பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 19 அக்டோபர், 2021

மதுரை மீனாட்சி அம்மன் - என் அனுபவம்

2015 -ல கொடைக்கானல் போனோம் . on the way மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகலாம்னு முடிவு பண்ணினோம்.ரொம்ப அழகான கோயில் அற்புதமான சிற்பங்கள் மண்டபங்கள் பார்க்க முடிஞ்சது . அங்க ஒரு tour guide இருந்தாரு அவருடைய உதவியோடு கோவிலை சுத்தி பாத்துகிட்டு இருந்தோம்.


கோயில ஒரு மரம் இருந்தது (பெயர் மறந்துட்டேன் மன்னிக்கணும்). எங்க tour guide அந்த மரத்தைப்பத்தியும் சொல்லிக்கிட்டே வந்தாரு. மத்த கோயில் மாதிரி இல்லாம இந்த மரத்தை Reverse -ல சுத்தணும்னு சொன்னார். அதாவது மத்த கோயில்  மரங்களை வலமிருந்து இடமா சுத்தினா இந்த மரத்தை இடமிருந்து வலமா சுத்தணும்னு சொன்னார்.அறிவியல் ரீதியா பாத்தா அந்த இடத்துல ஈர்ப்பு விசை அப்படிதான் இருக்கு. குழந்தை வேண்டி பிராத்திக்குறவங்க,கல்யாணம் ஆகணும்னு பிராத்திக்குறவங்க  அந்த மரத்துல தொட்டில், வளையல், மச்சள் நிற துணி, சிவப்பு நிற துணி, மஞ்சள் கயிறு இதுலாம் கட்டியிருந்தாங்க .

சரி நாமளும் ஒண்ணு கட்டுவோமேன்னு ஒரு தொட்டில் வாங்கி கட்டினோம் . அப்போ அந்த tour guide சொன்னாரு , என் மாமியார் ரெட்டை தொட்டில் காட்டினாங்க அதே மாதிரி எங்களுக்கு ரெட்டை பிள்ளை பிறந்ததுனு . எனக்கு எப்பவுமே ட்வின்ஸ் வேணும்னு ஒரு ஆசை இருந்தது. ஒரு ஆண்  ஒரு பெண்ணுன்னு ஒரு சமயத்துல ரெண்டு குழந்தைகள் (அப்பறம் free-ஆ இருக்கலாம்னு ஒரு நப்பாசையும் கூட).இப்போத்தானே ஒரு தொட்டில் கட்டினோம் இப்போ சொல்றீங்களேனு நான் இன்னோர் தொட்டில் வாங்கிட்டு வந்து கணவரை வம்பு பண்ணி  கட்ட வச்சேன். கொஞ்ச இடைவெளியில் ரெண்டு தொட்டில் கட்டினேன். ஆனா ட்வின்ஸ் வேணும்னு ஆசைப்பட்டு.

அப்பறம் அத அப்படியே மறந்துட்டேன்.2016-ல எனக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது.2017-ல ரெண்டாவது குழந்தை. ரெண்டு பேருக்கும் இடையில 10 மாசம் வித்தியாசம். ரொம்ப நாளுக்கு அப்பறம் தான் மதுரை கோயிலுக்கு போனதும் அங்க  நான் இப்படி தொட்டில் கட்டினதும் நியாபகம் வந்தது எனக்கு. நான் கடவுளை நம்புறவ. அப்போ தான் என் சின்ன மூளைக்கு உரைத்தது இது கடவுள் அருள் தான்னு . நான் நடக்கும்னு  நம்பிக்கையோட வேண்டினேன். ஆனா ஒரு சின்ன இடைவெளி விட்டு தொட்டில் கட்டினேன் அதே போல ஒரு சின்ன இடைவெளி விட்டு ரெண்டாவது குழந்தை . 

அதை நான் உணர்ந்ததுல இருந்து , தெரிஞ்சவங்க தெறியாதவங்கனு யாரு குழந்தை வரம் கேட்டு மனசு கஷ்டப்பட்டாலும் ,கோயிலுக்கு போனாலும் ,  அவங்களுக்கு என்னுடைய அனுபவத்தை சொல்லி மதுரை மீனாட்சி அம்மனை வேண்ட சொல்றேன். கடவுளை நம்புற நான் இதைஅந்த மதுரை மீனாட்சி அம்மனின்  அருள்னு சொல்லாம வேற என்ன சொல்ல . 


(இது மதத்தை திணிக்கவோ அல்லது  கடவுளை வணங்குங்கன்னு சொல்லவோ அல்லது இந்த கடவுளை வணங்குங்கன்னு சொல்லவோ நான் எழுதல. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்குறேன்.) 


PC : Wikipedia

வியாழன், 14 அக்டோபர், 2021

மாற்றத்தை விதைப்போம்.

 


சமீபத்துல என் கணவருடைய பாட்டி கீழவிழுந்து , அவங்களுக்கு கை முறிவு,இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுடுச்சு . இந்தியாவுல பகல்னா அமெரிக்காவுல தான் நைட் ஆச்சே. நடுராத்திரி போன் கால் வந்தது . அவங்கள முதல்ல எங்க சொந்த ஊரான விருதாச்சலத்துல இருந்து சென்னைக்கு கூப்பிட்டு வந்தாங்க . 

அவங்க சென்னை வந்து சேருறதுக்குள்ள ,என் கணவர் எந்த ஹாஸ்பிடல்-ல சேர்க்க  முடியும் எவ்வளவு செலவு ஆகும்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தார் போன்ல .

கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரத்துக்கும் மேல பல இடத்துல விசாரிச்சு ஹாஸ்பிடல்  முடிவு பண்ணினாங்க. அதுக்கும்  அவங்க சென்னை வந்து சேருறதுக்கும்  சரியா இருந்தது. சென்னைல ஒரு நல்ல பெரிய ஹாஸ்பிடல் அது. எலும்பு முறிவுக்கான சிறப்பு மருத்துவமனை அது . அந்த  ஹாஸ்பிடல்ல டாக்டர் பாட்டிய செக் பண்ணிட்டு ஆப்ரேஷன் பண்ணனும். கைல எலும்பு முறிவுக்கு பிளேட்டு  வைக்கணும்,இடுப்பு எலும்பு முறிவுக்கு  ராடு  வைக்கணும்னு சொல்லிட்டார். அதுக்கு ஒரு 3 லட்சம் செலவாகும்னு சொல்லிட்டார்.சரினும் எங்க சைடுல இருந்து சொல்லியாச்சு. 

ஒரு அரை மணிநேரத்துக்கு அப்பறம் ,எவ்வளவு ஆகும்னு  இன்னும் நிறையா ஹாஸ்பிடல்ல,  ஆன்லைன்ல X-Ray காட்டி விசாரிச்சப்போ ஒண்ணேமுக்கால்ல இருந்து ரெண்டு லச்சம் ஆகும்னு சொன்னாங்க. ஆனா பாட்டியை சேர்த்த ஹோச்பிடல்ல டாக்டர் 3 லட்சம்னு சொல்லிட்டார். இன்சூரன்ஸ் இல்ல பாட்டி ஹெல்த்க்கு . கைல அவ்வளவு காசு இல்ல என்ன பண்றதுனு தெரியல. வீட்ல யாராவது அமெரிக்காவுல இருக்காங்கனு தெறிஞ்சா பில் எவ்வளவு முடியுமோ அவ்வ்வளவு ஏத்துவாங்க. அதனாலயே வெளிநாட்டுல வேல செய்றாங்கன்னு சொல்லவேண்டாம்னு சொல்லிட்டோம். 

[அதென்னவோ தெரியல வெளிநாட்டுல வேல செஞ்சா அப்படியே ஊரையே வாங்குற அளவுக்கு காசு இருக்கும்னு நினச்சுக்குறாங்க!! நம்ம ஊரு மாதிரியே தான்,இங்க இருக்குற ஒரு ஒரு இந்தியர்களும் எவ்வளவு  கடுமையா உழைக்குறாங்க. இவ்வளவு சம்பளம் தருவோம்னு சொல்லி அனுப்பிவைக்குறாங்க இங்க, ஆனா கிடைக்குறது என்னவோ சொர்ப்பமாத்தான் இருக்கு .காலைல ஆஃபீஸ் போனா நைட் தான் விடுறாங்க மாடு மாதிரி உழைக்குறாங்க . இந்த கொரோனா காலத்துல வீட்ல இருந்தே வேலை செய்யலாம்னு சொன்னாலும்  ஆஃபீஸ்யே போய்  தொலையலாம்னு அளவுக்கு, அதே அளவுக்கு சொல்லப் போனா அதை விட அதிக அளவுக்கு வேலை செய்யுறாங்க. வீடு வாங்கணும்,வீட்டு கடனை அடைக்கணும் , அப்பாவோட அம்மாவோட  ஹாஸ்பிடல் செலவை பாக்கணும் , அக்கா தங்கச்சி தம்பியை படிக்க வைக்கணும் கல்யாணம் பண்ணித்தரனும் இப்படி எவ்வளவோ வேலைகளையும் பொறுப்புகளையும் வச்சுக்கிட்டு வேலைபாக்குறாங்க .அதுலாம் தெரியாது மத்தவங்களுக்கு . வெளிநாட்டுல வேலைசெய்றாங்கன்னு மட்டும் தான் தெரியும் . சரி அத விடுங்க ! ]

மறுபடியும் போய் கேளுங்கன்னு சொன்னதும்,அவங்களும் போயி கேட்டாங்க ஹாஸ்பிடல்ல  ,  ரெண்டு லச்சம்னா அப்போ முடியுமான்னு கேக்குறாங்க. மூணு லச்சத்துல இருந்து ரெண்டு லச்சம் வந்துட்டாங்க. அடப்பாவிகளா அப்போ ஒரு லச்சம்ங்குறது எவ்வளவு காசு தெரியுமா ? எப்படி ஒரு நோயாளிக்கிட்ட இப்படி அதிகமா வசூலிக்க மனசு வருது. அப்போ,இதுதான்னு ஒரு fixed amount இல்லயா . சொல்லி பாப்போம்னு சொல்றீங்களா. 

மருத்துவம்ங்குறது ஒரு சேவைன்னு மாறி பணம் இருந்தா நல்ல மருத்துவம் தரமான மருத்துவம்ங்குற  காலத்துல வாழுறோம் நாம். புது புதுசா நோய் வருது , நம்ம நாட்டுல இப்போ இந்த கொரானாவுக்கு தடுப்பூசி கூட காசு குடுத்துதானே போடுறோம். தைரியமா நம்பிக்கையா அந்த தடுப்பூசியை போட்டுக்கணும்னா தனியார் மருத்துவமனைல போட்டுக்கிட்டாதான் safe -னு தானே போட்டுக்கிட்டோம். நம்ம நிலைமை இப்படி தானே இருக்கு .  ஆமா நாடே தனியார் வசம் தான் போகப்போகுது .அத பத்தி இப்போ என்ன பேசிக்கிட்டு.நம்ம விஷயத்துக்கு வருவோம்.

அப்போ காசுக்குத்தான் மருத்துவம் ,சேவைக்கு மருத்துவம் இல்லைனு மருத்துவர்களுக்கு எண்ணம் எப்படி வருது? எவ்வளவோ காசு குடுத்து , செலவு பண்ணி மருத்துவம் படிக்குறதுனாலதான் அவங்களுக்கு இந்த எண்ணம் வருது . போட்ட காச எடுக்கணும்  , சம்பாதிக்கணும்னு மட்டும்தான் நினைக்கிறாங்க. சம்பாதிக்க எத்தனையோ படிப்புகள் வேலைகள் இருக்கு .கடவுளுக்கு  சமமா மதிக்கிற மருத்துவம் ஏன்? அப்போ தப்பு எங்க இருந்து ஆரம்பிக்குது ?சரியான படிப்பு நாம குடுக்கல  .தரமான படிப்பு வேற சரியான படிப்பு வேற.Pre -KG -ல இருந்தே  ஆயிரக்கணக்குல லச்சக்கணக்குல செலவு செஞ்சு படிக்குறதுனால அவங்களுக்கு படிப்பு காசா மட்டும் தான் தெரியுது. காசு சம்பாதிக்க்கணும்னு மட்டும் தான் எண்ணம் வருது . தரமான படிப்பை இலவசமா இல்ல ரொம்ப குறைஞ்ச  கட்டணத்துக்கு பிள்ளைகளுக்கு கொடுத்தா அவர்களுகையை எண்ணம்,வளக்கப்படுற விதம் ,ஒரு விஷயம் மேல அவங்க பாக்குற பார்வை வேற மாதிரி இருக்கும். பிள்ளைங்களுக்கு படிப்பை நல்ல விதத்துல நல்ல முறையில குடுத்தோம்னா வாழ்க்கை நல்லா இருக்கும் வாழ்க்கை நல்லா இருந்தா நாடு  நல்லா இருக்கும். காலம் மாறும் கண்டிப்பா .  அந்த மாறின காலத்துல நாம இருக்க மாட்டோம் ஆனா நம் தலைமுறை இருக்கும். மாற்றத்தை விதைப்போம்.