பக்கங்கள் (Pages)

வியாழன், 19 மார்ச், 2020

அமெரிக்காவில் அண்ணாச்சி கடை !!

பொதுவா பிள்ளைங்க அமெரிக்காவுக்கு போறாங்கணா உடனே அம்மா அப்பா ,ஹையோ இவ்வளவு தூரம் போறாங்களே நம்ம  பிள்ளைங்க    பொய் நம்ம சாப்பாடு சாப்பிடமுடியாதே , அங்க அது கிடைக்காதே , இது கிடைக்காதே ! நம்ம ஸ்வீட் மிஸ் பண்ணுவாங்களே , நம்ம காரம் மிஸ் பண்ணுவாங்களே . நம்ம ஊரு சுவையான சாப்பாடு அங்க கிடைக்காதே இது மாதிரி ஆயிரம் எண்ணங்களோடு வழியனுப்பிவைப்பாங்க .

ஆனா உண்மையா சொல்லனும்னா அப்படி எதையுமே இங்க நாம மிஸ் பண்ண மாட்டோம் . அப்பா அம்மா தவிர . ஏன்னா இங்க இந்தியன்ஸ் அதிகமா இருக்காங்கனு தெரிஞ்சா உடனே அங்க நம்ம ஊரு மளிகை  கடை , நம்ம ஊரு ஹோட்டல் எல்லாமே அமஞ்சிருக்கும். இந்தியன் சூப்பர் மார்க்கெட்னு எடுத்துகிட்டோம்னா அங்க நம்ம நாட்டுல என்ன என்ன நாம உபயோகிப்போமோ அது எல்லாமே அங்க கிடைக்கும்.

நம்ம நாட்டோட விலையோட இந்த நாட்டுல கிடைக்குற பொருளோட விலையோட compare பண்ணி பாக்க கூடாது.அப்படி பாத்தோம்னா நம்மால கொஞ்சம் கூட எதையும் வாங்க முடியாது. அதனால தேவையானதுக்கு compare பண்ணிட்டு இது மாதிரி சாப்பிடற சமைக்குற விஷயத்துல compare பண்ணாம இருந்தா நாம கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.

நாங்க இங்க FLORIDA -ல ஒரு இந்தியன் சூப்பர் மார்க்கெட்க்கு போனோம் .அங்க நம்முடைய என்ன என்ன பொருள் கிடைக்குது அதன் விலை என்னனு வீடியோவில் காட்டிருக்கோம். நீங்க இந்த வீடியோ பாத்தீங்கன்னா உங்களுக்கு. ஒரு ஐடியா இதைப்பத்தி கிடைக்கும் .

இந்த் விடியோவை பாக்க கீழ இருக்குற லிங்க்  கிளிக் பண்ணுங்க

                                           ↓

அமெரிக்காவில் அண்ணாச்சி கடை !!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக