCpVy3I




Subscribe :


அமெரிக்காவில் ஸ்டார் ஹோட்டல் !!

நாங்க பிளோரிடாவுக்கு ஒரு trip  போயிருந்தோம் 4 மாசம் முன்னாடி. அங்க நாங்க ஒருன்ஸ்டார்ட் ஹோட்டல்ல தங்கினோம்.

அமெரிக்கால  ஸ்டார் ஹோட்டல என்ன என்ன வசதிகள் இருக்கு .என்ன என்ன வசதிகள் நமக்கு செஞ்சுதாரங்கனு ரொம்ப அழகா விளக்கமா நீங்க இந்த வீடியோவை பாத்து தெரிஞ்சுக்கலாம்.

இந்த விடியோவை நீங்க பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                        ↓

https://www.youtube.com/watch?v=ylgm9mH7254



ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

Rest Area In the USA !

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நாங்க Florida-வுக்கு ஒரு Road Trip போனோம் . அங்க என்ன என்ன விஷயங்கள் பாத்தோம் .எங்க  எங்க தங்கினோம் எப்படி இருந்ததுனு நிறையா விஷயங்கள் இனிவரப்போற  வீடியோகள்ல பாக்க போறோம் . அந்த வரிசையில இப்போ பாக்க போறது Rest Area பத்தி பாக்கபோறோம்.

Rest Area - இதுலையே உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும் . இங்க பொதுவா High Way -ல ஒரு ஒரு 1 மணி நேரத்துக்கு ஒண்ணுனு விகிதத்துல ஒரு Rest Area இருக்கும். இங்க Rest  Area எப்படி இருக்கும் ?  என்ன என்ன Facility இருக்கும் ?னு Rest Area பத்தி தெரிஞ்சுக்க கீழ  இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க


Rest  Area எப்படி இருக்கும் ? 

            ↓

https://www.youtube.com/watch?v=sNUv5yVZWlM




ரொம்ப ரொம்ப easy இந்த வேலை !

அமெரிக்காவுல பாத்திரம் கழுவவும் mechine இருக்குனு சொன்னா கொஞ்சம் ஆச்சர்யமாதான் இருக்கும். ஆனா ஆதித்தன் உண்மை . இங்க இந்த mechine இல்லாத வீடே இருக்காது. எப்படி ஒரு வீடுன்னா கதவு ஜன்னல் முக்கியமோ அதே மாதிரிதான் இங்க ஒரு வீடுன்னு எடுத்துக்கிட்டா fridge , washing  mechine ,dryer , ovan , microwave , dishwasher இதுலாமும் ரொம்ப முக்கியம் . அப்படி என்ன இந்த dishwasher-ல இருக்கு? அத எப்படி use பண்றது? அது எவ்ளோ நல்லா clean பண்ணும்?எத clean clean பண்ணும் எத clean பண்ணாது ?!இப்படி dishwasher பத்திய  விஷயங்கள் தெரிஞ்சுக்கணுமா , அப்போ கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.


 Dish  Washer எப்படி உபயோகிக்கிறது ?

                         ↓

https://www.youtube.com/watch?v=ntZlivBHxAU




கடல்லையே இல்லையாம் !!

இந்த கொரோனாவால எங்கையும் வெளில போக முடியல . இன்னைக்கு கடைக்கு போயிட்டு கொஞ்சம் வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கிட்டு வரலாம் னு கிளம்பினேன் . நான் பட்ட பாட நீங்க தெரிஞ்சுக்கணுமா ,அப்போ கீழ இருக்குற லிங்க் போய் பாருங்க

                     ↓

கொரோனாவால கடை எல்லாம் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கணுமா ?




ஞாயிறு, 22 மார்ச், 2020

நீங்க பாத்தீங்களா இந்த படத்தை ?

கொரோனாவின் காரணமா எல்லாரும் வீட்லையே இருங்க . வெளில போகுறதை முடிஞ்சா அளவுக்கு avoid பண்ணுங்க . நமக்காக இரவு பகல் பாக்காம எதையோ doctors வேல செஞ்சுகிட்டு இருக்காங்க . அவங்களை கொஞ்சம் நினைச்சுப்பாப்போம் . அதனால தயவு செஞ்சு கொஞ்ச நாள் control -ஆ இருந்து எல்லாரும் சேந்து ஒத்துமையா இருந்து இந்த இக்கட்டான காலக்கட்டத்தை தாண்டி வருவோம் .

இந்த மாதிரி வீட்ல இருக்குற நேரத்துல நமக்கு இருக்குற ஒரே entertainment டிவி பாக்குறதுதான்.என்னதான் பொழுதனைக்கும் கொரோனாவை பத்தி update பாத்துக்கிட்டாலும் அது பாத்து பாத்து ரொம்ப பீதி தான் அடைவோம்.அதனால  கொஞ்ச நேரம் jolly -யா படங்கள் பாப்போம் . சில படங்கள் நான் பாத்து அசந்துபோன படங்கள். அந்த படங்களை பல பேர் பாத்துருக்கலாம்.சில பேர் பாக்க மிஸ் பண்ணி இருக்கலாம் .அவங்களுக்காக இந்த வீடியோ.

இந்த வீடியோ-ல ரெண்டு படங்களை பத்தி சொல்லிருக்கேன் .கண்டிப்பா time கிடைக்கும் பொது பாருங்க. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் . பாத்துட்டு எப்படி இருந்தது  னு சொல்லுங்க .


என்ன என்ன படங்கள்னு தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                             ↓

                    நீங்க பாத்தீங்களா இந்த படத்தை ?

வியாழன், 19 மார்ச், 2020

அமெரிக்காவில் அண்ணாச்சி கடை !!

பொதுவா பிள்ளைங்க அமெரிக்காவுக்கு போறாங்கணா உடனே அம்மா அப்பா ,ஹையோ இவ்வளவு தூரம் போறாங்களே நம்ம  பிள்ளைங்க    பொய் நம்ம சாப்பாடு சாப்பிடமுடியாதே , அங்க அது கிடைக்காதே , இது கிடைக்காதே ! நம்ம ஸ்வீட் மிஸ் பண்ணுவாங்களே , நம்ம காரம் மிஸ் பண்ணுவாங்களே . நம்ம ஊரு சுவையான சாப்பாடு அங்க கிடைக்காதே இது மாதிரி ஆயிரம் எண்ணங்களோடு வழியனுப்பிவைப்பாங்க .

ஆனா உண்மையா சொல்லனும்னா அப்படி எதையுமே இங்க நாம மிஸ் பண்ண மாட்டோம் . அப்பா அம்மா தவிர . ஏன்னா இங்க இந்தியன்ஸ் அதிகமா இருக்காங்கனு தெரிஞ்சா உடனே அங்க நம்ம ஊரு மளிகை  கடை , நம்ம ஊரு ஹோட்டல் எல்லாமே அமஞ்சிருக்கும். இந்தியன் சூப்பர் மார்க்கெட்னு எடுத்துகிட்டோம்னா அங்க நம்ம நாட்டுல என்ன என்ன நாம உபயோகிப்போமோ அது எல்லாமே அங்க கிடைக்கும்.

நம்ம நாட்டோட விலையோட இந்த நாட்டுல கிடைக்குற பொருளோட விலையோட compare பண்ணி பாக்க கூடாது.அப்படி பாத்தோம்னா நம்மால கொஞ்சம் கூட எதையும் வாங்க முடியாது. அதனால தேவையானதுக்கு compare பண்ணிட்டு இது மாதிரி சாப்பிடற சமைக்குற விஷயத்துல compare பண்ணாம இருந்தா நாம கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.

நாங்க இங்க FLORIDA -ல ஒரு இந்தியன் சூப்பர் மார்க்கெட்க்கு போனோம் .அங்க நம்முடைய என்ன என்ன பொருள் கிடைக்குது அதன் விலை என்னனு வீடியோவில் காட்டிருக்கோம். நீங்க இந்த வீடியோ பாத்தீங்கன்னா உங்களுக்கு. ஒரு ஐடியா இதைப்பத்தி கிடைக்கும் .

இந்த் விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க்  கிளிக் பண்ணுங்க

                                           ↓

அமெரிக்காவில் அண்ணாச்சி கடை !!




செவ்வாய், 17 மார்ச், 2020

Tes .. Tes ... Tesla .... தானாக ஓடும் Tesla Car

இனி வரும் காலங்கள்ல எல்லா car-களும்  Electric Car  மாயம் ஆனா கூட ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல  அந்த அளவுக்கு technology-ம் automobiles-ம் அதி வேகமா வளர்ச்சி அடஞ்சுக்கிட்டு இருக்கு. இந்த சிறந்த உதாரணம் இப்போ பல வெளிநாடுகள்ல பிரபலமா இருக்குற Tesla car -களை சொல்லலாம்.

இந்த Tesla Motors உருவான விதம் ஒரு சுவாரசியமானது . இதன் வளர்ச்சி ஆச்சரியமானது . இனி வரும்காலங்களில் இந்த கார்கள் தான் நம்மள ரூல் பண்ணப்போகுதுனு கூட சொல்லலாம் .  அதுவும் இந்த கார்களை ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணலாம்னு தெரிஞ்சா எப்படி இருக்கும் உங்களுக்கு?

அப்படிப்பட்ட இந்த கார் உருவான விதம் இந்த கார் drive பண்றதுக்கு எப்படி இருக்கு?! அப்படி என்னதான் special-ஆ இருக்கு இந்த கார்லனு எல்லா விஷயங்களும் என்னுடைய youtube channel -ல விளக்கமா சொல்லிருக்கேன். கண்டிப்பா பாருங்க .





→ இந்த Tesla Motors உருவான விதம் பற்றிய தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                   ↓

               Tesla Motors உருவான விதம்




→ அப்படி என்னதான் இந்த Tesla Car-களில் புதுசா இருக்குன்னு தெரிஞ்சுக்க கேளா இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க .

                                  ↓

              அப்படி என்னதான் இந்த Tesla Car-களில் புதுசா இருக்கு?




→ இந்த கார்களை எப்படி ஆன்லைன்ல ஆர்டர் பண்ணலாம்னு தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                                  ↓

              இந்த கார்களை எப்படி ஆன்லைன்ல ஆர்டர் பண்ணலாம்


செவ்வாய், 10 மார்ச், 2020

ஒரு குட்டி drive போலாமா?

அமெரிக்காவில் நாம அவ்வளவு ஈஸியா  இல்ல ஈஸியானு சொல்றதை விட casual -ஆ டிரைவ் பண்ணிட முடியாது.1008 rules and regulations வச்சிருக்காங்க.ஒரு 6 நிமிஷ குட்டி டிரைவ் மூலமா என்ன என்ன driving rules நாம பாக்குறோம் follow பண்றோம்னு இந்த வீடியோவில் சொல்லிருக்கேன். இந்த வீடியோ பாருங்க நீங்களும் தெரிஞ்சுக்கோங்க.

இந்த வீடியோ பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க .
                           
                       ↓

    ஒரு குட்டி drive போலாமா?



குங்குமாதி தைலம்

குங்குமாதி தைலம் பத்தி நாம கேள்விப்படிருப்போம் . நிஜமாவே இந்த தைலம்  ரொம்ப நல்லாவே இருக்கு .இது நான் use பண்ணிபாத்துட்டுதான் எப்படி இருக்குனு review சொல்லிருக்கேன்.இது எப்படி use பண்ணனும்னும் என்னுடைய வீடியோ-வில் சொல்லிருக்கேன். நீங்களும் பாருங்க .use பண்ணி பயனடையுங்க.

இந்த வீடியோ பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க

                         ↓

          குங்குமாதி தைலம்



   

வியாழன், 5 மார்ச், 2020

BMW 7-ன் Garage opener, Air Suspension, Angel wing lights வசதி

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது  BMW  7-ன் Garage opener, Air Suspension, Angel wing lights வசதி பத்தி .

BMW 7 -ன் Auto Parking வசதி  பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

 BMW 7-ன் Garage opener, Air Suspension, Angel wing lights வசதி


BMW 7 Auto Parking features

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது  Auto Parking வசதி பத்தி .

BMW 7 -ன் Auto Parking வசதி  பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

                      BMW 7 Auto Parking features



BMW 7 -ன் Sun roof ,Moon roof & Window shade features

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது 
 Sun roof ,Moon roof  & Window shade features  பத்தி .

BMW 7 -ன் Sun roof ,Moon roof  & Window shade features   பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

              BMW 7 -ன் Sun roof ,Moon roof & Window shade features

BMW 7 - 360 degree view Feature

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது 360 degree view  பத்தி .

BMW 7 -ன் 360 degree view  பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

             BMW 7 - 360 degree view Feature

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் எப்படி இருக்கு ? அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி இருக்கு ? இங்கு இன்னும் அதிகமா இந்த வைரஸ் பரவ வாய்ப்புக்கள் இருக்கா? இது பரவாமல் தடுக்க அரசு என்ன என்ன நடவடிக்கை எடுத்துக்கிட்டு இருக்காங்க ? இதுபோன்ற பல விஷயங்களை தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க்  கிளிக் பண்ணுங்க

                                                 ↓


                         அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம்


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

பெத்தவங்களும் . பிள்ளைகளும் .

 

அம்மா ... நாம இந்த உலகத்துக்கு வரதுக்கு காரணமான ஒருத்தங்க.
அம்மா அப்டீனாலே அளவில்லாத அன்பை தரவங்க . பிள்ளைகளுக்காக தன்னோட சந்தோசம் கனவு ஆசை வாழ்க்கைனு எல்லாத்தையும்  sacrifice பண்றவங்க .  நமக்கு என்ன வேணும்னு எது பிடிக்கும்னு  பாத்து பாத்து செய்றவங்க. அப்பாகிட்ட வாங்குற திட்டுல இருந்து பலதடவை நம்மள காப்பாத்துறவங்க. எத்தனையோ அம்மாக்கள் பிள்ளைங்களுக்காக வாழ்க்கையே தியாகம் பண்ணிட்டு இருக்காங்க. 

அவங்க என்ன என்ன நமக்காக செஞ்சுருக்காங்க. sacrificeபண்ணிருக்காங்கனு நாம ஒரு குறிப்பிட்ட வயசு வர வரைக்கும் நமக்கு புரியல! புரியாது ! எப்போ அவங்க இடத்துக்கு நாம வரோமோ அப்போதான் நம்மளால அதுலாம் உணர முடியுது. அதே மாதிரிதான் ஆண்களுக்கு அப்பாவோட position-கு வரும்போது அவரோட உழைப்பு தியாகம் புரியுது.

50 வயசு ஆனாலும் 60 வயசு ஆனாலும் 70 வயசு ஆனாலும் எத்தனையோ அம்மாக்கள் இன்னும் சமையலறையிலையே தான் இருக்காங்க. கிட்ட தட்ட 40 வருஷம் 50 வருஷம் அவங்கள அங்கேயேதான் நாம வச்சிருக்கோம்.  புருஷன் ஆஃபீஸ்க்கு போகணும் பிள்ளைங்க ஸ்கூலுக்கு போகணும்னு காலைலயே  வேலைய ஆரமிப்பாங்க.யாருக்கு என்ன வேணும்னு பாத்து பாத்து செய்வாங்க.

ஒரு குறிப்பிட்ட வயசு வந்ததுக்கு  அப்பறம் தான் நானும் இதுலாம் யோசிச்சேன்.. வேலைக்கு /ஸ்கூலுக்கு போறவங்களுக்காவது weekend leave கிடைக்கும். ஆனா அந்த weekend -கூட நம்ம அம்மா ஹையோ பிள்ளைங்க இன்னைக்குத்தான் வீட்ல இருக்காங்க நல்லா நிம்மதியா சாப்பிட முடியும் நல்லா ஸ்பெஷல்-ஆ சமைக்கணும்னு அன்னைக்கும் வேலைதான் செய்வாங்க.உண்மைய சொல்லனும்னா அன்னைக்குதான் அதிகமான வேலை இருக்கும். அவங்களுக்கு அந்த plan இல்லைனாலும் நாம சும்மா விடுவோமா? இன்னைக்குத்தான் நாங்க வீட்ல இருக்கோம் இது செய்யுங்க அத செய்யுங்கனு வம்பு பண்ணுவோம். 

ஒரு டிவி அவங்கள நிம்மதியா பாக்க விட்டுருக்கோமா? எப்பையுமே இல்ல. அந்த ரிமோட் அவங்க கைல எப்போவாவதுதான் போகும். அதுவும் பண்டிகை நாள்னா சொல்லவே தேவையில்லை. சாமிக்கு அது செய்யணும் இது செய்யணும் குடும்ப வழக்கம் அத தவறாம செய்யணும்னு அன்னைக்குதான் அவங்களுக்கு வேல bend நிமிரும். 

இப்போ மாதிரி prime , netflix ,hotstar,youtube -னு app இல்லையே அப்போ . suntv தான் நமக்கு எல்லாமே.

அவங்க ஆசைப்பட்டு பாக்குறது அந்த suntv -ல  ஒரு பட்டிமன்றமாதான் இருக்கும் .ஆனா அந்த சமயத்துல தான் அடுத்த  சேனல்ல நமக்கு பிடிச்ச ஹீரோ இல்ல ஹீரோயின் interview இருக்கும் இல்ல புது படம்  TRP -க்காகவே போடுவாங்க. அது பாக்கணும் இது பாக்கணும்னு அவங்கள ஒரு ஒரு மணி நேரம் கூட அவங்களுக்கு பிடிச்சதை பாக்க விட்டது இல்ல. ஆனா அது ஒரு குறையா அவங்க காட்டிக்கிட்டதும் கிடையாது.

நம்மளால இப்போ அப்டிலாம் இருக்க முடியல.ஒரு tv கூட பாக்க கூடாதா? எனக்குன்னு time வேணும்ன்னு கேக்க ஆரமிச்சுடுறோம். 

நல்லா யோசிச்சுப் பாருங்க நம்மளில் எத்தனை பேர் நம்ம அம்மாவுக்கு வயசாகிடுச்சு எவ்ளோ வருஷம் தான் அவங்க சமையலறையிலையே இருப்பாங்கனு யோசிச்சிருக்கோம். அவர்களுக்கு போய்ட்டு help பண்ணிருக்கோம்? அம்மா மட்டும் தனியா வேல செய்றாங்களே நாம கொஞ்சம் help  பண்ணுவோம்.atleast சின்ன சின்ன help-வாவது  பண்ணுவோம்னு பண்ணிருக்கோமா? ஏன் சமையல் அறையை அவங்க குத்தகைக்கு எடுத்துருக்காங்களா என்ன? காய்கறி வெட்டி கொடுக்கலாம்.அவங்க சமைச்சா  நாம பாத்திரத்தை கழுவி தரலாமே . ஒரு நாள் அவங்கள உக்கார வச்சு நாம சமைச்சு தரலாம் .இல்ல ஒரு நாள் அவங்க வேலைக்கு லீவு கொடுத்துட்டு ஹோட்டல் சாப்பாடு சாப்பிடலாமே?!  இன்னும் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைனா ஒரு கஞ்சி வச்சுக்குடுக்கக் கூட தெரியாம எத்தனையோ பேர் இருக்கோமே . எப்போ நாம நம்மள உணர போறோம்?மாறப்போறோம்?

இன்னும் சில பேர் இருக்காங்க அப்பா அம்மா யாரும் வேணாம்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுவாங்க.ஆனா கொழந்தைனு பொறந்துட்டா உடனே அப்பா அம்மா மேல பாசம் வரும். அம்மாவை கூப்ட்டு வந்து கூட வச்சுப்பாங்க.ஏன்னா குழந்தைய பாத்துக்கணுமாம். அவங்க என்ன வேலைக்காரங்களா என்ன?சம்பளமே இல்லாம குழந்தைய முழுக்க பாத்துக்கணும் முடிஞ்சா வீட்டு  வேலையையும் சேத்து செய்யணும் ! அவங்களும் பிள்ளைங்க பாசத்துல பேரப் பிள்ளைங்க பாசத்துல செய்வாங்க.

இதுலாம் பாக்கும் போது அமெரிக்கா நடைமுறை தேவலாம்னு தோணுது. இங்க ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பிள்ளைங்க அவங்க வேலைய அவங்கதான் பாத்துக்கணும். அவங்களா சம்பாதிச்சுக்கனும்.அவங்க தேவையை அவங்க சம்பாத்தியத்துல வாங்கிக்கணும். அப்பா தனியா இருந்தாலும் சரி அம்மா தனியா இருந்தாலும் சரி அவங்களுக்குனு ஒரு வீடு வாழ்கைனு வாழ்ந்துடுறாங்க.. இவங்களும் பிள்ளைங்களுக்கு ஹெல்ப் பண்றாங்கதான் .பேரப் பிள்ளைங்களை பாத்துக்குறாங்கதான். பிள்ளைங்களுக்கு குழந்தை பிறந்தா கூட இருந்து help  பண்றாங்கதான் ஆனா நம்ம அளவுக்கு வேலைய மட்டும் வாங்கிக்கறது இல்ல இந்த பிள்ளைங்க , முதல்ல respect கொடுப்பாங்க அம்மாவுக்கு. அவங்க உணர்வுகளை மதிப்பாங்க புரிஞ்சுப்பாங்க.

நம்ம நாட்டுல வயசாகிடுச்சுனா ,அப்டி ஓரமா உக்காரு.இந்த வயசுல இதுலாம் தேவையானு கேக்குறவங்கதான் அதிகம். ஆனா இங்க வயசுக்கு வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளிலாம் குடுக்க மாட்றாங்க.சொல்ல போனா வயசானத்துக்கு அப்பறம் இன்னும் அதிகமாவே வாழ்க்கையை ரசிச்சு அனுபவிக்குறாங்க.. life partner கூட சந்தோஷமா இருக்காங்க. நிம்மதியா சாப்பிடறாங்க. vacation போய்க்கிட்டே இருக்காங்க. வயசாகிடுச்சேனு ஏனோ தானோனு டிரஸ் பண்ணிக்குறது இல்ல. அப்பாவும் அழகா neat -ஆ தனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்குறாங்க. 

நம்ம நாட்டுல கொஞ்சம் வயசாகிடுச்சுனா கொஞ்சம் powder அதிகமா முகத்துல பூச்சிக்கிட்டாலே இந்த வயசுல உனக்கு இந்த makeup தேவையானு கேப்பாங்க(நானும் ஒருகாலத்துல அப்டி எங்க பாட்டியைலாம் கிண்டல் பண்ணினது உண்டு. அது எவ்ளோ தப்புனு உணர்த்துட்டேன்).ஆனா இங்க அமெரிக்கால  எந்த வயசுலயும் தன்னை அழகா மிடுக்கா காட்டிக்குறாங்க.அந்த வயசுலயும் ஒருத்தங்களுக்கு ஒருத்தங்க respect குடுக்குறாங்க.

நம்மள பெத்து வளத்ததுக்காக காலம் முழுக்க அவங்க நமக்கு சேவை செஞ்சுக்கிட்டே இருக்கணும்னு நினைக்காதீங்க.நம்மள வளத்து ஆளாக்கி படிக்கவச்சு கல்யாணம் பண்ணிவச்சு நமக்குன்னு ஒரு வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்குறாங்க. அப்பாடான்னு எல்லா கடமையையும் முடிச்சுட்டு retirement-ஆகி உக்காரும்போது பேரப்பிள்ளைங்கனு அவங்கள மறுபடியும் முதல்ல இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கவைக்குறது நியாயமா? அதுக்காக பேரப்பிள்ளைங்க அவங்களுக்கு உரிமை இல்லாதவங்க , அவங்க தனியா இருக்கணும் பிரிக்கணும்னு நான் சொல்லவே இல்ல. தாத்தா பாட்டியின் அன்பு, அரவணைப்பு, பாசம் அனுபவம் எல்லாமே நம் பிள்ளைங்களுக்கு வேணும் ,கிடைக்கணும். ஆனா அவங்க வயசையும் நாம கவனிக்கணும். எல்லா பொறுப்பையும் அவங்ககிட்ட விட்டுட்டு , சுட்டியான நம்ம பிள்ளைங்க கூட 24 மணி நேரமும் பின்னாடியே ஓடவைக்க கூடாதுனு தான் சொல்றேன். அவங்களுக்குனு privacy , space  தரணும்னு தான் சொல்றேன். நீங்க ரெண்டுபேரும் வேலைக்கு போகணும்னு வேலைக்கு போயிட்டு  இந்த வயசான காலத்துல இவங்களை உங்க சுட்டி பிள்ளைங்களுக்கு baby sitter ஆக்காதீங்கனு தான் சொல்றேன். 

நம்மள வளக்குற காலத்துல எவ்ளவோ சந்தோஷத்தை அவங்க இழந்துருப்பாங்க.நமக்காக தியாகம் பண்ணிருப்பாங்க. அந்த சந்தோஷங்களை மீட்டுக் கொடுங்க. அவங்களை சந்தோஷமா இந்த ஊர் , உலகத்தை சுத்திப்பாக்க வையுங்க. trip அனுப்புங்க. காசி ராமேஸ்வரம் தான் வயசானவங்க பாக்கணும்னு இல்லைங்க. இயற்கையும் கடவுள் தான். இப்போலாம் ஒரு வெளிநாட்டுக்கு trip போகணும்னா அதுக்கு arrange பண்ணித்தர எவ்ளவோ வசதிகள் வந்துடுச்சே .
இனிமேயாவது நாம மாறுவோம்.மாற்றத்தை உருவாக்குவோம்.


பெத்தவங்களும் பிள்ளைங்களை பொத்தி  பொத்தி வளக்குறேங்குற பேர்ல எதையும் கத்துக்கொடுக்காம உங்க காலம் முடியுறவரைக்கும் நீங்களே பக்கத்துல இருந்து எல்லாத்தையும் செய்யணும் நடத்தணும்னு நினைக்காதீங்க.நீங்க செஞ்சாதான் அது சரியா இருக்கும்னும் நினைக்காதீங்க. 5 தடவ தப்பா செஞ்சா 6-வது தடவை சரியா செய்ய ஆரமிச்சுடுவோம் நாங்க.  எல்லாத்தையும் சொல்லித்தாங்க.எல்லா வேலையையும் சொல்லித்தாங்க.பொண்ணுதான் செய்யணும் பையன்னா செய்யக்கூடாதுனு பிரிச்சு சொல்லித்தராதீங்க.எல்லாத்தையு,ம் எல்லாரும் கத்துக்கட்டும்.(atleast இந்த தலைமுறையாவது இந்த தப்பை செய்யாம இருக்கணும்). ஒரே ஒரு பிள்ளை இருந்தா அது ஆணானாலும் பெண்ணானாலும் over செல்லம் கொடுத்து வளக்குறேங்குற பேர்ல எதையும் சொல்லி தராம வளக்காதீங்க.அதுவும் பையன்னா, அதுலாம் கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும் வரவ எல்லாத்தையும் பாத்துப்பானு  நினைக்காதீங்க. உங்களுடைய பிள்ளைங்க கல்யாண வாழ்க்கை நல்லா இருக்குறதும்  இல்லாததும் உங்களுடைய இந்த சின்ன வளர்ப்புளைலையும் தான் இருக்கு. உங்களுடைய அன்பு,ஆதரவு, அனுபவத்தை கொடுங்க எங்களுக்கு , அதை பாடமா எடுத்துக்கிட்டு நாங்க வளருறோம்.எங்களுடைய வாழ்க்கையை நாங்க வாழ கத்துக்கொடுங்க. 



செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

BMW 7 -ன் Auto dimming mirror மற்றும் Fragrance வசதி

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது Auto dimming mirror  மற்றும் Fragrance வசதி பத்தி .

BMW 7 -ன் Auto dimming mirror  மற்றும் Fragrance வசதி  பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

             BMW 7 Auto dimming mirror & fragrance features

BMW 7 -ன் Blind Spot மற்றும் Lane Keep Assist வசதி

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது Blind Spot மற்றும் Lane Keep Assist வசதி பத்தி .

BMW 7 -ன் Blind Spot மற்றும் Lane Keep Assist வசதி  பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

                     BMW 7 Blind Spot and Lane Keep Assist


திங்கள், 24 பிப்ரவரி, 2020

அழகுனா என்ன?


அழகு பத்தி ஒரு ஒருத்தருக்கும் ஒரு ஒரு வித கருத்து இருக்கும். ஒரு ஒருத்தங்க பார்வைலையும் அழகுக்கு அர்த்தம் வேறுபடுது. உண்மையாவே அழகுனா என்ன? சிவப்பா இருந்தா தான் அழகா?கருப்ப இருந்தா  அழகு இல்லையா? ஏன் நாம நிறத்தால் வேறுபடுறோம் .ஏன் இத்தனை ஸ்கின் கலர் இருக்கு .இதுக்கு காரணம் என்ன? இப்படி நிறைய விஷயங்கள் இந்த வீடியோல சொல்லிருக்கேன். வீடியோ பாருங்க .உங்களுக்கு பிடிக்கும்னு  நம்புறேன். அழகு பத்தி உங்களுடைய கருத்தையும் பதிவு பண்ணுங்க .


       வீடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க


                                                    ↓
           
                                        அழகுனா என்ன?







     

வியாழன், 20 பிப்ரவரி, 2020

இவ்வளவு விஷயம் இருக்கா BMW 7 Instrument Cluster-ல ?!

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது Instrument  Cluster-ல என்ன என்ன விஷயங்கள் இருக்குங்குறத  பத்தி .

BMW 7 -ன் Instrument  Cluster பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

                          BMW 7 Instrument Cluster

BMW 7 -ன் Auto Gear வசதி

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது Auto  Gear   அல்லது Auto Transmission வசதி பத்தி .

BMW 7 -ன் Auto  Gear  பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

                            BMW 7 Auto Gear

BMW 7 Cruise Control & Adaptive cruise control

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது Cruise Control   மற்றும் Adaptive Cruise Control  பத்தி .

BMW 7 -ன் Cruise Control   மற்றும் Adaptive Cruise Control  பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

            BMW 7 Cruise Control & Adaptive cruise control

BMW 7-ன் மிரட்டலான Performance

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . இப்போ  நாம பாக்க போறது Performance   பத்தி .

BMW 7 -ன் Performance பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

                       BMW 7 -ன் மிரட்டலான Performance



செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

BMW 7 -ன் சிறப்பம்சங்கள் - 1. Steering Wheel

Luxury கார் Luxury கார் -னு எல்லாம் சொல்றோம்.ஏன் இத Luxury கார்னு சொல்றோம்? ஒரு ஒருத்தங்க பார்வையில luxury  கார்னா வேற வேற மாதிரி இருக்கும். உண்மையிலயே Luxury கார் அப்டீன்னா அதுக்குனு சில சிறப்பு அம்சங்கள் இருக்கும். அது என்ன அப்படி சிறப்பம்சங்கள் இருக்கு அதுலனு நாம பாக்குற வகையில இன்னைக்கு  நாம பாக்க போறது BMW  7-ன் சிறப்பம்சம். நாம ஒன்னு ஒண்ணா பாக்க போறோம் . முதல்ல நாம பாக்க போறது SteeringWheel  பத்தி .

BMW 7 -ன் Steering  Wheel பத்தி தெரிஞ்சுக்க கீழ இருக்குற லிங்க் கிளிக் பண்ணுங்க.

                                             ↓

                       BMW 7 -ன் Steering Wheel



ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

நியூயார்க் நகரம் பற்றிய நிறைய சுவாரசியங்கள் - பகுதி 3

நியூயார்க் பத்தி நிறைய படங்களில் நாம பாத்துருப்போம் சொல்ல கேட்ருப்போம். நியூயார்க் நகரத்தின் மேல எப்பவுமே மக்களுக்கு அதுவும் இளைஞர்களுக்கு ஒரு craziness இருந்துகிட்டே தான் இருக்கு . அப்படி என்ன அந்த நகரத்துல இருக்கு ?அப்படி என்ன ஸ்பெஷல்? அதனுடைய வரலாறு என்ன?-னு நிறைய விஷயங்களை ஒரு லட்சியமுள்ள இளைஞனா அந்த ஊருக்கு போயி ,நிறைய விஷயங்களை கத்துக்கிட்டு , நிறையா விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டு , நிறைய நிறைய கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்திச்சு அதை எல்லாம் கடந்து வந்து இன்னைக்கு ஒரு successful Business man-ஆக தன்னுடைய சொந்த உழைப்பில் முன்னேறி தன்னுடைய company-ன் CEO -வாக இருக்குற என்னுடைய கணவர் தான் ரொம்பவே அழகான எப்பவுமே பிஸியான இந்த நியூயார்க் நகரத்தை பத்தி நிறைய விஷயங்களை என்கூட ஷேர் பண்ணிருக்கார் . பெரிய வீடியோங்கறதால பகுதி பகுதியா பிரிச்சுஷேர் பண்றேன். அந்த வகையில மூன்றாம்  பகுதி இப்போ ஷேர் பண்ணிருக்கேன்.


 இந்த வீடியோவை பாக்க கீழ இருக்குற இருக்குற இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க

                                    ↓

                    நியூயார்க் பகுதி 3


சனி, 15 பிப்ரவரி, 2020

Cuemath Class for Children

சம்மர் time வரப்போகுது. உங்க பிள்ளைங்களை இந்த கிளாஸ் அந்த கிளஸ்ஸ்னு நிறைய கிளாஸ்க்கு அனுப்பப்போறீங்க எப்படினாலும். இந்த உபயோகமான கிளாஸ் பத்தியும் தெரிஞ்சுக்கோங்க.உங்க பிள்ளைங்க Cuemath கத்துக்க ஒரு எளிய வழி.இது complete-ஆ online class . அதனால நீங்க உங்க பிள்ளைன்ஹல கொண்டுபோய் விடணும் திரும்ப கூப்பிட்டு வரணும்னு அவசியம் இல்ல.வீட்ல இருந்தபடியே online கிளாஸ் மூலமா இத கத்துக்கலாம்.

மேலும் விவரங்களை தெரிஞ்சுக்க கீழ கொடுத்துருக்குற விவரங்களை பாருங்க .நீங்க காண்டாக்ட் பண்ண வேண்டிய Email முகவரி மற்றும் phone நம்பர் இங்க இருக்கு.நீங்க whatsapp  பண்ணி முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கலாம்.



Contact through: 
                                 Email id: xsquaredfactor@gmail.com
                                 Whatsapp: +91 9962208497

Introduction:
Cuemath Leap is a personalized Math program for the students of grades 1-8, focused at excellent learning outcomes, concept clarity, and remedial/advanced level depending on the pace of the child.
The Cuemath online platform is a source of 1000+ worksheets content, interactive widgets, and simulations that help the child to get a holistic math learning experience in the presence of a dedicated teacher.
This program is tenure based in 3, 6, 10 months across the globe. Any student from any place can enroll for the program. Payments are feasible with discounts.
Enrollments can be made either in one-time payment or EMI option.

The details of Pre-requisites for the Cuemath Classes and Time slots:
Class Pre-requisites:
Class Slots:

Time Slots (IST):


1. Windows/Mac Laptop/PC
2. Earphone with Mic
3. Web camera
4. 8 Mbps stable Wi-Fi


Days in a week: Mon to Sat


3 PM to 8 PM


Why Cuemath?
These are the hurdles your child faces with school tuitions or any other online program
v  Lack of personalization: Each child has a unique learning pace and thus learning needs to be adaptive and personalized. Math is a life skill.
v  Rote Learning Methods: The irrational fear of math results in students mugging up formulas and answers to score good marks in their exams.
v  Broadcast learning: As different children have different learning abilities, broadcast learning results in a weak base for the future.
v  Unavailability of expert teachers: Finding an expert who understands your child’s learning needs is hard & sometimes accessibility poses a big hurdle.
v  Judgmental learning spaces: Students hesitate to clarify their doubts in their schools and tuition due to the inherent fear of being judged by their peers.

So Cuemath provides you,
v LEAP Program (1-8th grades): live interactive program taught by the math experts.
v  1-1, Live interactive online sessions, and not pre-recorded videos.
v  Customized learning plan
v  Instant doubt clearing
v  24/7 Mentor Support
v Assured results and detailed monthly report

Grade wise topics covered in Cuemath CBSE
Grade 1
Grade 2
Grade 3
Grade 4
Numbers up to 120

Addition and Subtraction

Introduction to Multiplication

Time Shapes and Patterns

Measurement

Playing with Data
3-digit Numbers

Addition and Subtraction
 Multiplication and Division

Time

Shapes and Patterns

Pictographs
Four Digit Numbers

Addition and Subtraction

Multiplication and Division

An Introduction to Fractions

Time

Lines and Polygons

Scaled Pictographs
Numbers up to 7-digits

Arithmetic Operations

Factors, Multiples, and Primes

Factors and their Types

An Introduction to Decimals

Time Lines and Angles

Data Handling




Grade 5
Grade 6
Grade 7
Grade 8
Numbers and their Operations

Factors, Multiples, and Primes

Fractions and their Addition and Subtraction

The Multiplication and Division of Fractions

Decimals and their Addition and Subtraction

The Multiplication and Division of Decimals

Percentages and Unitary Method

Geometry

Data Handling
Numbers and their Operations

Integers and their Operations

Fractions and Decimals:

Factors, Multiples, Primes, and

Applied Math

An Introduction to Algebra

Algebraic Expressions and Linear Equations

Geometry

Mensuration

Data Handling
Fractions And Decimals

Integers

Rational Numbers

Exponents and Roots

Ratios and Proportion

Percentages

Commercial Math

Algebra

Lines and Angles

Triangles

Constructions

Solid Shapes

Symmetry

Perimeter And Area

Data Handling
Rational Numbers

Exponents

Squares and Square Roots

Cubes and Cube Roots

Direct and Inverse Proportion

Commercial Math

Algebraic Expressions

Factorization

Linear Equations in One Variable

Quadrilaterals

Constructions

Perimeter And Area

Surface Area And Volume

Solid Shapes

Data Handling

To know about the program in detail, book a free demo and enroll your child.
More details can be shared through mail / whatsapp.