நம்ம ஊருல போலீஸ் அதிகாரீங்க ஏன் பொது மக்களை ஒரு மரியாதையோட பேசமாட்றாங்க அழைக்க மாட்றாங்க? இது பொதுவா நாம எல்ல இடத்துலையுமே பாக்கலாம். ஒரு டிராபிக் -ல நின்னாக்கூட ஒரு மனுஷனை நகர சொல்லனும்னா அந்த மனுஷனுக்கு எவ்வளவு வயசா இருந்தாலும் யோவ் தள்ளி நில்லு அப்படீன்னு ஒருமைல தான் சொல்றாங்க. ஏன் இப்படி ஒரு பழக்கம் வந்தது?
நம்ம அப்பா மேல நமக்கு மரியாதை இருக்கும். நம்ம அண்ணன் தம்பி எப்படி பட்டவங்க , எப்படி குடும்பத்துக்காக உழைக்குறவங்கனு நமக்கு தெரியும். ஒரு டிராபிக்-ல நிக்கும்போது இப்படி நமக்கு மறியாதைக்குறியவங்களை ஒருமையில ஒரு போலீஸ் அதிகாரி பேசினா நமக்கு இயல்பாவே கோவம் வரும்தானே.அந்த அதிகாரி அப்படி பேசணும்னு பேசி இருக்கக்கூட மாட்டார் , ஆனா அது அவருக்கு பழக்கம் ஆகி இருக்கும்.
20 வயசு பையன 40 வயசு போலீஸ் அதிகாரி ஒருமையில் பேசினா ..அத கூட சரினு எப்படி சொல்லமுடியும்.அப்போ 60 வயசு பெரியவர் 40 வயசு போலீஸ் அதிகாரியை 'யோவ் நகரு' அப்படீன்னு சொல்லலாமா?! ஒரு பப்ளிக் எப்படி ஒரு காவல் அதிகாரியை அவருடைய பதவிக்கும் உடைக்கும் அவருடைய வயதுக்கும் மரியாதை கொடுத்து சார் -னு கூப்பிடுறோம். ஆனா அவங்க எல்லாரையும் சார்-னு சொல்ல வேண்டாம்.சொல்லவே வேண்டாம் ஆனா , தம்பி நகருனு சொல்லலாம் ,வயசு அதிகமானவங்கள சார்-னு சொல்லலாம்.தப்பில்லை.
ஆனா எல்லாரையும் 'ஏய் இங்கவா', 'முன்னாடி நகரு' , 'இங்க நீக்காத', 'போயிட்டே இரு' , இப்படி ஒருமையில் தான் சொல்றாங்க. எங்க இருந்து இவங்களுக்கு இந்த பழக்கம் வந்தது?யோசிச்சுப்பாத்தா இந்த அதிகாரிகளை அவங்களுடைய மேலதிகாரி எப்படி நடத்துறாங்களோ அப்படி தான் அவங்க தனக்கு கீழ இருக்குறவங்களை நடத்துறாங்க. சரி, எங்க இருந்து ஆரம்பிக்குது இது? வேற எங்க ?! தலைவர்கள் கிட்ட இருந்துதான். பெரிய பதவியில் இருக்குற தலைவர்கள் தனக்கு கீழ பதவியில் இருக்குறவங்களை ஒருமையில பேசுறாங்க, அத அவங்க தனக்கு கீழ இருக்குறவங்ககிட்ட பயன் படுத்துறாங்க. இப்படியே ஒரு ஒரு படியா கீழ இறங்கிவந்து கடைசில பொதுமக்கள் மேல காட்டுறாங்க. இது இங்க மட்டும் இல்ல எல்லா துறைகள்லையும் இருக்கு.ஆனா ,மற்ற துறைகளில் அந்த துறைகளுக்குளேயே இருக்கும் , போலீஸ்ங்குறதால அவங்க பொது மக்களை அப்படி அழைக்குறாங்க. இது ஒரு இடத்துல மாத்தப்படவேண்டிய விஷயம் இல்ல . ஹயாராரிக்கி படி தலைவர்கள்கிட்ட இருந்து மாத்தவேண்டிய விஷயம்.
நடக்குமா? நடக்கணும் . நாம இதை மாத்தினாதான் அடுத்த தலைமுறை மாறும். இல்லைனா அடுத்த தலைமுறைக்கும் இந்த பழக்கம் மாறாது. மத்தவங்கள மரியாதையா கூப்பிடணும்னு தோணாது. நம்மகிட்ட இருந்து இப்பவே நாம இதை ஆரம்பிக்கணும்.