பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 10 டிசம்பர், 2021

அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்

அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு ரசிகையின் கடிதம்

எனக்கு விபரம் தெரிஞ்சதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் நான் உங்களுடைய ரசிகை தான். அன்புள்ள ரஜினிகாந்த் படம் பார்த்தப்போ நானும் ரஜினி uncle எங்க இருக்கீங்க ?-னு உங்களை ஒரு uncle -ஆ நினச்சு சந்தோஷப்பட்ருக்கேன். முத்து படத்தை பார்த்தப்போ அறியா வயசுல உங்கள மேல ஒரு க்ரஷ் இருந்ததுன்னு கூட சொல்லலாம். கபாலி படத்தை பார்த்தப்போ உங்கள என்னுடைய அப்பாவுக்கு நிகராதான் பாத்தேன். அதனாலயே அந்த படத்துடைய கிளைமாக்ஸ் என்னால ஏத்துக்க முடியலைன்னு கூட சொல்லலாம்.

"பத்ம பூஷன் " ,"பத்ம விபூஷண்","கலைமாமணி", "தாதா சாஹெப் பால்கே" -னு அத்தனை விருதுக்கும் சொந்தக்காரர் நீங்க ( என்னென்னமோ விருதை உங்களுக்கு குடுத்து அரசியலுக்கு உங்களை இழுக்க ,இல்ல ஒரு வார்த்தையாவது சொல்ல வைக்க முயற்சி பண்றாங்க ஆனா முடியல).

நின்னா விமர்சனம், நடந்தா விமர்சனம் , மூச்சு வேகமா விட்டா விமர்சனம், தும்மினா விமர்சனம்னு உங்க நிலைமையை, உங்க இடத்துல இருந்து பாத்தாதான் தெரியும்.

உங்களுடைய போட்டியாளர்ங்குற ஒரே காரணத்தால சில வருடங்களுக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு திரு கமல்ஹாசன் அவர்களை பிடிக்காது.அவர் நடிச்ச படங்களை பாக்கமாட்டேன் பிடிக்காது.(அதுக்கு அப்பறம் அவருடைய படங்களை பார்த்தபோது தான் மனுஷன் என்னமா யோசிச்சு படம் எடுத்துருக்கார் .நாளைய உலகத்தை இன்னைக்கே நம்ம கண் முன்னாடி காட்டி இருக்காரேன்னு ஆச்சர்யப்பட்டு , ச்சே , அறியாமைல தப்பு பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணி அவருடைய எல்லா படங்களையும் மிஸ் பண்ணாம தேடி தேடி பாத்தது வேற கதை).

இவ்வளவு வெறித்தனமா இருந்த, இருக்குற பொண்ணுதான் நான், இருந்தாலும் சில கேள்விகளை கேக்காம இருக்க முடியல.

எதுக்காக உங்கள தலைவர் அப்டீன்னு கூப்பிடனும்? உங்களை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? என்ன செஞ்சிருக்கீங்க அப்படீன்னா , காசு பணம் குடுத்து உதவுவதை மட்டும் சொல்லல. காசு இருக்குற யார் வேணும்னாலும் யாருக்கு வேணும்னாலும் உதவலாம். நான் 1500 ரூபாய் சம்பளம் வாங்கும்போது கூட 100 ரூபாய்யை சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருந்தவர்களுக்குனு ஒதுக்கி சாப்பாடு வாங்கி தந்துருக்கேன். நீங்க உங்களுடைய தகுதிக்கு ஏத்தமாதிரி உதவுறீங்க.அவ்ளோதான்.அத பத்தி நான் பேசல.
"மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன்மீது மண்ணுக்காசை மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது -இதை மனம்தான் உணர மறுக்கிறது" ----- "எத்தன சந்தோசம் தினம் கொட்டுது உன் மேலே நீ மனசு வெச்சுபுட்டா ரசிக்க முடியும் உன்னால நீ சிந்தும் கண்ணீரும் இங்கு நிரந்தரம் அல்ல இது புரிஞ்சிக்கிட்டாலே இங்கு நீ தாண்ட ஆளு கையில் கெடச்சத தொலைஞ்சா இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்-ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்" இதுமாதிரி தத்துவப் பாடல்கள் மூலமா மக்களுக்கு அறிவுரை சொல்றதையும் சொல்லல.
உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்குற, ஒரு பெரிய 'பிரபலமா' இதுவரை மக்களுக்கு என்ன செஞ்சுருக்கீங்க? நீங்க ஒரு வார்த்தை சொன்னா செய்ய தயாரா இருக்குற , உங்கள பின்தொடருற மக்களுக்கு /ரசிகர்களுக்கு என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கீங்க?
எத்தனை hollywood Celebrities , awareness documentaries பண்ணிருக்காங்க, பண்ணிக்கிட்டு இருக்காங்கனு தெரியுமா? Will Smith -னுடைய EARTH ,AMEND மற்றும் Chris Hemsworth-ன் Shark Beach documentary-னு எத்தனையோ பேர் ,எத்தனையோ documentaries. Ofcourse அவங்களும் பணம் வாங்கிட்டு தான் செய்றாங்க இல்லைனு சொல்லல but செய்றாங்களே .ஒரு celebirity வச்சு documentary எடுத்து publish பண்ணினா அவங்களுடைய fans /followers பாப்பாங்க .சிறு துளி கூட பெரு வெள்ளமாகும்னு செய்றாங்க. ஆனா நீங்க அப்டி கூட எதுவும் செஞ்சது இல்லையே. அதுக்கான ஒரு அடி கூட எடுத்தது இல்லையே.

அமிதாப் பச்சன் பாருங்களேன் எவ்வளவு வித விதமான கதாபாத்திரங்கள் அவர் வயசுக்கு ஏத்த மாதிரி நடிக்கிறார்.ஹாலிவுட் -ல Liam Neeson எடுத்துக்கோங்க ஹீரோவா மட்டும் தான் நடிக்கிறார்.ஆனா அவருடைய வயசுக்கு ஏத்த கதாபாத்திரங்களில். உங்கள வச்சு படம் எடுக்குறவங்க பணம் பாக்க தான் பாக்குறாங்க. உங்களால மக்களுக்கு அவங்க வாழ்க்கைல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தனும்னு நினச்சு படம் எடுக்கல.ஆனா நீங்க நினச்சா அது எல்லாத்தையும் மாத்தலாமே.
"மாநாடு" படம் பாத்து நல்லா இருக்குனு பாராட்டின நீங்க , "ஜெய்பீம்" படம் பாக்காமலா இருந்துருப்பீங்க.கண்டிப்பா பாத்துருப்பீங்க. personal -ஆ கூட team -ஐ பாராட்டி இருக்கலாம். public -ஆ நீங்க பாராட்டி இருந்தா கூட அது அரசியல் ஆகி இருக்கும்தான் இல்லைனு சொல்லல. ஆனா இன்னும் எத்தனை நாள் மத்தவங்களுக்காக உங்க கருத்து பேச்சு சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கப்போறீங்க. இது கூட சொல்ல யோசிக்கிற ,தயங்குற நீங்க எப்படி அரசியலுக்கு வந்துருப்பீங்க.வந்திருந்தா கண்டிப்பா ஜெயிச்சு இருப்பீங்க . நாங்க ஜெயிக்க வச்சிருப்போம்.ஆனா அப்பறம் ................
உங்க வயதையும் தாண்டி இப்போ வரைக்கும் நீங்க ஹீரோவா மட்டும் தான் நடிக்குறீங்க, டூயட் பாடுறீங்க , எதிரினு ஒருத்தன காட்றாங்க அவனை பொறட்டிப்போடுறீங்க , முடிவுல அவன் திருந்திடுறான். 46 வருஷமா இதையேதான் செய்றீங்க . Producers உங்கள முட்டாள் ஆக்குறாங்களா இல்ல நீங்க மக்கள/ரசிகர்களை முட்டாள் ஆக்குறீங்களானு தெரியல. (இன்னும் எங்கள பைத்தியக்காரங்களுனே நினைச்சுகிட்டு இருக்கீங்க இல்ல)

திரைப்படத்துல காட்டுவதை தான் மக்கள் உண்மைன்னு நம்புறாங்க. மக்களுடைய எண்ணங்களே திரைப்படங்களின் மூலமாத்தான் உருவாக்கப்படுது. 'பயமா ! எனக்கா !?'-னு வசனம் பேசி நடிக்குறீங்க. நாங்க தொண்டை கிழியுற அளவுக்கு கத்துறோம் ,கைதட்டுறோம். அதே நீங்க 'MAN vs WILD' -ல ஒரு புலி விசிட் பண்ணின இடத்துக்கு இறங்கி போய் பாக்க பயப்படுறீங்க. அது நடிப்புனு சொல்லி யாராவது சமாளிச்சாலும் நீங்க Bear Grylls -னுடைய கையை பிடிச்சுட்டு போனதுல இருந்தே தெரிஞ்சது எங்களுக்கு அது நடிப்பா ! நிஜமானு!!
மக்களை வழி நடத்துறவங்களைதான் தலைவர்னு கூப்பிடனும்.தலைவர் தலைவர்னு உங்கள ஏன் கூப்பிட்டோம்?கூப்பிடுறாங்க இன்னமும்.அரசியலுக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பாத்தோம்தான் ஆனா வரலை. அதுனால என்ன ? ஒரு தாய் தன் குழந்தைமேல வைக்குறது unconditional லவ்-னு சொல்லுவாங்க. அதாவது எந்த நிபந்தனையும் இல்லாத அன்பு.உங்க மேல எங்களுக்கு இருக்குற அன்பும் அப்படித்தான் .அது எப்பவுமே மாறாது அப்படியேதான் இருக்கும்.
' Life is very short ' . 100 வயசுவரைக்கும் நாம வாழ்ந்தாலும் உலகத்துடைய வயதை compare பண்ணி பாக்கும்போது ஒரு ஒரு மனிதருடைய வாழ்க்கையும் short தான். 40 / 50 வருடம் ஆரோக்கியமா இருப்போம் அப்பறம் நம்முடைய செல்களுக்கு வயதாகும் .வயதாக ஆக நம்முடைய உடம்புல ஏற்படுற மாற்றம் நமக்கு பெரிய தடையா இருக்கும். உங்களுக்கும் 70 வயசு ஆகிடுச்சு. இன்னும் எதுக்கு தயக்கம்? இன்னும் எதுக்கு யோசனை? இப்போவும் செய்யலைன்னா இனிமே எப்போ செய்யப்போறீங்க?

நீங்க உயரத்துல இருக்கீங்க.எல்லோரும் உங்கள தலையை தூக்கி பாக்குறோம்.அப்போ உங்களுக்கு (இன்னும்)எந்த அளவுக்கு அதிகமான பொறுப்பு இருக்கும் இருக்கனும்னு பாருங்க. உங்களை நம்புற உங்கள் மேல அன்பு வச்சுருக்குற ரசிகர்களுக்கு/மக்களுக்கு திரைப்படத்தையும் தாண்டி ஏதாவது செய்யலாமே. உண்மையை சொல்லனும்னா செய்யணும்னு எங்களுக்கு ஆதங்கம்னு கூட சொல்லலாம். அவ்வளவுதான்.

அரசியல் மட்டும் power கிடையாது .அரிஸ்டாட்டில் அவர்கள் நாடகங்களை போய் பார்த்தப்போ வியந்துட்டாராம். எவ்வளவு பெரிய விஷயங்களை மக்களுக்கு எவ்வளவு எளிமையா சொல்லிடுறாங்க நாடகத்தின் மூலமான்னு வியந்தாராம். நாடகத்திலிருந்து உருவானது தானே திரைப்படமும். அப்போ மக்களுக்கு நல்ல விஷயங்களை விதைக்குறதுல எவ்வளவு முக்கிய பங்கு திரைப்படங்களுக்கு இருக்கு. விதையா இருங்க .அட்லீஸ்ட் இனியாவது.
IF NOT NOW ,THEN WHEN ?
ஈலான் மஸ்க் -கிட்ட கேள்வி கேட்டா கூட பதில் கிடைக்கும் . நம்ம ஊரு ஸ்டார் கிட்ட கேள்வி கேட்டா எந்த பதிலும் கிடைக்காதுனு எனக்கு தெரியும்.

[உங்கள பத்தி ஒரு சின்ன வார்த்தை கூட தப்பா பேசினா பிடிக்காது எனக்கு.குடும்பத்துல இருக்குறவங்ககிட்ட கூட சண்டை போடுவேன்.என்னை மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க.எனக்கு கோவம் வர மாதிரி சிலபேர் உங்களப்பத்தி என்கிட்ட கேட்ட கேள்விகள் எனக்கு நியாயம்னு பட்டதால தான் அதை நான் உங்ககிட்ட இப்போ கேக்குறேன்]

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மதுரை மீனாட்சி அம்மன் - என் அனுபவம்

2015 -ல கொடைக்கானல் போனோம் . on the way மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணினோம்.ரொம்ப அழகான கோயில் அற்புதமான சிற்பங்கள் மண்டபங்கள் பார்க்க முடிஞ்சது . அங்க ஒரு tour guide இருந்தாரு அவருடைய உதவியோடு கோவிலை சுத்தி பாத்துகிட்டு இருந்தோம்.


கோயில ஒரு மரம் இருந்தது (பெயர் மறந்துட்டேன் மன்னிக்கணும்). எங்க tour guide அந்த மரத்தைப்பத்தியும் சொல்லிக்கிட்டே வந்தாரு. மத்த கோயில் மாதிரி இல்லாம இந்த மரத்தை Reverse -ல சுத்தணும்னு சொன்னார். அதாவது மத்த கோயில்  மரங்களை வலமிருந்து இடமா சுத்தினா இந்த மரத்தை இடமிருந்து வலமா சுத்தணும்னு சொன்னார்.அறிவியல் ரீதியா பாத்தா அந்த இடத்துல ஈர்ப்பு விசை அப்படிதான் இருக்கு. குழந்தை வேண்டி பிராத்திக்குறவங்க,கல்யாணம் ஆகணும்னு பிராத்திக்குறவங்க  அந்த மரத்துல தொட்டில், வளையல், மச்சள் நிற துணி, சிவப்பு நிற துணி, மஞ்சள் கயிறு இதுலாம் கட்டியிருந்தாங்க .

சரி நாமளும் ஒண்ணு கட்டுவோமேன்னு ஒரு தொட்டில் வாங்கி கட்டினோம் . அப்போ அந்த tour guide சொன்னாரு , என் மாமியார் ரெட்டை தொட்டில் காட்டினாங்க அதே மாதிரி எங்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்ததுனு . எனக்கு எப்பவுமே ட்வின்ஸ் வேணும்னு ஒரு ஆசை இருந்தது. ஒரு ஆண்  ஒரு பெண்ணுன்னு ஒரு சமயத்துல ரெண்டு குழந்தைகள் (அப்பறம் free-ஆ இருக்கலாம்னு ஒரு நப்பாசையும் கூட).இப்போத்தானே ஒரு தொட்டில் கட்டினோம் இப்போ சொல்றீங்களேனு நான் இன்னோர் தொட்டில் வாங்கிட்டு வந்து கணவரை வம்பு பண்ணி  கட்ட வச்சேன். கொஞ்ச இடைவெளியில் ரெண்டு தொட்டில் கட்டினேன். ஆனா ட்வின்ஸ் வேணும்னு ஆசைப்பட்டு.

அப்பறம் அத அப்படியே மறந்துட்டேன்.2016-ல எனக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.2017-ல ரெண்டாவது குழந்தை. ரெண்டு பேருக்கும் இடையில 10 மாசம் வித்தியாசம். ரொம்ப நாளுக்கு அப்பறம் தான் மதுரை கோயிலுக்கு போனதும் அங்க  நான் இப்படி தொட்டில் கட்டினதும் நியாபகம் வந்தது எனக்கு. நான் கடவுளை நம்புறவ. அப்போ தான் என் சின்ன மூளைக்கு உரைத்தது இது கடவுள் அருள் தான்னு . நான் நடக்கும்னு  நம்பிக்கையோட வேண்டினேன். ஆனா ஒரு சின்ன இடைவெளி விட்டு தொட்டில் கட்டினேன் அதே போல ஒரு சின்ன இடைவெளி விட்டு ரெண்டாவது குழந்தை . 

அதை நான் உணர்ந்ததுல இருந்து , தெரிஞ்சவங்க தெறியாதவங்கனு யாரு குழந்தை வரம் கேட்டு மனசு கஷ்டப்பட்டாலும் ,கோயிலுக்கு போனாலும் ,  அவங்களுக்கு என்னுடைய அனுபவத்தை சொல்லி மதுரை மீனாட்சி அம்மனை வேண்ட சொல்றேன். கடவுளை நம்புற நான் இதைஅந்த மதுரை மீனாட்சி அம்மனின்  அருள்னு சொல்லாம வேற என்ன சொல்ல . 


(இது மதத்தை திணிக்கவோ அல்லது  கடவுளை வணங்குங்கன்னு சொல்லவோ அல்லது இந்த கடவுளை வணங்குங்கன்னு சொல்லவோ நான் எழுதல. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்குறேன்.) 


PC : Wikipedia

வியாழன், 14 அக்டோபர், 2021

மாற்றத்தை விதைப்போம்.

 


சமீபத்துல என் கணவருடைய பாட்டி கீழவிழுந்து , அவங்களுக்கு கை முறிவு,இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுடுச்சு . இந்தியாவுல பகல்னா அமெரிக்காவுல தான் நைட் ஆச்சே. நடுராத்திரி போன் கால் வந்தது . அவங்கள முதல்ல எங்க சொந்த ஊரான விருதாச்சலத்துல இருந்து சென்னைக்கு கூப்பிட்டு வந்தாங்க . 

அவங்க சென்னை வந்து சேருறதுக்குள்ள ,என் கணவர் எந்த ஹாஸ்பிடல்-ல சேர்க்க  முடியும் எவ்வளவு செலவு ஆகும்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தார் போன்ல .

கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரத்துக்கும் மேல பல இடத்துல விசாரிச்சு ஹாஸ்பிடல்  முடிவு பண்ணினாங்க. அதுக்கும்  அவங்க சென்னை வந்து சேருறதுக்கும்  சரியா இருந்தது. சென்னைல ஒரு நல்ல பெரிய ஹாஸ்பிடல் அது. எலும்பு முறிவுக்கான சிறப்பு மருத்துவமனை அது . அந்த  ஹாஸ்பிடல்ல டாக்டர் பாட்டிய செக் பண்ணிட்டு ஆப்ரேஷன் பண்ணனும். கைல எலும்பு முறிவுக்கு பிளேட்டு  வைக்கணும்,இடுப்பு எலும்பு முறிவுக்கு  ராடு  வைக்கணும்னு சொல்லிட்டார். அதுக்கு ஒரு 3 லட்சம் செலவாகும்னு சொல்லிட்டார்.சரினும் எங்க சைடுல இருந்து சொல்லியாச்சு. 

ஒரு அரை மணிநேரத்துக்கு அப்பறம் ,எவ்வளவு ஆகும்னு  இன்னும் நிறையா ஹாஸ்பிடல்ல,  ஆன்லைன்ல X-Ray காட்டி விசாரிச்சப்போ ஒண்ணேமுக்கால்ல இருந்து ரெண்டு லச்சம் ஆகும்னு சொன்னாங்க. ஆனா பாட்டியை சேர்த்த ஹோச்பிடல்ல டாக்டர் 3 லட்சம்னு சொல்லிட்டார். இன்சூரன்ஸ் இல்ல பாட்டி ஹெல்த்க்கு . கைல அவ்வளவு காசு இல்ல என்ன பண்றதுனு தெரியல. வீட்ல யாராவது அமெரிக்காவுல இருக்காங்கனு தெறிஞ்சா பில் எவ்வளவு முடியுமோ அவ்வ்வளவு ஏத்துவாங்க. அதனாலயே வெளிநாட்டுல வேல செய்றாங்கன்னு சொல்லவேண்டாம்னு சொல்லிட்டோம். 

[அதென்னவோ தெரியல வெளிநாட்டுல வேல செஞ்சா அப்படியே ஊரையே வாங்குற அளவுக்கு காசு இருக்கும்னு நினச்சுக்குறாங்க!! நம்ம ஊரு மாதிரியே தான்,இங்க இருக்குற ஒரு ஒரு இந்தியர்களும் எவ்வளவு  கடுமையா உழைக்குறாங்க. இவ்வளவு சம்பளம் தருவோம்னு சொல்லி அனுப்பிவைக்குறாங்க இங்க, ஆனா கிடைக்குறது என்னவோ சொர்ப்பமாத்தான் இருக்கு .காலைல ஆஃபீஸ் போனா நைட் தான் விடுறாங்க மாடு மாதிரி உழைக்குறாங்க . இந்த கொரோனா காலத்துல வீட்ல இருந்தே வேலை செய்யலாம்னு சொன்னாலும்  ஆஃபீஸ்யே போய்  தொலையலாம்னு அளவுக்கு, அதே அளவுக்கு சொல்லப் போனா அதை விட அதிக அளவுக்கு வேலை செய்யுறாங்க. வீடு வாங்கணும்,வீட்டு கடனை அடைக்கணும் , அப்பாவோட அம்மாவோட  ஹாஸ்பிடல் செலவை பாக்கணும் , அக்கா தங்கச்சி தம்பியை படிக்க வைக்கணும் கல்யாணம் பண்ணித்தரனும் இப்படி எவ்வளவோ வேலைகளையும் பொறுப்புகளையும் வச்சுக்கிட்டு வேலைபாக்குறாங்க .அதுலாம் தெரியாது மத்தவங்களுக்கு . வெளிநாட்டுல வேலைசெய்றாங்கன்னு மட்டும் தான் தெரியும் . சரி அத விடுங்க ! ]

மறுபடியும் போய் கேளுங்கன்னு சொன்னதும்,அவங்களும் போயி கேட்டாங்க ஹாஸ்பிடல்ல  ,  ரெண்டு லச்சம்னா அப்போ முடியுமான்னு கேக்குறாங்க. மூணு லச்சத்துல இருந்து ரெண்டு லச்சம் வந்துட்டாங்க. அடப்பாவிகளா அப்போ ஒரு லச்சம்ங்குறது எவ்வளவு காசு தெரியுமா ? எப்படி ஒரு நோயாளிக்கிட்ட இப்படி அதிகமா வசூலிக்க மனசு வருது. அப்போ,இதுதான்னு ஒரு fixed amount இல்லயா . சொல்லி பாப்போம்னு சொல்றீங்களா. 

மருத்துவம்ங்குறது ஒரு சேவைன்னு மாறி பணம் இருந்தா நல்ல மருத்துவம் தரமான மருத்துவம்ங்குற  காலத்துல வாழுறோம் நாம். புது புதுசா நோய் வருது , நம்ம நாட்டுல இப்போ இந்த கொரானாவுக்கு தடுப்பூசி கூட காசு குடுத்துதானே போடுறோம். தைரியமா நம்பிக்கையா அந்த தடுப்பூசியை போட்டுக்கணும்னா தனியார் மருத்துவமனைல போட்டுக்கிட்டாதான் safe -னு தானே போட்டுக்கிட்டோம். நம்ம நிலைமை இப்படி தானே இருக்கு .  ஆமா நாடே தனியார் வசம் தான் போகப்போகுது .அத பத்தி இப்போ என்ன பேசிக்கிட்டு.நம்ம விஷயத்துக்கு வருவோம்.

அப்போ காசுக்குத்தான் மருத்துவம் ,சேவைக்கு மருத்துவம் இல்லைனு மருத்துவர்களுக்கு எண்ணம் எப்படி வருது? எவ்வளவோ காசு குடுத்து , செலவு பண்ணி மருத்துவம் படிக்குறதுனாலதான் அவங்களுக்கு இந்த எண்ணம் வருது . போட்ட காச எடுக்கணும்  , சம்பாதிக்கணும்னு மட்டும்தான் நினைக்கிறாங்க. சம்பாதிக்க எத்தனையோ படிப்புகள் வேலைகள் இருக்கு .கடவுளுக்கு  சமமா மதிக்கிற மருத்துவம் ஏன்? அப்போ தப்பு எங்க இருந்து ஆரம்பிக்குது ?சரியான படிப்பு நாம குடுக்கல  .தரமான படிப்பு வேற சரியான படிப்பு வேற.Pre -KG -ல இருந்தே  ஆயிரக்கணக்குல லச்சக்கணக்குல செலவு செஞ்சு படிக்குறதுனால அவங்களுக்கு படிப்பு காசா மட்டும் தான் தெரியுது. காசு சம்பாதிக்க்கணும்னு மட்டும் தான் எண்ணம் வருது . தரமான படிப்பை இலவசமா இல்ல ரொம்ப குறைஞ்ச  கட்டணத்துக்கு பிள்ளைகளுக்கு கொடுத்தா அவர்களுகையை எண்ணம்,வளக்கப்படுற விதம் ,ஒரு விஷயம் மேல அவங்க பாக்குற பார்வை வேற மாதிரி இருக்கும். பிள்ளைங்களுக்கு படிப்பை நல்ல விதத்துல நல்ல முறையில குடுத்தோம்னா வாழ்க்கை நல்லா இருக்கும் வாழ்க்கை நல்லா இருந்தா நாடு  நல்லா இருக்கும். காலம் மாறும் கண்டிப்பா .  அந்த மாறின காலத்துல நாம இருக்க மாட்டோம் ஆனா நம் தலைமுறை இருக்கும். மாற்றத்தை விதைப்போம்.

புதன், 29 செப்டம்பர், 2021

புதிய பயணம்

சின்ன வயசுல இருந்தே மீடியா-side மேல எப்பவுமே எனக்கு ஒரு ஆர்வம் இருக்கும் அதுவும் நியூஸ் ரீடிங் ,டப்பிங் அதுமேலலாம் எப்பவுமே ஒரு தனி ஆர்வம் தான் எனக்கு. அந்த ஆர்வம் தான் என்ன Blog எழுத வச்சது (https://srivalaipakkam.com). 

Technology வளர வளர அந்த ஆர்வம் Youtube Channel(https://youtube.com/redpumkin)-ஆ வளர்ந்தது. அடுத்த என் ஆர்வத்துக்கு வேல குடுக்குற விதமா என் நண்பி வாருணி விஜய் ,பிரவீணா நாவல் (https://www.praveenanovels.com/)-ங்குற பேர்ல நாவல்கள் இழுத்துகிட்டு இருக்காங்க . பல நாவல்கள் எழுதிட்டாங்க ஏகப்பட்ட வாசகர்கள் அவங்களுக்கு . அவங்களுடைய நாவல்களை ஆடியோ வடிவத்துல Youtube-ல பதிவிடணும்னு அவங்க கேட்டப்போ எனக்கு பெரிய சந்தோசம் . எனக்கு பிடிச்ச வேலை எனக்கு வந்துருக்குனு . 

அதன்படி அவங்களுடைய ஒரு நாவலான 'அன்பே நீ இன்றி' முழு நாவலையும் ஆடியோ வடிவத்துல பதிவேற்றியாகிவிட்டது (https://www.youtube.com/channel/UCG6O3ukkkwRSkLylWQaBFxw). புத்தகவடிவத்துல ப்ரவீனாவின் நாவலை படித்த வாசகர்கள் அதை ஆடியோவாகவும் கேட்டு ரசிக்குறாங்க . ஆடியோவில் இருக்குற குரலையும் பாராட்டுறாங்க .அது எனக்கு ரொம்பமே சந்தோஷத்தையும் இன்னும் ஆர்வத்தையும் குடுத்துருக்கு . வாசகர்களுக்கு நன்றி . 

இந்த opportunity குடுத்த ப்ரவீணாவிற்கும் நன்றி .இவ்வளவு வாசக ரசிகர்கள் இருக்குற ப்ரவீனாவின் வேலையில் ஒரு சின்ன Part-ஆ நான் இருக்குறதுல ரொம்பவே சந்தோசம் .

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

எல்லோருக்குமே இப்படி ஒரு Refreshment தேவை

 சமீபத்தில மினசோடா போயிருந்தோம். போகும்போதே என்னோட தோழி சுஹாசினி பாண்டியன் கரெக்ட்-ஆ மெசேஜ் பண்ணின்னா .ஊர்ப்பக்கம் வந்த கண்டிப்பா வா-னு. கூப்பிடலைனாலே அங்க போயி நிப்போம்.கூப்பிட்ட போகாம இருப்போமா. மினசோடா போய் இறங்கிய அடுத்த நாள் அவ வீட்டுக்குத்தான் போனோம்.  

அழகான அமைதியான வீடு அறிவான ரெண்டு பிள்ளைங்கள்னு செட்டில் ஆகி இருந்த அவளை பாக்க ரொம்பவே சந்தோஷமா இருந்தது. பலலலலலல (எவ்வளவு காஞ்சி போயி இருந்தா இத்தன  'ல' போடுவேன்னு பாருங்க) வருஷத்துக்கு அப்பறம் என்னுடைய friend-அப்படினு ஒருத்தரை மீட் பண்றேன் நான். நிறையா ஃப்ரண்ட்ஸ்  இருக்காங்க .ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் ,B.sc ஃப்ரண்ட்ஸ், M .sc ஃப்ரண்ட்ஸ் , ஹாஸ்டல் ஃப்ரண்ட்ஸ்(படிச்சது எல்லாம் வேற வேற ஊரு, வேற வேற இடம்) அப்பறம்  வேலைக்கு போன போது அங்க ஃப்ரண்ட்ஸ் இப்படி நிறையா( கம்மியா ) ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. அதுல சுஹாசினியும்  நானும் ஒரே ஆஃபீஸ்ல டெவலப்பர்-ஆ  வேல பாத்தோம்.

நான் ஆரம்பத்துல இருந்தே டெவெலப்பிங்  சைடு தான் போகணும்னு உறுதியா இருந்தேன். அதுக்கு காரணம் என்னுடைய குருக்கள்.காலேஜ்  படிச்சபோது எனக்கு கம்ப்யூட்டர் சென்டர்ல டீச்சர் -ஆ இருந்த சரவணன் (இந்த பையனாதான் ஃபியூச்சர்ல கல்யாணம் பண்ணுவேன்னு சத்தியமா கனவுல கூட நினைச்சி பாத்ததில்ல நான்). அடுத்து M .sc படிச்சப்போ ,ஜாவா தாத்தானு ஒருத்தர்.அவரு பேர் கூட தெரியாது ஆனா எல்லாரும் அவரை ஜாவா தாத்தான்னு தான் கூப்பிடுவோம். அப்படி ஒரு முதுமை ஆனா அவர் கோடிங் டெவெலப் பண்ற அந்த அழகு திறமை, கை நடுங்குற தல்லாத வயசுலயும் கோடிங் மேல அவருக்கு இருந்த அந்த ஆர்வம் . இவங்கதான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் .இவங்கள பாத்துதான் டெவெலபிங்-ல ஒரு ஆர்வம் வந்ததே.

அப்டி டெவெலப்பிங்  சைடு  வேலைபாத்தப்போ தான் சுஹாசினி எனக்கு  பழக்கம்.சுஹாஸ் பேரை  எப்பவுமே ofc boss -னு தான் save  பண்ணி வச்சுருப்பேன்.அப்படி ஒரு BOSS அவங்க.கிட்டத்தட்ட ஒரு 10 , 11 வருஷத்துக்கு அப்பறம் சுஹாசினியை இப்போதான் பாக்குறேன். 

அதே நக்கல் ,நையாண்டித்தனம், அதே சிரிச்ச முகம், எதையும் பெருசா சீரியஸ்-ஆ எடுத்துக்காத, அதிர்ந்து பேசாத  குணம்,பொறுமை முக்கியமா குழந்தைங்ககிட்ட ,அதே சுஹாஸ் தான். ஒரு மாற்றமும் இல்ல . (எனக்கு பொறுமை கொஞ்சம் கம்மிதான் அதுவும் நமக்குன்னு பிள்ளைங்கள்  ஆனதுக்கு அப்பறம் பொறுமை ரொம்ப கம்மியாகிடுச்சு). எனக்கு ஆச்சர்யமா இருந்தது எப்படி பிள்ளைங்ககிட்ட  கோவப்படாம இருக்கானு . பையன் பேரு  கிருஷ்ணா ,பொண்ணு பேர் வைஷு .அவ்வளவு பொறுப்பு ,அறிவு .அவ்வளவு நல்லா வளத்துருக்கா. கடவுள்கள்ல பேபி கிருஷ்ணானா அவளுக்கு ரொம்ப பிடிக்கும் .அதனாலதான் பையனுக்கு க்ரிஷ்ணான்னு பேர் வச்சுருக்கா (அப்டித்தான் இருக்கும்).

சுஹாஸ் என்ன பத்தி ரொம்ப பெருமையா பேசிக்கிட்டே இருந்தா. என் அண்ணா அண்ணி கணவன்னு எல்லார் கிட்டையும் என்னப்பத்தி பெருமையா சொல்லிகிட்டே இருந்தா (காதுல தேனா பாஞ்சதுனு சொல்லலாம். ஒரு கட்டத்துல குடுத்த காசாவிட அதிகமா சொல்லிறியேமா-னு கூட நினைக்க தோணிச்சு).  இத்தனை வருஷத்துல வாழ்க்கைல எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் , கஷ்டங்கள் சந்தோஷங்கள்னு லைஃப் வேற மாதிரி ஆகிடுச்சு. இல்ல இல்ல நான் வேற மாதிரி ஆகிட்டேன்.அதான் கரெக்ட் .  

நம்மள பத்தி நமக்கு தெரியும் அடுத்து நம்ம அப்பா அம்மாவுக்கு ஃப்ரண்ட்ஸ்க்கு தான் நல்லா  தெரியும். கல்யாணம் குழந்தைகள்னு என்ன நானே சுறுக்கிக்கிட்ட காலம்தான் இது.என்ன செஞ்சாலும் சப்போர்டிவ் -ஆ இருக்குற கணவன் .மேல எதாவது படி, வேலைக்கு போ , அடுப்படியில மட்டுமே இருக்காதனு சொல்ற கணவன்தான் , ஆனா பெரும்பாலான பெண்கள் மாதிரியே ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அந்த வட்டத்துக்குள்ளையே இருக்க ஆசைப்பட்டேன் . அதுக்கு இன்னோர் பேர் சோம்பேறிதனம்னு  கூட சொல்லிக்கலாம் .   அடுத்தடுத்த பிள்ளைங்கள் , அது இன்னும் வசதியா போச்சு எனக்கு. யோசிச்சு பாத்தா 30 வருஷ பழக்கத்தை 5/6 வருஷம் மாத்திடுது இல்ல . இதுக்கு நடுவுல anxiety , சாவு,பயம்னு  மத்த விஷயங்கள் வேற. 

சுஹாஸ் என்ன பத்தி சொல்ல சொல்ல எனக்கே என்னப்பத்தி புதுசா கேட்ட மாதிரி இருந்தது. இப்படித்தான் கவுண்டர் குடுப்பா, இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவா .இப்படித்தான் code பண்ணுவா,இவ்வளவு சீக்கிரம் பண்ணுவானு சொன்னபோதுலாம் , இப்படியா நா இருந்தேன்.இப்படியெல்லாமா செஞ்சேன்னு தோணிச்சு. (நம்மள யாரவது பாராட்டிட்டா  அவ்ளோ சந்தோஷமா இருக்கு இல்ல ). என்ன நானே புதுசா பாத்தமாதிரி இருந்தது. (Code பண்ணுவேன்னு எனக்கு தெரியும் ஆனா நமக்குள்ள இவ்வளவு திறமைகள் ஒளிஞ்சு கிடந்ததா .நிறையா மறந்துபோச்சு )

அனேக பொண்ணுங்க மாதிரிதான் நானும் . ஒரு கட்டத்துல குடும்பம் பிள்ளைங்கள்னு மத்த எல்லா விஷயங்களையும்(நண்பர்களையும்) பின்னுக்கு தள்ளிட்டு போயிடுவோம்.அப்டித்தான் நானும் இருந்தேன்.

இந்த 36 வயதினிலே வசந்தி  மாதிரியே. வயசாகிடுச்சு , பேமிலி ஆகிடுச்சு அவ்ளோதான்னு இருந்தேன் . எப்படி அந்த அந்த படத்துல வசந்திக்கு -க்கு சூசன் வந்து ,வசந்தி யாருனு வசந்ததிக்கே புரியவச்ச  மாதிரி  எனக்கு சுஹாஸ் , என்ன பத்தி சொல்லி சொல்லி நான் இப்படியா இருந்தேன்  .ஏன் இப்போ இப்படி இருக்கேன்னு என்க்கு என்ன புரிய வச்சுருக்கா. 

ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் இன்னைக்கு நான் மறுபடியும்  ஒரு புது  டெவெலப்பிங் language கத்துக்கலாம்னு ஆரம்பிச்சுருக்கேன்னா அது சுஹஸ்னாலதான். code படிக்க படிக்க எவ்வளவு ஆர்வமா இருக்கு?.எப்பவுமே பிடிச்ச  விஷயத்தை செஞ்சோம்னா அதுக்கான மதிப்பே தனிதான். வேண்டாம் போதும்னு ஒதுக்கி வச்சத அட்லீஸ்ட் படிச்சு தெரிஞ்சுப்போம்னு மறுபடிச்சும் ஆரம்பிச்சுருக்கேன். சோம்பேறித்தனமா இருந்த நிறைய விஷயங்கள் இன்னைக்கு செஞ்சுருக்கேன் .இதோ இந்த blog எழுதிருக்கேன். என் blog கொஞ்சம் டெவெலப் பண்ணிருக்கேன். இது எல்லாமே சுஹாஸ் உன்னாலதான்.

இதுவும் ஓரு நல்லதுக்குதான் . கடவுள் சுஹாஸ் வடிவத்துல வந்து எனக்கு ஹெல்ப் பண்ணிருக்காங்கனு தான் நினைக்குறேன்.


சுஹாஸுக்கு நன்றி.


வெள்ளி, 18 ஜூன், 2021

குக் வித் கோமாளி - ஒரு ரசிகையின் பார்வையில்





இந்த நிகழ்ச்சியை பாக்க  சொல்லி என்னை வற்புறுத்தியது என்னோட அண்ணி கார்த்திகா தான்.ரொம்ப நல்லா  இருக்கு stress relief ஆ இருக்கு கண்டிப்பா பாருங்க உங்களுக்கு பிடிக்கும்னு என்கிட்ட பலதடவை சொன்னாங்க.ஆனா நான்தான்  கேக்கல.

ஐயோ இரிட்டேட்ஆ இருக்க போகுது.எனக்கு வேண்டாம் நீங்க பாருங்க இது மாதிரியே சொல்லி மழுப்பிகிட்டு இருந்தேன்.

இன்ஸ்டாக்ராம்ல பாத்தா எங்க பாரு இந்த நிகழ்ச்சியோட கிளிப்பிங்ஸ்-ஆ போட்டுக்கிட்டே இருந்தாங்க. என்னடா அப்படி இருக்கு இந்த நிகழ்ச்சியிலன்னு பலதரம்  நினச்சேன்.

ஒருதரம் ஸ்ரேயா கோஷல் ஷிவாங்கிக்கு விஷ் பண்ணி ஒரு போஸ்ட் இன்ஸ்டாக்ராம்ல போட்டு இருந்தாங்க .அட யாருடா இந்த ஷிவாங்கினு அப்போதான் first time ஷிவாங்கிய பத்தி  பாத்தேன். 

அப்பறம் நாங்க ட்ரிப் போயிருந்தப்போ இந்த ஷோ-வோட பைனல் எபிசோட் பாத்தேன். காதுல ஹெட் போன் போட்டுக்கிட்டு டிரைவ் பண்ணிகிட்டே கேட்டுகிட்டு போனேன். லூசு மாதிரி சிரிச்சுகிட்டே வண்டி ஓட்டிக்கிட்டு  இருந்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சியிருந்தது. அன்னைக்கு நைட் என் அண்ணிக்கு கால் பண்ணி நான் பைனல் எபிசோட் பாத்தேன் ரொம்ப பிடிச்சியிருந்ததுனு அது பத்தி பேசிக்கிட்டே இருந்தோம் நானும் அண்ணியும்.பேசுனோம் சிரிச்சோம் ஷேர் பண்ணிக்கிட்டோம்.

சரி அடுத்தது  பாப்போமேன்னு பைனலுக்கு முன்னாடி எபிசோட் பாத்தேன். ஓகே அடுத்தது பாப்போம் னு அதுக்கு முன்னாடி எபிசோட்னு reverse-ல  பாத்துகிட்டே வந்தேன். நாங்க ரெண்டு மாசம் ட்ரிப் முடிஞ்சு வந்தப்போ எல்லா எபிசோட்டும் பாத்து முடிச்சியிருந்தேன்.சொன்னப்போலாம் நம்பள. 

ஆனா நிஜமாவே இந்த ஷோ மனசுக்கு சந்தோஷத்தை தருது. நிறைய positivity  கொடுக்குது. நம்மளையே மறந்து சிரிக்க முடியுது.சந்தோஷமா தூங்க முடியுது.
இப்போ இந்த ஷோ first -ல இருந்து இப்போ ரெண்டாவது தரம் பாத்துகிட்டு இருக்கேன்.டெய்லி ஒன்னு கண்டிப்பா பாத்துடனும்னு தினம் தினம் ஒன்னு ஒண்ணா பாத்துகிட்டு இருக்கேன்.

நிகழ்ச்சியப்பத்தி சொல்லும்போது இந்த நிகழ்ச்சியில இருக்குறவங்களைப் பத்தியும் சொல்லனுமா இல்லையா.

யாரு இந்த ஷிவாங்கினு பாக்க ஆரம்பிச்சதால ஷிவாங்கில இருந்தே ஸ்டார்ட் பண்ணுவோம்.

ஷிவாங்கி : கள்ளம் கபடம் இல்லாத இந்த சின்ன பொண்ணு குணத்தை பாக்கும் போது இந்த பொண்ணு மாதிரியே எல்லாரும் இருந்தா  உலகமே அழகாயிருக்கும்னு ஆசையா இருக்கு. crush -ஆ இருந்தாலும் அந்த crush win  பண்ணும்போது எல்லாம் ,தானே win  பண்ணின மாதிரி சந்தோஷமா இருக்குறது . crush -ஓட சின்ன சின்ன சந்தோஷத்தையும் பாத்து ரசிக்கிறதுனு இந்த பொண்ணு நிஜமாவே வேற லெவல்- ங்க .

ஷிவாங்கி பத்தி பேசினா அடுத்து அஸ்வின் பத்தி சொல்லலைனா சாமி குத்தமாகிடுமே.
சோ அடுத்து அஸ்வின் 

அஸ்வின்: பாக்க ஸ்மார்ட்-ஆ  செய்யும் தொழிலே தெய்வம்னு செய்யிற சமையல்ல அலெர்ட்-ஆ , செஞ்ச எந்த சமையலும்  நோ ரிப்பீட்டா  எல்லா பொண்ணுங்க கண்ணுக்கும் இவரு ஹாட்-ஆ (சொன்னேன்ல நா ரெண்டாவது தடவை எல்லா எபிசோடும் பாக்குறேன்னு).  ஜோக்ஸ் அப்பார்ட் ,  சமையல்லாம் ஆம்பளைங்களுக்கு  ஒன்னும் கஷ்டமான வேலை இல்லனு கான்டினென்ட்  வகையில விதவிதமா செஞ்சு அசத்துனது ஒருபக்கம்னா,crush  crush-னு ஒரு பொண்ணு (இல்ல ரெண்டு  பொண்ணு) தன்னை சுத்தி சுத்தி வந்த போதும்கூட ஒரு சின்ன அளவுல கூட மனசை காயப்படுத்தாம சஞ்சலம் இல்லாம கண்ணியமா நடந்துக்கிட்டு , இம்யூனிட்டி-ல தோத்தாலும் பரவா இல்லாம விடு விடு-னு  சொல்லுமா ,என்னமா, செய்யும்மானு ... செம ப்ரோ..உங்கள ரொம்ப நல்லா வளத்து  இருக்காங்க உங்க வீட்ல. உங்ககிட்ட முதல் 10 எபிசோடுக்கு அப்பறம் நல்ல மாற்றம் தெரிஞ்சது.இறுக்கமா இருந்த நீங்க செமி பைனல் கிட்டலாம் ரொம்பமே ஜாலியா மாறிட்டீங்க.ஷிவாங்கிக்கிட்ட ,ஹோ  அப்போ உங்க அண்ணாதான் முக்கியம் ஹும் ஹும் -னு சேட்டை பண்ற அளவுக்கு மாறிட்டீங்க.

ஷிவாங்கி பத்தி அஸ்வின் பத்தி சொன்னா அப்போ மச்சானை பத்தி சொல்லாம இருக்க முடியுமா?

புகழ் : புகழ பாக்கும் போது , இது உலக நடிப்புடா சாமின்னு சொல்லாம இருக்க முடியல.  ஆமா எங்க கத்துக்கிட்டீங்க இந்த நடிப்பை? நடிப்பு மட்டும் இல்ல வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரனா இருக்கீங்க புகழ் . என்னதான்  ஷோ-ல கோமாளியா இருந்தாலும் நீங்க pair ஆகுற குக்குக்கு செமையா ஹெல்ப் பண்றீங்க எந்த வேலைனாலும் full effort போடுறீங்க. அதுதான் உங்கள  இன்னைக்கு இந்த இடத்துல இருக்க வச்சுருக்குனு தோணுது பாக்கும்போது. பேருக்கு யேத்த மாதிரி புகழோடு வாழுங்க என்னைக்கும்.

பாபா பாஸ்கர்: இந்த மனுஷனுக்கு எப்படித்தான் இவ்வளவு எனர்ஜியோனு பாத்து பொறாமை படுற அளவுக்கு இருக்காரு இவர். முடியும்டா முடியும்டா , தெரியலைனாலும் முயற்சி பண்ணுவேண்டானு முயற்சி பண்ணிகிட்டே இருந்தீங்க பாருங்க செம மாஸ்டர்.  உங்க எனர்ஜியை உங்கள சுத்தி இருக்குறவங்களுக்கும் கொடுத்தீங்க. 

பாலா : இந்த உடம்புக்குள்ல எங்க இருந்து இவ்ளோ கவுண்டர் வருதுன்னு தெரியல. ஏற்கனவே யோசிச்சு வச்சுருப்பீங்களா இல்ல on  தி sopt எல்லாம் வருதான்னு தெரியல. ஆனா உங்க கவுண்ட்டர் எல்லாம் வேற ரகம் தம்பி.life -ல  முன்னுக்கு வந்துடனும் வந்துடனும்னு  துடிப்பும் தவிப்பும் டயமிங் மிஸ் ஆகும்போது  உங்க வார்த்தைகள்ல தெரியுது. கண்டிப்பா உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கடவுள் கொடுப்பார்.

பவித்ராலட்சுமி : cute-ஆனா அழகான தமிழ் பேச தெரிஞ்ச பொண்ணு . effort எடுத்து சமைக்க முயற்சி பண்ணினீங்க. எல்லா புகழும் புகழுக்கேனு சொன்னீங்க பாருங்க அங்க நிக்குறீங்க நீங்க. பெரிய ரசிகர் பட்டாளமே உருவாக்கிட்டீங்க உங்களுக்குனு.

ரித்திகா :  இவங்கள பாத்ததும் நான் ஸ்ரீதிவ்யானு நினச்சேன். behindwoods award -ல தான் இவங்கள பாத்தேன்.இவங்களவச்சு  பாலா ஒரு பாட்டு பாடினாரு, மூணாவது ரவுண்டுல எலிமினேட் ஆகிடுச்சேனு அப்போ தான் ஹோ , இவங்க இந்த ஷோ-ல இருக்காங்க போலன்னு நினச்சேன்.show பாத்தபோது பாலாவுக்கே கவுண்டர் கொடுத்து off பண்ணின பெருமை இந்த பொண்ணுக்கே போய்சேரும். ஸ்ரீதிவ்யா  மாதிரியே நீங்க சினிமால ஒரு ரவுண்டு வரணும்.

ஷகிலா :  வேற வாழ்க்கையை ,வேற விதமான ரசிகர்களை இந்த நிகழ்ச்சி உங்களுக்கு கொடுத்துருக்கு. உங்களுடைய இன்னொரு முகமும்  ,உங்களுடைய கோவமும் ,பாசமும் நாங்க தெருஞ்சுக்க முடிஞ்சது .வாழ்க்கைல எல்லாமும் நமக்கு அமையுற சந்தர்ப்பங்கள் தான்னு உங்களை பாக்கும்போது தெரிஞ்சுக்க முடியுது.  

கனி : கனி நீங்க ஏன் இன்னும் சினிமாவுல நடிக்கலைனு தெரியல. எதார்த்தமா , எதார்த்தமான வம்பு பேச்சோடு அழகா நடிப்பு வருது உங்களுக்கு. முயற்சி பண்ணலாமே! உங்களுடைய சமையல் எல்லாம் அருமை .

சுனிதா : சுனிதாவை எனக்கு ஜோடி நம்பர் ஒன் -ல இருந்தே ரொம்ப பிடிக்கும். எப்படி சிவகார்திகேயனுக்காக ஜோடி நம்பர் ஒன் பாப்பேனோ அதுமாதிரி சுனிதாவுக்காகவும் பாப்பேன். அது ஒரு அழகிய கானா காலம். அழகா  தமிழ் பேசுறீங்க. தமிழ் பேச தெரியாதவங்க தமிழ் பேசுற அழகே தனிதான். (பேசத்தெரியாதவங்க மாதிரி நடிக்குறவங்க இல்ல) . சூப்பர் சுனிதா.

மணிமேகலை : உங்கள சன் டீவில காம்பியர் பண்ணி பாத்துருக்கேன்.ஆனா இவ்ளோ வாயா இருப்பீங்கனு தெரியாது. எல்லாருகிட்டயும் ரொம்ப உரிமையா அதே நேரம் எல்லாத்தையும் சகஜமா எடுத்துக்கிட்டு ஒரு வேலைபாக்குறது பெரிய விஷயம். நல்லா இருக்கணும்  ..நீங்க நல்லாலாலாலாலா வருவீங்க. 

மதுரை முத்து , தங்கதுரை :  முடியலடா சாமி.இப்போ  நான் ஒருகேள்வி கேக்கட்டா  : பாம்புக்கு ஒரு  வடைன்னா ரொம்ப பிடிக்கும் அது என்ன வடை தெரியுமா? ...
தவளை வடை .. ( தெரியுதா !தெரியுதா ! அப்டித்தான் இருக்கும் எங்களுக்கும்).

சக்தி : இன்னும் நிறையா கத்துக்கோங்க நல்ல எதிர்காலம் உங்களுக்கு .

தீபா (கா) :  ஆனாலும் , எப்படி அக்கா ஒண்ணுமே சமைக்க தெரியாம இந்த ஷோ-க்கு நீங்க வந்தீங்கன்னு தான் தெரியல. செம guts -கா. ஆனா ஒரு சந்தோஷம் என்ன விட சமையல்ல எதுவும் தெரியாத ஒருத்தங்க இருக்காங்கப்பா இருக்காங்க.  

செஃப் - தாமு சார், பட் சார்
  என் அம்மா தாமு சாரோட பெரிய fan . வியாழக்கிழமை  சாயந்தரம் 6 மணி ஆனாலே ஜெயா டிவி போட்டு உக்காந்துப்பாங்க . அவருடைய ரெசிபி தான் அவங்க குக்கிங் டிப் நோட்-ல அதிகமா இருக்கும்.அப்டித்தான் நானும் அவங்க கூட சேந்து பாத்துருக்கேன். பட் சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் போலன்னு தான் நினைச்சுட்டு இருந்துருக்கேன்.ஆனா வேற மாதிரி இருக்காங்க இந்த ஷோ-ல ரெண்டு பேரும். இவ்வளவு ஜாலியா ஈஸியா கூலான ஒரு காம்போ எங்கயும் கிடைக்காது. 

Rakshan : இவருடைய KPY பாத்துருக்கேன்.ஆனா அதை எல்லாம் தூக்கி சாப்பிடுறமாதிரி இந்த ஷோ இவருக்கு . பெரிய தூண் நீங்க தான் இந்த ஷோ-வுக்கு 

எல்லாருக்கும் மேல , அந்த எடிட்டர் : செம செம செம . எங்க வெட்டணும் எங்க ஒட்டணும் எங்க எந்த பாட்ட போடணும் எங்க எந்த டயலாக் போடணும்னு , வேற மாறி, வேற மாறி.  இந்த ஷோ இந்த அளவுக்கு ரீச் ஆனதுக்கு மெயின் ரீசன் நீங்கதான். 

டைரக்டர் பார்த்திபன் : ஒரு 50 பேர் கொண்ட குழு இப்படியெல்லாம் டாஸ்க் கொடுக்க  யோசிப்பீங்கனு நினைக்குறேன் . (மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் தான் யோசிக்க தோணுமாம்) . எப்படி யோசிக்கிறீங்க இதையெல்லாம் ? 

எப்படி இந்த ஷோ எடுக்குறாங்க? scripted -ஆ , முன்னாடியே சொல்லிடுவாங்களா? எப்படி அந்த நேரத்துல யோசிச்சு சமைக்குறாங்க இப்படி பல கேள்வி வரும். அதுவும் ஒரு எபிசோட்ல இம்மூனிட்டி challenge அப்போவே  பாலா ஷகிலா கிட்ட என்ன மெயின் டிஷ் சமைக்க போறீங்கன்னு கேப்பாரு , ஷகிலா மட்டன்னு சொல்லுவாங்க .
அப்போ இது முன்னாடியே முடிவு பண்ணிடுவாங்களா? அப்போ இவங்க செலக்ட் பண்றமாதிரி காட்டுறாங்களேன்னுலாம் யோசிச்சு இருக்கேன். 
எது எப்படி இருந்தா என்ன ,  நம்மள சந்தோஷமா சிரிக்க வைக்குறாங்களே அது போதும்.

ஆமா இவ்ளோ சொல்றீங்களே யாருங்க  நீங்க -னு எனக்கு ஒரு backgroud டயலாக் போட்டீங்கனா , இந்த ஷோ-வோட பல கோடி ரசிகர்கள்ல நானும் ஒருத்தி .



திங்கள், 18 ஜனவரி, 2021

மணிமுத்தாறு நதியில் வெள்ளப்பெருக்கு

எங்கள் ஊர் விருதாச்சலத்தின் மணிமுத்தாறு நதியில் வெள்ளப்பெருக்கு . இதுலாம் இப்போ அறிய நிகழ்வு ஆகிடுச்சு .