ரஷ்யா உக்ரைன் பிரச்சனையை ஓரங்கட்டிவிட்டுட்டு, டாப் 1-ல சமீபத்தில கேள்விப்படுற,படிக்குற,பாக்குற ,விவாதிக்குற விஷயம் Will Smith , Chirs Rock -ஐ ஆஸ்கர் மேடையில் அறைஞ்சதுதான் .
வில் ஸ்மித் -ன் மனைவி ஜடா ஸ்மித் , அலோபீசியா அப்படினுங்குற ஒரு விஷயத்துனால பாதிக்கப்பட்டு முடிகளை இழந்துருக்காங்க. அதாவது இந்த அலோபீசியா எதனால ஏற்படுத்து அப்படீனா , உடல்ல நோய் எதிர்ப்பு சத்தி குறைஞ்சு அது முடிகள் வளரத்துக்கான ஃபாலிக்குளை பாதிச்சு முடிகளை உதிரவச்சுடும்.அதனால தலையில அங்க அங்க சொட்டை ஏற்படும். இந்த பாதிப்பாலதான் ஜடா ஸ்மித் தலையை மொட்டை அடிச்சுக்கிட்டாங்க.
இந்த உடல் நல குறைவை வச்சு ஆஸ்கர் மேடையில தொகுப்பாளர் Chirs Rock ,ஜடா ஸ்மித்ஐ கிண்டல் பண்ணினதும் அதை பொறுத்துக்க முடியாத வில் ஸ்மித் மேடையேறி தொகுப்பாளர் Chirs Rock-ஐ அறைஞ்சிட்டாரு ,அதுமட்டும் இல்லாம ரொம்ப கோவத்தோடு Chirs Rock -ஐ பார்த்து இன்னோர் தரம் என் மனைவியின் பேர் உன்வாயில இருந்து வரக்கூடாதுன்னு திட்டிருக்காரு.
மனைவி அப்படீனால ஒரு கேலிப்பொருளா மத்தவங்களுக்கு முன்னாடி, அதுவும் குடும்பம் சொந்தம் முக்கியமா friends -முன்னாடி மனைவியை, மனைவியின் செயலை , மனைவியின் பேச்சை கேலி கிண்டல் செஞ்சு, அதன் மூலமா மத்தவங்களை சிரிக்க வச்சு தானும் சிரிச்சு (சில நேரம் கொட்ட முடியாததை எல்லாம் மத்தவங்க முன்னாடி இப்படி கிண்டலா கொட்டி திருப்தி அடஞ்சுக்குற) தெரிஞ்சோ தெரியாமலோ மனைவி அப்படிங்குற தன்னுடைய சரி பாதியை கஷ்டப்படுத்துற எத்தனையோ கணவன்களை பாக்கும் போது நினைக்கும் போது வில் ஸ்மித் -ன் செயல் , இப்படியும் இருக்காங்க அப்படினு நினைக்க, பெருமை பட, சந்தோஷ பட தோணுதுதான் . அது முழுக்க முழுக்க அளவுகடந்த காதலின் வெளிப்பாடு அன்பின் வெளிப்பாடு . ஒத்துக்கலாம் . புரிஞ்சுக்கலாம்.
ஆனா நாகரீகம் அதுவும் முக்கியமா மேடை நாகரீகம் அப்படீன்னு ஒன்னு இருக்கே.நாம எப்படி இருந்தாலும் என்ன செஞ்சாலும் என்ன உடை அணிந்தாலும் நம்ம கிண்டல் கேலி செய்யுறதுக்கு ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்யுது.சிலநேரம் அது அவங்களின் அறியாமைனு சொல்லிக்கலாம் ,சிலநேரம் பொறாமைனு சொல்லிக்கலாம், தன்னால முடியல இவங்க செய்யுறாங்கலேன்னு ஒரு இயலாமை அப்படீன்னு கூட சொல்லிக்கலாம். இந்த மாதிரி சமயத்துல உலகமே பாத்துகிட்டு இருக்குற ஒரு மேடையில வில் கொஞ்சம் கோவத்தை கன்ட்ரோல் பண்ணிருக்கலாம். மேடைக்கு பின்னாடி கண்டிச்சுருக்கலாம். இல்ல அவரை அறையுறதைவிட்டுட்டு தன்னுடைய கோபத்தையும் கண்டனத்தையும் தெரிவிச்சு இருக்கலாம்.
ஒரு சாதாரண மனிதன் இப்படி நடந்துகிட்டு இருந்தாலே அது தவறு .பலகோடி பேர் இவரை ஒரு ரோல் மாடலா நினைச்சுகிட்டு இருக்குற இடத்துல வில் இருக்காரு.அப்படி பட்ட ஒரு மனிதன் தன்னைப்போல வாழ்க்கைல முன்னேற நினைக்கிற மத்தவங்களுக்கு ஒரு தவறான உதாரணமா ஆகிடக்கூடாது தன்னுடைய நடவடிக்கைகளால. ஒரு மனுஷன் தன் வாழ்க்கைல ஒரு நல்ல position -க்கு வரதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்படணும் ஆனா அந்த உச்சியில இருந்து கீழிறங்க ஒரு கஷ்டமும் படவேணாம் , ஒருநிமிஷம் போதும் அப்படினு சொல்லுறதுக்கு சமீபத்திய உதாரணம் தான் WILL SMITH .
[என்ன வில் -இப்ப்படி பண்ணிட்டீங்களே வில் . இப்பதான் உங்க புத்தகத்தை ரசிச்சு அனுபவிச்சு படிச்சுக்கிட்டு இருந்தா இப்படி.....ஹ்ம்ம் அப்போ உங்க புக்கோட அடுத்த பார்ட்ல இதப்பத்தி எழுதுவீங்கன்னு எதிர்பாக்கலாம்.]