பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

கொஞ்சம் நல்லதும் செய்வோமே

இப்போலாம் பிறந்த நாள்,கல்யாண நாள்-நு எதுக்கு எடுத்தாலும் பார்ட்டி அது இதுனு வெட்டியா செலவு செஞ்சு பெருமை பட்டுக்குறோம்.அதுக்கு பதிலா எதாவது டிரஸ்ட்-க்கு donation குடுக்கலாமே அந்த பணத்தை . காலை அல்லது மாலை அல்லது இரவுனு  எதாவது ஒரு வேலைக்காவது trust-ல் இருக்கும் எல்லாருக்கும் உணவு வழங்கலாமே.

அதுல நமக்கு கிடைக்குற சந்தோஷமும் நிம்மதியும் எவ்ளோ வித்தியாசமானதுனு ஒரு தரம் தான் அனுபவிச்சு பாப்போமே.ஒருதரம் பாத்தா போதும் அடுத்ததரம் நமக்கே இந்த உணர்வு தானா வந்துடும்.

அப்போ அவங்க முகத்துல நாம பாக்குற சந்தோஷத்தையும்,மகிழ்ச்சியையும் அளவிட முடியாதது.இந்த அவசர உலகத்துல நாம அவங்ககூட அடிக்கடி சில மணி நேரங்கள் தான் இருக்க முடியலை atleast இதுமாதிரி சந்தோஷமான தருணங்களிலாவது இருப்போமே.இதுமாதிரி தீபாவளி,கிறிஸ்தமஸ்,ரம்ஜான்,பிறந்த நாள்,கல்யாண நாள்,நினைவு நாள்-னு இது போன்ற சமயத்துலயாவது செய்வோமே..அதுமட்டும் இல்லாம படிக்க முடியாதவங்களுக்கு,school / college fees கட்ட முடியாதவங்களுக்கு உதவலாமே..முழு தொகையையும் உதவ முடியலை நாளும் கூட உதவுரவங்களுக்கு உடன் சேர்ந்தாவது உதவலாமே....

அதுவும் இப்போலாம் weekend ஆனா party அது இது-னு சமபாரிக்குற காசை வெட்டியா செலவு பண்றதுக்கு atleast அதுல ஒரு part of amount -யாவது இதுபோன்ற காரியங்களுக்கு செய்வோமே.

நான் செஞ்சுகிட்டு இருக்கேன்..இத படிக்குற நீங்களும் செய்யணும் னு ஆசைபடறேன்..செய்வீன்கனும் நம்புறேன்... நன்றி.

1 கருத்து:

  1. பெயரில்லா25 அக்டோபர், 2014

    நல்ல விசயம்,நல்ல சிந்தனை.தொடரட்டும் உங்கள் பனி

    பதிலளிநீக்கு