ஏன்பா டைரக்டர்களா , மாஸ் ஹீரோக்களை வச்சு படம் எடுத்தா தான் நீங்க பெரிய டைரக்டர்-னு உங்களுக்கு நீங்களே ஏங்க ஒரு வட்டத்தை போட்டுக்கிறீங்க?
டைரக்டர்-களுக்கும் கதைகளுக்கும் தான் நடிகர்கள் நடிக்கனும். நடிகர்களுக்காக கதைகளை உருவாக்காதீங்க.கதைகளுக்காக நடிகர்களை நடிக்கவையுங்க.
எப்பவுமே கதைதான் ஹீரோ-வா இருக்கனும். சில டைரக்டர் -கள் இருக்காங்க இன்னும் கதைக்காகத்தான் டைரக்டர் பண்ணுவேன் ஹீரோவுக்காக இல்லைனு.அது மாதிரி எல்லாருமே இருந்தா நல்லா இருக்கும்.
future -ல உங்க ஜெனெரேஷன் உங்க படங்களை பாத்து பாராட்டணும் வியக்கனும் , உங்க பிள்ளைங்களே வளந்ததுக்கு அப்பறம் படத்தை பாத்து கிண்டலோ நக்கலோ பண்றமாதிரி இருக்க கூடாது.
நல்ல கதை இருந்தா போதும்னு மக்கள் நாங்க எவ்ளவோ மாறுறோம் ஆனா நீங்க மாறமாட்ரீங்களே .