பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

பெத்தவங்களும் . பிள்ளைகளும் .

 

அம்மா ... நாம இந்த உலகத்துக்கு வரதுக்கு காரணமான ஒருத்தங்க.
அம்மா அப்டீனாலே அளவில்லாத அன்பை தரவங்க . பிள்ளைகளுக்காக தன்னோட சந்தோசம் கனவு ஆசை வாழ்க்கைனு எல்லாத்தையும்  sacrifice பண்றவங்க .  நமக்கு என்ன வேணும்னு எது பிடிக்கும்னு  பாத்து பாத்து செய்றவங்க. அப்பாகிட்ட வாங்குற திட்டுல இருந்து பலதடவை நம்மள காப்பாத்துறவங்க. எத்தனையோ அம்மாக்கள் பிள்ளைங்களுக்காக வாழ்க்கையே தியாகம் பண்ணிட்டு இருக்காங்க. 

அவங்க என்ன என்ன நமக்காக செஞ்சுருக்காங்க. sacrificeபண்ணிருக்காங்கனு நாம ஒரு குறிப்பிட்ட வயசு வர வரைக்கும் நமக்கு புரியல! புரியாது ! எப்போ அவங்க இடத்துக்கு நாம வரோமோ அப்போதான் நம்மளால அதுலாம் உணர முடியுது. அதே மாதிரிதான் ஆண்களுக்கு அப்பாவோட position-கு வரும்போது அவரோட உழைப்பு தியாகம் புரியுது.

50 வயசு ஆனாலும் 60 வயசு ஆனாலும் 70 வயசு ஆனாலும் எத்தனையோ அம்மாக்கள் இன்னும் சமையலறையிலையே தான் இருக்காங்க. கிட்ட தட்ட 40 வருஷம் 50 வருஷம் அவங்கள அங்கேயேதான் நாம வச்சிருக்கோம்.  புருஷன் ஆஃபீஸ்க்கு போகணும் பிள்ளைங்க ஸ்கூலுக்கு போகணும்னு காலைலயே  வேலைய ஆரமிப்பாங்க.யாருக்கு என்ன வேணும்னு பாத்து பாத்து செய்வாங்க.

ஒரு குறிப்பிட்ட வயசு வந்ததுக்கு  அப்பறம் தான் நானும் இதுலாம் யோசிச்சேன்.. வேலைக்கு /ஸ்கூலுக்கு போறவங்களுக்காவது weekend leave கிடைக்கும். ஆனா அந்த weekend -கூட நம்ம அம்மா ஹையோ பிள்ளைங்க இன்னைக்குத்தான் வீட்ல இருக்காங்க நல்லா நிம்மதியா சாப்பிட முடியும் நல்லா ஸ்பெஷல்-ஆ சமைக்கணும்னு அன்னைக்கும் வேலைதான் செய்வாங்க.உண்மைய சொல்லனும்னா அன்னைக்குதான் அதிகமான வேலை இருக்கும். அவங்களுக்கு அந்த plan இல்லைனாலும் நாம சும்மா விடுவோமா? இன்னைக்குத்தான் நாங்க வீட்ல இருக்கோம் இது செய்யுங்க அத செய்யுங்கனு வம்பு பண்ணுவோம். 

ஒரு டிவி அவங்கள நிம்மதியா பாக்க விட்டுருக்கோமா? எப்பையுமே இல்ல. அந்த ரிமோட் அவங்க கைல எப்போவாவதுதான் போகும். அதுவும் பண்டிகை நாள்னா சொல்லவே தேவையில்லை. சாமிக்கு அது செய்யணும் இது செய்யணும் குடும்ப வழக்கம் அத தவறாம செய்யணும்னு அன்னைக்குதான் அவங்களுக்கு வேல bend நிமிரும். 

இப்போ மாதிரி prime , netflix ,hotstar,youtube -னு app இல்லையே அப்போ . suntv தான் நமக்கு எல்லாமே.

அவங்க ஆசைப்பட்டு பாக்குறது அந்த suntv -ல  ஒரு பட்டிமன்றமாதான் இருக்கும் .ஆனா அந்த சமயத்துல தான் அடுத்த  சேனல்ல நமக்கு பிடிச்ச ஹீரோ இல்ல ஹீரோயின் interview இருக்கும் இல்ல புது படம்  TRP -க்காகவே போடுவாங்க. அது பாக்கணும் இது பாக்கணும்னு அவங்கள ஒரு ஒரு மணி நேரம் கூட அவங்களுக்கு பிடிச்சதை பாக்க விட்டது இல்ல. ஆனா அது ஒரு குறையா அவங்க காட்டிக்கிட்டதும் கிடையாது.

நம்மளால இப்போ அப்டிலாம் இருக்க முடியல.ஒரு tv கூட பாக்க கூடாதா? எனக்குன்னு time வேணும்ன்னு கேக்க ஆரமிச்சுடுறோம். 

நல்லா யோசிச்சுப் பாருங்க நம்மளில் எத்தனை பேர் நம்ம அம்மாவுக்கு வயசாகிடுச்சு எவ்ளோ வருஷம் தான் அவங்க சமையலறையிலையே இருப்பாங்கனு யோசிச்சிருக்கோம். அவர்களுக்கு போய்ட்டு help பண்ணிருக்கோம்? அம்மா மட்டும் தனியா வேல செய்றாங்களே நாம கொஞ்சம் help  பண்ணுவோம்.atleast சின்ன சின்ன help-வாவது  பண்ணுவோம்னு பண்ணிருக்கோமா? ஏன் சமையல் அறையை அவங்க குத்தகைக்கு எடுத்துருக்காங்களா என்ன? காய்கறி வெட்டி கொடுக்கலாம்.அவங்க சமைச்சா  நாம பாத்திரத்தை கழுவி தரலாமே . ஒரு நாள் அவங்கள உக்கார வச்சு நாம சமைச்சு தரலாம் .இல்ல ஒரு நாள் அவங்க வேலைக்கு லீவு கொடுத்துட்டு ஹோட்டல் சாப்பாடு சாப்பிடலாமே?!  இன்னும் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைனா ஒரு கஞ்சி வச்சுக்குடுக்கக் கூட தெரியாம எத்தனையோ பேர் இருக்கோமே . எப்போ நாம நம்மள உணர போறோம்?மாறப்போறோம்?

இன்னும் சில பேர் இருக்காங்க அப்பா அம்மா யாரும் வேணாம்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுவாங்க.ஆனா கொழந்தைனு பொறந்துட்டா உடனே அப்பா அம்மா மேல பாசம் வரும். அம்மாவை கூப்ட்டு வந்து கூட வச்சுப்பாங்க.ஏன்னா குழந்தைய பாத்துக்கணுமாம். அவங்க என்ன வேலைக்காரங்களா என்ன?சம்பளமே இல்லாம குழந்தைய முழுக்க பாத்துக்கணும் முடிஞ்சா வீட்டு  வேலையையும் சேத்து செய்யணும் ! அவங்களும் பிள்ளைங்க பாசத்துல பேரப் பிள்ளைங்க பாசத்துல செய்வாங்க.

இதுலாம் பாக்கும் போது அமெரிக்கா நடைமுறை தேவலாம்னு தோணுது. இங்க ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பிள்ளைங்க அவங்க வேலைய அவங்கதான் பாத்துக்கணும். அவங்களா சம்பாதிச்சுக்கனும்.அவங்க தேவையை அவங்க சம்பாத்தியத்துல வாங்கிக்கணும். அப்பா தனியா இருந்தாலும் சரி அம்மா தனியா இருந்தாலும் சரி அவங்களுக்குனு ஒரு வீடு வாழ்கைனு வாழ்ந்துடுறாங்க.. இவங்களும் பிள்ளைங்களுக்கு ஹெல்ப் பண்றாங்கதான் .பேரப் பிள்ளைங்களை பாத்துக்குறாங்கதான். பிள்ளைங்களுக்கு குழந்தை பிறந்தா கூட இருந்து help  பண்றாங்கதான் ஆனா நம்ம அளவுக்கு வேலைய மட்டும் வாங்கிக்கறது இல்ல இந்த பிள்ளைங்க , முதல்ல respect கொடுப்பாங்க அம்மாவுக்கு. அவங்க உணர்வுகளை மதிப்பாங்க புரிஞ்சுப்பாங்க.

நம்ம நாட்டுல வயசாகிடுச்சுனா ,அப்டி ஓரமா உக்காரு.இந்த வயசுல இதுலாம் தேவையானு கேக்குறவங்கதான் அதிகம். ஆனா இங்க வயசுக்கு வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளிலாம் குடுக்க மாட்றாங்க.சொல்ல போனா வயசானத்துக்கு அப்பறம் இன்னும் அதிகமாவே வாழ்க்கையை ரசிச்சு அனுபவிக்குறாங்க.. life partner கூட சந்தோஷமா இருக்காங்க. நிம்மதியா சாப்பிடறாங்க. vacation போய்க்கிட்டே இருக்காங்க. வயசாகிடுச்சேனு ஏனோ தானோனு டிரஸ் பண்ணிக்குறது இல்ல. அப்பாவும் அழகா neat -ஆ தனக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணிக்குறாங்க. 

நம்ம நாட்டுல கொஞ்சம் வயசாகிடுச்சுனா கொஞ்சம் powder அதிகமா முகத்துல பூச்சிக்கிட்டாலே இந்த வயசுல உனக்கு இந்த makeup தேவையானு கேப்பாங்க(நானும் ஒருகாலத்துல அப்டி எங்க பாட்டியைலாம் கிண்டல் பண்ணினது உண்டு. அது எவ்ளோ தப்புனு உணர்த்துட்டேன்).ஆனா இங்க அமெரிக்கால  எந்த வயசுலயும் தன்னை அழகா மிடுக்கா காட்டிக்குறாங்க.அந்த வயசுலயும் ஒருத்தங்களுக்கு ஒருத்தங்க respect குடுக்குறாங்க.

நம்மள பெத்து வளத்ததுக்காக காலம் முழுக்க அவங்க நமக்கு சேவை செஞ்சுக்கிட்டே இருக்கணும்னு நினைக்காதீங்க.நம்மள வளத்து ஆளாக்கி படிக்கவச்சு கல்யாணம் பண்ணிவச்சு நமக்குன்னு ஒரு வாழ்க்கை ஏற்படுத்தி கொடுக்குறாங்க. அப்பாடான்னு எல்லா கடமையையும் முடிச்சுட்டு retirement-ஆகி உக்காரும்போது பேரப்பிள்ளைங்கனு அவங்கள மறுபடியும் முதல்ல இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கவைக்குறது நியாயமா? அதுக்காக பேரப்பிள்ளைங்க அவங்களுக்கு உரிமை இல்லாதவங்க , அவங்க தனியா இருக்கணும் பிரிக்கணும்னு நான் சொல்லவே இல்ல. தாத்தா பாட்டியின் அன்பு, அரவணைப்பு, பாசம் அனுபவம் எல்லாமே நம் பிள்ளைங்களுக்கு வேணும் ,கிடைக்கணும். ஆனா அவங்க வயசையும் நாம கவனிக்கணும். எல்லா பொறுப்பையும் அவங்ககிட்ட விட்டுட்டு , சுட்டியான நம்ம பிள்ளைங்க கூட 24 மணி நேரமும் பின்னாடியே ஓடவைக்க கூடாதுனு தான் சொல்றேன். அவங்களுக்குனு privacy , space  தரணும்னு தான் சொல்றேன். நீங்க ரெண்டுபேரும் வேலைக்கு போகணும்னு வேலைக்கு போயிட்டு  இந்த வயசான காலத்துல இவங்களை உங்க சுட்டி பிள்ளைங்களுக்கு baby sitter ஆக்காதீங்கனு தான் சொல்றேன். 

நம்மள வளக்குற காலத்துல எவ்ளவோ சந்தோஷத்தை அவங்க இழந்துருப்பாங்க.நமக்காக தியாகம் பண்ணிருப்பாங்க. அந்த சந்தோஷங்களை மீட்டுக் கொடுங்க. அவங்களை சந்தோஷமா இந்த ஊர் , உலகத்தை சுத்திப்பாக்க வையுங்க. trip அனுப்புங்க. காசி ராமேஸ்வரம் தான் வயசானவங்க பாக்கணும்னு இல்லைங்க. இயற்கையும் கடவுள் தான். இப்போலாம் ஒரு வெளிநாட்டுக்கு trip போகணும்னா அதுக்கு arrange பண்ணித்தர எவ்ளவோ வசதிகள் வந்துடுச்சே .
இனிமேயாவது நாம மாறுவோம்.மாற்றத்தை உருவாக்குவோம்.


பெத்தவங்களும் பிள்ளைங்களை பொத்தி  பொத்தி வளக்குறேங்குற பேர்ல எதையும் கத்துக்கொடுக்காம உங்க காலம் முடியுறவரைக்கும் நீங்களே பக்கத்துல இருந்து எல்லாத்தையும் செய்யணும் நடத்தணும்னு நினைக்காதீங்க.நீங்க செஞ்சாதான் அது சரியா இருக்கும்னும் நினைக்காதீங்க. 5 தடவ தப்பா செஞ்சா 6-வது தடவை சரியா செய்ய ஆரமிச்சுடுவோம் நாங்க.  எல்லாத்தையும் சொல்லித்தாங்க.எல்லா வேலையையும் சொல்லித்தாங்க.பொண்ணுதான் செய்யணும் பையன்னா செய்யக்கூடாதுனு பிரிச்சு சொல்லித்தராதீங்க.எல்லாத்தையு,ம் எல்லாரும் கத்துக்கட்டும்.(atleast இந்த தலைமுறையாவது இந்த தப்பை செய்யாம இருக்கணும்). ஒரே ஒரு பிள்ளை இருந்தா அது ஆணானாலும் பெண்ணானாலும் over செல்லம் கொடுத்து வளக்குறேங்குற பேர்ல எதையும் சொல்லி தராம வளக்காதீங்க.அதுவும் பையன்னா, அதுலாம் கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும் வரவ எல்லாத்தையும் பாத்துப்பானு  நினைக்காதீங்க. உங்களுடைய பிள்ளைங்க கல்யாண வாழ்க்கை நல்லா இருக்குறதும்  இல்லாததும் உங்களுடைய இந்த சின்ன வளர்ப்புளைலையும் தான் இருக்கு. உங்களுடைய அன்பு,ஆதரவு, அனுபவத்தை கொடுங்க எங்களுக்கு , அதை பாடமா எடுத்துக்கிட்டு நாங்க வளருறோம்.எங்களுடைய வாழ்க்கையை நாங்க வாழ கத்துக்கொடுங்க. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக