நமக்கு ஒரு dream job -னு இருக்கும் அப்படி ஒரு job -க்கு போகணும்னு நினச்சா அதுலாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வராதுனு சொல்லி அவங்க இஷ்டப்படி வேலைக்கு போக வைக்குறாங்க.
சரி செய்ற வேலைய interest-ஆ வேலை செஞ்சா , சீக்கிரம் கல்யாணம் பண்ணு வயசாகுதுனு சொல்றாங்க. கல்யாணம் பண்ணினா சீக்கிரம் கொழந்தைய பெத்துக்கோங்க வயசாகுதுனு சொல்றாங்க கொழந்தைய பெத்ததுக்கு அப்பறம் வேலைக்கு போகலாம்னா சின்ன கொழந்த ஏங்கிடும் கொஞ்சநாள் ஆகட்டுமேனு சொல்றாங்க சரிதானு கொஞ்சநாள் போனா அடுத்த கொழந்த பொறந்துடுது.அப்பறம் அந்த கொழந்தைக்காக 3 ,4 வருஷம் போக்கிடுறோம்.கடைசியா ஒரு வழியா வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணினா நம்ம dream job -க்கு வயசு limit ஆகிடுது ,சரி செஞ்ச வேலையாவது மறுபடியும் start பண்ணுவோம்னு தேடினா long gap இருக்கே அந்த experience இருக்கா இந்த experience இருக்கானு கேக்குறாங்க.
8 வருஷம் break விட்டு வேலைய தேடிப் பாக்குறவங்களுக்குத்தான் தெரியும் அதோட கஷ்டம். House wife/Home maker -னா ஒன்னும் அவ்வளவு easy வேலை இல்லைங்க. ஒரு ஒரு பொண்ணும் தன்னோட கனவு ஆசை எல்லாம் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு , குடும்பத்துக்காக தன்னோட வாழ்க்கைல பல வருஷங்களை கழிக்குறா .
குடும்பத்துல இருக்குறவங்க நல்லா சாப்பிட, அந்த வீடு அழகா இருக்க, சுத்தமா இருக்க, organized -ஆ இருக்க,Neat -ஆ இருக்க , குடும்பத்தோட பொருளாதாரத்துல ஓரளவுக்காவது உயர்ந்த நிலையில இருக்க ஒரு ஒரு குடும்ப தலைவியும்தான் கரணம். எத்தனையோ குடும்ப தலைவிகள் சிறுக சிறுக சேத்து வச்சு பிள்ளைங்க படிப்புக்கோ, கடனை அடைக்கவோ, இல்ல பொண்ணுங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா நகை சேர்த்து வைக்கவோ இல்ல வீடு வாங்கவோ இல்ல வாடகை குடுக்கவோன்னு சம்பாதிக்கிற பெண்களும் சரி இல்ல House wife/Home maker -சரி உழைச்சுக்கிட்டே தான் இருக்காங்க.
ஒரு ஆணோ பெண்ணோ வேலைக்குனு போய் உழைக்குறதுக்கு எந்த வகையிலும் குறைவில்லாம House wife/Home maker-ம் உழைக்குறாங்க. அத முதல்ல எல்லோரும் புரிஞ்சுக்கணும்.
கல்யாணம் குழந்தைனு ஆனதுக்கு அப்பறமும் உன்னோட கனவை துரத்தி போ -னு பொண்ணு பின்னாடி நின்னு தட்டி குடுத்து ஊக்கப்படுத்த ,எனக்கு கிடைச்ச கணவன் மாதிரி ஒரு சில பேர் மட்டும் தான் இருக்காங்க. யாருமே இல்லனு சொல்லமுடியாது , பொருளாதார தேவைக்காக குடும்பம் குழந்தைனு ஆனதுக்கு அப்பறம் வேலைக்கு பொண்ணுங்க போறாங்கதான் /வேலைக்கு போக வற்புறுத்தப்படுறாங்க (/அவங்க நிலைமை அப்படி இருக்கு )இல்லைனு சொல்லல. ஆனா அவங்களுடைய dream job என்ன? என்ன செய்யணும்னு ஆசைப்பட்டாங்க அதைதான் செய்யுறாங்களானு பாத்தா அதை செய்யுறவங்க ரொம்பவே குறைவானவங்கதான்.
என்ன கேட்டா காலைல 6 மணிக்கு எந்திரிச்சு குளிச்சுட்டு அவசரமா சாமிய கும்பிட்டு கிச்சன் பக்கம் வந்து இட்லி ஊத்தி சட்னி அரைச்சு முடிச்ச கையோட lunch செய்ய ஆரம்பிச்சு 7 மணி போல வேகமா பிள்ளைங்களை எழுப்பி அரைதூக்கத்துல இருக்குற பிள்ளைங்களை பல்லு தேய்க்கவச்சு அவங்களுக்கு குளிப்பாட்டி 7.30 மணிக்கு புருஷனை எழுப்பி விட்டு office -க்கு கிளம்ப சொல்லி ,பிள்ளைங்களுக்கு uniform போட்டுவிட்டு தலையை சீவி 8 மணிக்கு breakfast கொடுத்து tiffin box -ல லஞ்ச் வச்சு பிள்ளைங்கள ஸ்கூல் பஸ் ஏத்திவிட்டுட்டு வீட்டுக்கு வந்தா 8.30 வேலைக்கு ரெடியாகி வந்து நிக்குற புருஷனுக்கு breakfast வச்சு , அன்னைக்கு செஞ்ச சட்டினிமாதிரி டேஸ்ட் இன்னைக்கு இல்லனு கொடுக்குற கமெண்டை கடுப்பு ஆனாலும் அடுத்ததரம் செஞ்சுடலாம்ங்கனு புன்னகையோடு சொல்லிட்டு புருஷனுக்கு லஞ்ச் box -ல லஞ்ச் கட்டி கொடுத்துட்டு அவரையும் ஆபீஸ்க்கு வழியனுப்பி வச்சுட்டு அப்பாடானானு 9.30க்கு உக்காந்து நியூஸ் பாத்துகிட்டே 4 இட்லியை வாயில போட்டுக்கிட்டு 10 மணி போல room க்கு போய் போர்வை எல்லாம் மடிச்சு வச்சுட்டு பிள்ளைங்க ரூம்-ஐ சுத்தப்படுத்திட்டு 10.30 மணிக்கு மறுபடியும் கிச்சன் -க்கு வந்து பாத்திரத்தை எல்லாம் தேச்சு வச்சுட்டு 11.30 போல வீட்டை பெருக்கி வீட்டை துடைச்சு ,துடைச்சதை அலசி காயவச்சுட்டு 12.15 போல அப்பாவுக்கும் அம்மாவுக்கும் phone பண்ணி பேசிட்டு 1 மணி போல சாப்பிட்டு ஒரு ,ஒரு மணி நேரம் தனக்காகன நேரமாக்கிக்கிட்டு 2 மணி போல காஞ்ச துணி எல்லாம் எடுத்து மடிச்சு iron பண்ணி வச்சுட்டு 3 மணிக்கு பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வருவாங்க அவங்கள பிக்கப் பண்ணிட்டு , பிள்ளைங்க வந்ததும் அவங்கள டிரஸ் மாத்த வச்சு சாப்பிட ஏதாவது நொறுக்குத்தீனி குடுத்துட்டு அவங்கள tuition பாட்டு கிளாஸ் டான்ஸ் கிளாஸ் keyboard கிளாஸ்-னு ஏதவது கிளாஸ்க்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு(online கிளாஸ் அதைவிட மோசம் , பக்கத்துலயே உக்காந்து சரியா கவனிக்குறாங்களானு பாத்துகிட்டே இருக்கணும் வேற) வீட்டுக்கு வந்து evening snacks எதாச்சம் செஞ்சு வச்சுட்டு மறுபடியும் பிள்ளைங்களை போய் கிளாஸ்-ல இருந்து கூப்டுகிட்டு வந்து பிள்ளைங்களுக்கு ஸ்னாக்ஸ் கொடுத்துட்டு , coffee இல்ல டீ போட்டு குடுச்சுட்டு பிள்ளைங்களுக்கு பூஸ்ட் போட்டு குடுத்துட்டு பிள்ளைங்களை ஹோம் ஒர்க் பண்ண வச்சு அடுத்தநாளுக்கு தேவயானதையெல்லாம் எடுத்து வச்சுட்டு ஆபீஸ்ல இருந்து வர புருஷனுக்கு காபி போட்டு கொடுத்துட்டு நைட் dinner ரெடி பண்ணிகிட்டே அடுத்த நாள் காலைல சமைக்க தேவையான காய் எல்லாம் வெட்டி boxல போட்டு பிரிட்ஜ்ல வச்சுட்டு , நைட் dinner -ஐ எல்லாருக்கும் குடுத்துட்டு எல்லாம் சாப்பிட்டதும் பாத்திரத்தை கழுவி வச்சுட்டு அடுப்படியை சுத்தம் பண்ணிட்டு போய் படுக்க நைட் 10 மணி ஆகும். மறுபடியும் அடுத்த நாள் அதே routine ...என்ன கேட்டா,Home maker-job விட கடினமான job இல்லைன்னுதான் சொல்லுவேன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக